Apr 16, 2009

மனிதநேய மக்கள் கட்சி - என்ன செய்ய வேண்டும்?

மனிதநேய மக்கள் கட்சி ‍ என்ன செய்ய வேண்டும் இனி?

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் தனக்கு கொடுக்கப்பட்ட வக்ஃப் வாரிய பணியை செவ்வனே செய்தது. கோடிக்கணக்கான சொத்துக்கள் பறிமுதல் செய்தது மிகச்சிறந்த பணி எனலாம். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி தொடங்கப்பட்டு, முதல் தேர்தலையும் சந்திக்கிறது. சவாலான தேர்தல் தான். திமுக கூட்டணியில் இருந்திருந்தால் இலகுவாக பதவி / அதிக ஓட்டுகள் கிடைத்திருக்கும். வெளியே வந்தாகிவிட்டது.

தனித்து போட்டி என்ற முடிவு தான் மனிதநேய மக்கள் கட்சிக்கு பெரும்பான்மை முஸ்லீம்களிடமும் மாற்று அரசியலை நோக்கி இருப்பவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது. தமிழின தலைவனைக்காட்டி கையை பிடித்து கெஞ்சிய போதும் விட்டுக்குடுக்காத மனிதநேய மக்கள் கட்சி தலைவர்களின் (கொடுத்தால் ஒன்றுக்கு மேற்மட்ட தொகுதி) உறுதியை பாராட்டவேண்டும். இந்த பிப்ர‌வ‌ரியில் உத‌ய‌மான‌ க‌ட்சி குறுகிய‌ கால‌த்தில் சமூக ஜனநாயக முன்னணிக்கு த‌லைமை தாங்கும் நிலைக்கு உய‌ர்ந்துள்ள‌து பிர‌மிக்க‌வைக்கிற‌து.

தி மு க‌ கூட்ட‌ணியை விட்டு பிரிந்த‌த‌ற்கு த‌ன்னிலை விள‌க்க‌ம் கொடுத்துள்ளார்க‌ள். http://www.tmmk.in/news/999356.htm

(ஒரு தொகுதி வாங்கி தி மு க கூட்டணியில் சேர்ந்திருந்தாலும் த‌ன்னிலை விள‌க்கம் கொடுத்திருப்பார்கள் என்பது வேறு விடயம்) காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்,

வெகுசன அரசியலில் வெற்றிபெற இப்பொழுது மனிதநேய மக்கள் கட்சி செய்ய‌வேண்டியது:

1. வாக்கு அர‌சிய‌ல் செய்ய‌ வெண்டும்

2. முய‌லுக்கு மூன்று காலென்றிருக்கும் பி.ஜைனுலாபுதீனுட‌ன் ச‌மாதான‌ பேச்சு ந‌டத்துவதன் மூலம் மனிதநேய மக்கள் கட்சிக்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஆத‌ர‌வு திர‌ட்ட‌ வேண்டும். குறைந்த‌ப‌ட்ச‌ம் மனிதநேய மக்கள் கட்சிக்கு எதிராய் ப‌ணியாற்றுவ‌திலிருந்து அவ‌ர்க‌ளை வில‌கியிருக்க‌ச்சொல்ல‌லாம். பி ஜெ வுக்கென‌ ஒரு ர‌சிக‌ர் கூட்டம் (வாய்ச்சொல் வீரர்கள்) இருப்ப‌து ம‌றுக்க‌ முடியாதது.

3. ஜமாத்தே இஸ்லாமியுட‌னும் பேச்சு வார்த்தை ந‌ட‌த்த‌லாம். அவ‌ர்களுக்கு இராமநாதபுர சுற்று வட்டார மற்றும் பரவலான தென் மாவட்ட கிராமங்களில் வெளியில் திரியாத‌ மக்கள் செல்வாக்கு உள்ளது. 67 வருட பழமை வாய்ந்த ஜமாத்தே இஸ்லாமியும் த‌னிக்க‌ட்சி தொட‌ங்கும் நிலையில் இருப்ப‌தால், ஒரு முன்னோட்ட‌மாக‌ ஆத‌ர‌வு த‌ர‌ வாய்ப்பு அதிக‌ம். கேரளாவிலும் 18 தொகுதிகளில் LDF க்கு ஆதரவு, ஆந்திராவில் 37 நாடாளுமன்ற மற்றும் 267 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரசுக்கும் குக்க‌ட்ப‌ல்லியில் லோக் ச‌ட்டா பார்ட்டி வேட்பாள‌ர் ஜெய‌ப்ர‌காஷ் நாராய‌ன‌னுக்கும் ஜமாத்தே இஸ்லாமி அதிகார‌ பூர்வ‌ ஆத‌ர‌வு தெரிவித்துள்ள‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

4. S.M.பாக்கர். தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திலிருந்து பிரிந்து வந்த இவர், இந்திய தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளார். இங்கு ஆள் பலம் குறைவு என்றாலும், ஊடக பலம் கிட்டும்.

5. ஜமாத்துகளில் தனது நிலைப்பாட்டை எடுத்து கூறுதல் மூலம், வேறு யாருக்கும் கிடைத்திராத மிகச்சிறந்த பிரச்சாரமான வெள்ளி மேடையை பயன்படுத்தலாம்.

இதெல்லாவற்றையும் விட களப்பணி மிக முக்கியம். களப்பணிக்கு சற்றும் களைத்தவர்கள் அல்லர் த மு மு க தொண்டர்கள்!!! இந்த சொல்லை நிரூபிக்க அவர்களுக்கு நேரம் வந்துவிட்டது.

என்ன செய்யப்போகிறது மனிதநேய மக்கள் கட்சி? பொறுத்திருந்து பார்ப்போம்!!!

தொகுதிவாரியான அலசல் அடுத்த பதிவில் எழுதப்படலாம்... உங்கள் ஆதரவு இதற்கிருந்தால்...

ஒரு நிமிட வினாவுக்கான விடை

நேற்றைய ஒரு நிமிட வினாவுக்கான விடை
1. இந்த வரிசையை நிரப்புக;
தி செ பு வி __ __ __
தி செ பு வி வெ ச ஞா
2. ஒரே எழுத்தில் இந்த‌ சூத்திர‌த்தை ச‌ரியாக்குக:
5 + 5 + 5 = 550
3. இந்த‌ கோட்டிற்குள் ஏதாவ‌து எழுதுக:
[_______________]
[__ஏதாவது___]
4. மூன்று கோடு ச‌துர‌ம் வ‌ரைக:
முதலில் விடை சொன்ன உருப்புடாதது_அணிமா தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார், !!! எப்டிண்ணே! இப்டில்லாம்? //உருப்புடாம போறதுக்கு என்ன என்ன வழிகள் இருக்கோ அத்தனை வழிகளிலும் சென்று வென்று வந்தவன்..// அதனால தானோ? உருப்புடாதத தூக்கிடுங்கண்ணே!!!

Apr 15, 2009

சிரிங்க சிரிங்க...கடிங்க கடிங்க...

சிரிங்க சிரிங்க...கடிங்க கடிங்க...

மெகானிக்கல் இன்ஜினியர் மெகானிக் ஆகலாம், ஸாஃப்ட்வேர் இன்ஜினியர் ஸாஃப்ட்வேர் ஆகமுடியாது.

மெழுக வச்சு மெழுகுவத்தி செய்யலாம், கொசுவ வச்சு கொசுவத்தி செய்யமுடியாது.

பஸ் ஸ்டாப்ல நின்னா பஸ் வரும், ஃபுல் ஸ்டாப்ல நின்னா ஃபுல் வருமா?

எத்தனால் குடிச்சா நீ டான்ஸ் ஆடுவ, மெத்தனால் குடிச்சா உனக்காக டான்ஸ் ஆடுவாங்க.

நீ ஏர் டெல் வச்சிருந்தாலும் ஏர் செல் வச்சிருந்தாலும் தும்முனா ஹட்ச் னு தான் சத்தம் வரும்.

நீ எவ்லோதான் படிச்சு சர்டிஃபிகேட் வச்சிருந்தாலும், உன் டெத் சர்டிஃபிகேட்ட உன்னால வாங்க முடியாது.

பல்லு வலினா பல்ல புடுங்கலாம், காது வலினா காத புடுங்க முடியுமா?

நாம கோவில் மணியை அடிச்சா சத்தம் வரும், கோவில் மணி நம்மல அடிச்சா ரத்தம் தான் வரும்.

காசு இருந்தால் கால் டாக்ஸி, காசு இல்லனா கால் தான் டாக்ஸி.

நீ என்னதான் வீரனா இருந்தாலும் குளிர் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது.

என்ன தான் அஹிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்திய சுட்டு தான் சாப்பிடணும்.

ஆயிரம் தான் இருந்தாலும் அயிரத்தி ஒன்னு தான் பெருசு.

என்னதான் நாய் நன்றியுள்ளதா இருந்தாலும் அதால நன்றி சொல்ல முடியாது.

நீ எவ்லோ பெரிய படிப்பாளியா இருந்தாலும், தேர்வு அறைல போய் படிக்க முடியாது.

ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம், காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம், இரத்த டெஸ்ட்ல பிட் அடிக்க முடியாது.