Jan 11, 2010

புத்தகக்காட்சி, தொலைக்காட்சி, பைரஸி, அரசு - ஜிகர்தண்டா

புத்தக காட்சிக்கு போய் நானும் ஒரு நாலஞ்சு பதிவு போட்றலாம்னு பார்த்தேன். முடியல.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். காட்சியில் விற்பனையான புத்தகங்கள் மட்டும் 7 கோடியாம். நானும் போயிருந்தா 7 கோடியே 1 ஆகியிருக்கும். புரிஞ்சிருப்பீங்க.. கோடிக்கு எத்தன பூஜ்யம்னு தெரியலைங்க.
சில விருப்பப்பதிவுகளை வாசிக்கையில் ஸைடு பாரில் மிதக்கும் விளம்பரங்களும் இசைகளும் எரிச்சலடையச் செய்கிறது. இன்னும் சில ஆனைக்கு முன்னே மணி ஓசை மாதிரி,  பதிவுகளை திறந்ததும் விளம்பரங்கள் பாப்அப் ஆகிறது. அந்த பதிவுகளை அப்படியே மூடிவிட்டு வந்துவிடுவேன். இந்த வார நட்சத்திர பதிவிலும் அப்படித்தான். நட்சத்திரம் குட்டிரேவதி கண்ணகி பற்றி எழுப்போகிறாராம், ரீடரில் இருக்கும் படித்துக்கொள்கிறேன்.
நெல்லையில் காவல்துறை அதிகாரி கொலைசெய்யப்பட்டதும் அவரை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் மீடியாக்களில் கிழிக்கப்பட்டனர். தண்டனையாக அவர்களுடைய பதவி பறிக்கப்பட்டாலும் தவறே இல்லை. (கொலையாளிகள் விட்டுச்சென்ற பைக்கில் அதிமுக சின்னம் இருந்ததாம். இனி.. எதிர்கட்சி வாய்திறக்காது) அது போகட்டும், அந்த வீடியோ ஒளிப்பதிவு செய்த நபரை என்ன செய்யலாம். இதே போல சென்றவாரம் ராமேஸ்வரத்தில் ஒரு பெரியவர் நடு ரோட்டில் தேங்கி கிடந்த தண்ணீரில் விழுந்து குளிரிலேயே இறந்துவிட்டாராம். அதையும் படம் பிடித்து கல்லாகட்டுகிறார்கள். தொட்டதற்கெல்லாம் அரசாங்கத்தை குறை சொல்லியே காலம் தள்ள வேண்டியிருக்கிறது.
ஜக்குபாய் படத்தை தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள்  இந்தியாவில் வெளியிடப்படும் முன்பே இணையத்தில் கிடைக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னதாக லண்டனில் இசை வெளியிடப்பட்டும் தமிழ் ரசிகர்களுக்கு கிடைக்கச்செய்யாதது நிர்வாக குறைபாடு என்றே சொல்லலாம். பின்ன எங்கிருந்து பைரஸியை ஒழிப்பது?
இளம் இயக்குனர்கள், தங்களது ஐந்து நிமிட படைப்பான குறுப்படங்களை காட்சிப்படுத்தும் கலைஞர் டிவியின் 'நாளைய இயக்குனர்' பாராட்டப்படவேண்டிய நிகழ்ச்சி. மதன், போத்தன் மற்றும் வாரம் ஒரு வெற்றி இயக்குனர் என நடுவர்களால் அக்குறும்படம் குறித்த கருத்துக்கள் பதிவு செய்யப்படுகிறது. விரைவில் ஆதியை அங்கு எதிர்பார்க்கிறேன்.
இரண்டு வாரமாக மாலை நேர பொழுது போக்கு விஜய் டிவி சீரியல்கள் தான். ச்சும்மா சொல்லப்படாது... நல்லாதாங்க இருக்கு. குறிப்பா கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம், அன்பேவா இரண்டு தொடர்களும் சூப்பர். கதைய விடுங்க, காட்சியமைப்புகளும் யதார்த்த வசனங்களும் தொடரோடு ஒன்ற வைக்கிறது. பள்ளிக்கூட நடிக பசங்களின் நடிப்பும், மதுர ஸ்லாங்கும்... ம் க்ரேட்.
நேற்று Duel என்ற ஒலகப்படம் பார்த்தேன். வழக்கம்போல உபயம்; பாலா. (புரியாத மொழில இருந்தா ஒலகப்படம் தான?).  ஆங்கிலமில்லை, வேறெந்த மொழி என்பதும் தெரியவில்லை, அது தேவையும் இல்லை. இயக்குனர்; ஸ்பீல்பர்க். டப் செய்யப்பட்ட ஹாலிவுட் படமாகத்தான் இருக்கவேண்டும். கதை இதுதான்; ஹைவேஸில் ஒரு கார், புகை கக்கிச்செல்லும் ட்ரக்கை முந்திச்செல்ல.. அந்தக் கார்காரரை கொல்லவரும் ட்ரக். ஆமாம்... ட்ரக் ஓட்டுனரை கடைசிவரை காட்டவில்லை. இதைத்தான் தரம் என்கிறேன். இதற்கு உலகத்தரம் உள்ளூர்தரம் என்று என்ன பெயரும் வைத்துக்கொள்ளலாம். திருட்டு டிவிடியை ஒழிக்க இதை போல தரமான படம் கொடுங்கள் என்றுதான் தமிழ் இயக்குனர்களை கேட்கிறேன்.

ரைட்டர் பேயோன் (http://twitter.com/writerpayon) ட்விட்டுகள் புத்தகமாக வெளிவருகிறதாம். விலை 60 /-. பேயோன் பேரவையின் புதிய உறுப்பினர். அங்கு நண்பர் மணிகண்டனின் பின்னூட்டமும் வாசிக்கவும். ;)

அடுத்த வார நீயாநானாவின் தலைப்பு 'பர்தா' (நன்றி லோகு). ஒரு நிமிட க்ளிப்பிங் பார்க்கத்தூண்டுகிறது. மீண்டும் பதிவுலகம் வீண் சர்ச்சைகளில் மூழ்காது என்ற நம்பிக்கை இருக்கிறது. பர்தாவிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அத்தனையையும் அடைத்துக்கொண்டிருந்தாலே பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆரோக்கிய விவாதத்திற்கு நாம் எப்போதும் தயாரே. ஆனால், இணையவிவாதங்களில் ஆரோக்கியத்தை எதிர்பார்ப்பது அதீதம் தான். இருக்கட்டும்... அடுத்த வாரம் பார்ப்போம்.

38 comments:

  1. me the first!! (இப்பவும் நானா???)

    ReplyDelete
  2. //அந்த வீடியோ ஒளிப்பதிவு செய்த நபரை என்ன செய்யலாம்.//

    அதேதான் என் கேள்வியும்!! மொபைல் கேமரா, டிஜிட்டல் கேமரா வந்ததிலிருந்து எல்லாரும் எல்லா நிகழ்வுகளையும், சாவு உட்பட, படம்பிடித்து ஆவணப்படுத்த (பெயர்பெற) முயல்வதில், மனிதம் தொலைக்கிறார்கள். அவர் படம்பிடித்ததால்தானே தெரிந்தது என்பவர்களுக்கு, அவரும் குற்றவாளிதான், அந்நேரம் உதவ முயலாததால்!!

    நீயாநானாவை லைவ்வாக/ பதிவாக இணையத்தில் பார்க்க சுட்டி கிடைக்குமா? நேரம், நாள் விபரமும் வேண்டும்.

    ReplyDelete
  3. //(கொலையாளிகள் விட்டுச்சென்ற பைக்கில் அதிமுக சின்னம் இருந்ததாம். இனி.. எதிர்கட்சி வாய்திறக்காது) //

    கோட்சே கூட இஸ்லாமியர் என்பதாக பச்சை குத்தி இருந்தானாம். நாட்டுல எதுவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடக்கும்.

    // அது போகட்டும், அந்த வீடியோ ஒளிப்பதிவு செய்த நபரை என்ன செய்யலாம்.//

    மற்றவர்களுடன் வேடிக்கைப் பார்த்து இருந்தாலும் பதட்டத்துடன் அதையும் படம் பிடித்த்தால் தானே அந்த கொடுமை வெளி உலகுக்கு தெரிந்தது. சில இடங்களில் செயல்படுவதும். செயல்படாமல் இருப்பதும் தன்னை மீறிய செயல் தான் பீர்.

    ReplyDelete
  4. ரைட்டு :-)
    ///பின்ன எங்கிருந்து பைரஸியை ஒழிப்பது?///
    அது புற்றீசல், கஷ்டம்.
    ///திருட்டு டிவிடியை ஒழிக்க இதை போல தரமான படம் கொடுங்கள் என்றுதான் தமிழ் இயக்குனர்களை கேட்கிறேன். ///
    முதலில்; சுட்டாலும்,சுட்டதென்று சொல்ல வைக்க என்ன செய்யாலாம்?
    சுட்டிக்காட்டினாலும் பதில் இல்லை...

    ReplyDelete
  5. //நேற்று Duel என்ற ஒலகப்படம் பார்த்தேன். வழக்கம்போல உபயம்; பாலா. (புரியாத மொழில இருந்தா ஒலகப்படம் தான?). ஆங்கிலமில்லை, வேறெந்த மொழி என்பதும் தெரியவில்லை, அது தேவையும் இல்லை. இயக்குனர்; ஸ்பீல்பர்க். டப் செய்யப்பட்ட ஹாலிவுட் படமாகத்தான் இருக்கவேண்டும். //

    duel ஒரிஜினல் ஹாலிவுட் படம் (ஆங்கிலம் தான்). நீங்க வேற ஏதோ மொழில பாத்திருக்கீங்க. ஸ்பீல்பெர்கோட முதல் மெயின் ஸ்ட்ரீம் படம் இதுதான்.(இதற்கு முன்னால், டெலிசீரியல் இயக்கிக் கொண்டிருந்தார்.)

    ReplyDelete
  6. //அந்த வீடியோ ஒளிப்பதிவு செய்த நபரை என்ன செய்யலாம்//

    அதிருக்கட்டும் வேடிக்கை பார்த்த நபரை என்ன செய்யலாம்

    //நீயாநானாவை லைவ்வாக/ பதிவாக இணையத்தில் பார்க்க சுட்டி கிடைக்குமா? நேரம், நாள் விபரமும் வேண்டும்//

    அடுத்த வாரம் என்றால் ஞாயிறு 7.30 இரவு அமீரக நேரம்

    //அடுத்த வார நீயாநானாவின் தலைப்பு 'பர்தா' (நன்றி லோகு//

    நான் விரும்பி பார்ப்பது.. எல்லாமே சுயமாக இருக்கும்... பார்ப்போம்...

    ReplyDelete
  7. //பர்தாவிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அத்தனையையும் அடைத்துக்கொண்டிருந்தாலே பிரச்சனை ஒன்றும் இல்லை.//

    ”கார்க்” அனுப்பி வைத்தால் உதவியாக இருக்கும்!

    ReplyDelete
  8. கோடிக்கு.. எத்தனை சைபர்ன்னு.. யாரை கேட்கலாம்??! :)

    --

    ReplyDelete
  9. //பர்தாவிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அத்தனையையும் அடைத்துக்கொண்டிருந்தாலே பிரச்சனை ஒன்றும் இல்லை.//


    :(((

    ReplyDelete
  10. //பர்தாவிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அத்தனையையும் அடைத்துக்கொண்டிருந்தாலே பிரச்சனை ஒன்றும் இல்லை.//

    إن شاء الله

    ReplyDelete
  11. @கோவி
    //மற்றவர்களுடன் வேடிக்கைப் பார்த்து இருந்தாலும் பதட்டத்துடன் அதையும் படம் பிடித்த்தால் தானே அந்த கொடுமை வெளி உலகுக்கு தெரிந்தது//

    பதட்டத்துடன் படம் பிடிக்கும் நேரத்தில் அவர் வேறு உதவி செய்திருந்தால்...கொடுமையே நடந்திருகாமல் இருந்திருக்கலாம்....இது ஒரு கொடுமையை உருவாக்க காரணமா இருந்து ...அதை உலகுக்கு காமிக்கிற செயல் மாதிரில இருக்கு....

    ஐயா..அரசியல்வாதிகள் எவ்ளவு நாட்கள் திட்டிட்டு இருப்போம்.......ஒரு கட்டத்தில் மறைந்த SI கை நீட்டி அந்த வீடியோ எடுத்தவரிடம் உதவி கேட்பார்....அப்ப அவர் என்ன பன்னாருன்னு பாருங்க.

    ReplyDelete
  12. புரிஞ்சிது.

    கொலை கொடுமை - ஒன்னும் சொல்லத்தெரியலை.

    பர்தா மேட்டர் இன்னும் முடியாதா - ஆஹா! டீவிலையும் வருதா,

    எதையும் விளங்கிகொள்ளனுமுன்னு முயற்சித்தா விளங்கிடும் - விதண்டாவாதத்திற்காக முயன்றால் அதுதான் கிடைக்கும் - எதிலும்/யாருக்கும்.

    ReplyDelete
  13. பர்தாவை போட்டுட்டு இது வரைக்கும் எவ்வளவோ தூரம் கடந்து வந்துட்டோம் (துபாய் வரைக்குமான்னு கேக்காதிங்க). இது வரைக்கும் இறைவன அருளால் பிரச்சினைகள் இல்லை. ஆனா இணையத்தில் இதை வெச்சு பெரிய பட்டி மன்றமே நடக்குறத பாத்தா சிரிப்பு தான் வருது.

    ஹிஜாபை வைத்து விவாதம் நடத்துவது ஒண்ணும் புதிசில்ல. ஏற்கெனவே பர்க்கா தத் என்டிடிவில பண்ணினது தான். நாம பாட்டுக்கு நம்ம வழியில போய்க்கொண்டிருக்கும்போது இதை ஏன் பெருசு பண்ணனும்னு எனக்கு கொஞ்சம் கூட விளங்கல.

    ReplyDelete
  14. ”காந்தி செத்துட்டாரா” ரேஞ்சுக்குத்தான் இருக்கும் இணையத்தில் ஆரோக்கிய விவாதம்...!

    ReplyDelete
  15. தமிழ்நாடும் பீகார் மாதிரி ஆயிடுமோன்னு இருக்கு.

    ReplyDelete
  16. மக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கம் மீள்வது குறித்து மகிழ்ச்சி. ஆமாம் இப்போ எல்லோருமே ரிப்போர்ட்டர் தான், மேற்கத்திய சேனல்களில் இதுக்குன்னே தினமும் நேரம் ஒதுக்குகிறார்கள்.

    ReplyDelete
  17. ::1::
    விஜய் டிவி பர்தா விவாதம் ஒளிபர‌ப்பினால் முற்றுகை.

    http://athiradenews.blogspot.com/2010/01/blog-post_3697.html


    ::2::

    ...முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லக் கூடிய ஒழுங்கீனமான பெண்களை வைத்து நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பத் துடிக்கும் விஜய் டிவியே....

    http://www.tntj.net/?p=9594

    .

    ReplyDelete
  18. விஜய் டிவி அலுவலக முற்றுகை
    http://www.tntj.net/?p=9594

    பணிந்தது விஜய் டிவி! அல்ஹம்துலில்லாஹ்!
    http://www.tntj.net/?p=9622

    விஜய் டிவி முற்றுகை வாபஸ்.
    http://www.onlinepj.com/vimarsanangal/vijay_tv/

    ச்சாப்டர் குளோஸ்..!

    //பர்தாவிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அத்தனையையும் அடைத்துக்கொண்டிருந்தாலே பிரச்சனை ஒன்றும் இல்லை.// -- மிக மிகச்சரியான வரிகள், பீர்...!

    முஸ்லிம்கள் யாரும் இவர்களின் தாலியை பற்றி கேட்டது இல்லை. சீக்கிய டர்பனை பற்றி கேட்டது இல்லை. கிருத்துவ அப்பத்தை பற்றி கேட்டது இல்லை. இவர்களுக்கு மட்டும் என்றுதான் இந்த நாகரிகம் புரியுமோ? புரிந்தால் அன்றுதான் நம் இந்தியாவிற்கு உண்மையான குடியரசு நாள். அதுவரை ஜனவரி 26 - க்கு அர்த்தமே இல்லை.

    ReplyDelete
  19. //UFO said...
    முஸ்லிம்கள் யாரும் இவர்களின் தாலியை பற்றி கேட்டது இல்லை. சீக்கிய டர்பனை பற்றி கேட்டது இல்லை. கிருத்துவ அப்பத்தை பற்றி கேட்டது இல்லை. இவர்களுக்கு மட்டும் என்றுதான் இந்த நாகரிகம் புரியுமோ?//

    அதுதானே?

    http://video.yahoo.com/watch/6753138

    இந்தப்பக்கம் இருக்கும் முஸ்லீம்கள், ஏன் அந்தப்பக்கம் இருக்கும் முஸ்லீம்களின் பர்தாபற்றிக் கேட்கிறார்கள்?
    தவறு.

    *
    எப்படியோ சுபமாக முடிந்தது.
    **

    தமிழர் திருநாள் / தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.
    அனைத்து தமிழரும் கொண்டாடுவோம்.

    **
    தகவல் அப்டேட்டுக்கு நன்றி UFO

    ReplyDelete
  20. கல்வெட்டு...
    //இந்தப்பக்கம் இருக்கும் முஸ்லீம்கள், ஏன் அந்தப்பக்கம் இருக்கும் முஸ்லீம்களின் பர்தாபற்றிக் கேட்கிறார்கள்?//
    இப்படித்தான் முஸ்லிம்களை வைத்து அவர்களுக்கு அவர்களாலேயே சூழ்ச்சி செய்துகொள்ள மற்றவர்களால் சதிவலை பின்னப்படுகிறது. இங்கு எதிரி, எய்தவன் சூழ்ச்சி தானே அன்றி அம்புகள் அல்ல. எனினும், விபரமரிந்தோர் விழிப்பாய் இருந்ததனால், விஷச்செடி முளையிலேயே கிள்ளப்பட்டுவிட்டது.

    சிலநேரம், வெட்டுப்படும்போது கல்வெட்டு சுக்குநூறாவதும் உண்டு...!

    ReplyDelete
  21. //இப்படித்தான் முஸ்லிம்களை வைத்து அவர்களுக்கு அவர்களாலேயே சூழ்ச்சி செய்துகொள்ள மற்றவர்களால் சதிவலை பின்னப்படுகிறது. //

    // UFO said...
    இப்படித்தான் முஸ்லிம்களை வைத்து அவர்களுக்கு அவர்களாலேயே சூழ்ச்சி செய்துகொள்ள மற்றவர்களால் சதிவலை பின்னப்படுகிறது.
    //

    ஒ மை காட் !

    நல்ல வேளை சூழ்ச்சியை சரியான நேரத்தில் இஸ்லாம் அமைப்புகள் கண்டுபிடித்து சுக்குநூறாக் உடைத்து விட்டது. இனிமேல் யாராவது இப்படி நடந்து கொள்வார்களா? பர்தா பர்றி எந்த முஸ்லீம் பெண்களும் டிவிக்களில் பேசக்கூடாது என்று பத்வா போட்டுவிட்டால் நல்லது. அப்பாவிப் பெண்கள் டிவிக்களின் சூழ்ச்சியில் விழமாட்டார்கள்.

    டிவிக்காரர்கள் அவர்களுக்கு எந்த சந்தேகம் வந்தாலும் இஸ்லாம் அமைப்பு தலைவர்களிடம் கேட்க வேண்டியதுதானே? ஏன் இப்படி எல்லாம் வஞ்சக வலை விரித்து சூழ்ச்சி செய்கிறார்களோ ? கொடுமை. இப்படியுமா இருபார்கள் டிவிக்காரர்கள்?


    إن شاء الله


    .

    இது போன்ற நயவஞ்சகச் செயல் செய்யும் டிவிக்காரர்களை கண்காணிக்க ஒரு அமைப்பு ஏற்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  22. //UFO said...
    சிலநேரம், வெட்டுப்படும்போது கல்வெட்டு சுக்குநூறாவதும் உண்டு...//

    அய்யோ ..நீங்கள் என்னை வெட்டுவதாகச் சொல்கிறீர்களா?
    ப்ளீஸ் மன்னித்துவிடுங்கள். இனிமேல் பர்தா இஸ்லாம் பற்றிப் பேச மாட்டேன்.

    கொலை , வெட்டு , வன்முறை இல்லாத மதங்கள் உள்ள நம் இந்தியத் திருநாட்டில் ஏன் என்னை வெட்டப் பார்க்கீறீர்கள். விஜய் டிவியையே மன்னித்துவிட்டார்கள் மார்க்க அறிஞர்கள். நான் அறியாமல் பேசியிருப்பேன் மன்னித்துவிடுங்கள்.

    .

    ReplyDelete
  23. UFO,
    நீங்கள் மிக நல்லவராகத் தெரிவதால் சில ஜடியாக்கள்...

    பிடிக்கவில்லை என்றால் தயவு செய்து வெட்டு/குத்து என்று பயமுறுத்த வேண்டாம்.

    என்னை மன்னித்திவிடுங்கள்..என்றே ஆரம்பிக்கிறேன்.

    **

    தமிழ்மணம் போன்ற திரட்டிகள் மற்றும் பிளாக்கர் போன்ற வலைப்பதிவு சேவை வழங்கிகளில் பர்தா மற்றும் இஸ்லாம் குறித்த எல்லா விவாதங்களையும் வடிகட்டச் சொல்ல வேண்டும்.

    சீனாவில் கூகிள் செய்தால் தியான்மென் சதுக்க மாணவர் போராட்ட வரலாறுகள் காண்பிக்கப்படுவதில்லையாம். அது போல இதை சுலபமாகச் செய்யலாம்.

    **

    யாராவது இஸ்லாம் பற்றி பிளாக்கர் பேச ஆரம்பித்தால் ஆட்டோமேடிக்காக "இஸ்லாம் மார்க்க அறிஞர்கள்" அல்லது "இஸ்லாம் அமைப்பு" களின் இணையத்தளத்திற்கு ரீடைரக்ட் செய்யும் வண்ணம் www சட்டதிட்டங்களை மாற்றலாம்.

    **

    இது எல்லாம் நடக்கும் வரை விஜய்டீவி மாதிரியான சதிகாரர்கள் அப்பாவி முஸ்லீம் பெண்களை சூழ்ச்சி செய்து பர்தா பற்றி பேச ஏவிவிட்டுக் கொண்டே இருப்பார்கள். இதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

    .

    ReplyDelete
  24. இனிய தமிழ் பொங்கல் வாழ்த்துக்கள்-
    பொங்கலுடன்
    தமிழ் தா ய் வாழ்த்து பாடலுடன் கொண்டாடி மகிழுங்கள் ..
    ...சித்ரம் ...//.

    ReplyDelete
  25. ஹேய்! இங்க ஒரு ஆலமரம் சும்மா இருக்குது. எல்லாரும் சொம்ப தூக்கிகிட்டு ஓடி வாங்க கருத்து சொல்ல.

    இப்படிக்கு,
    ஆலமரம் கிடைக்காமல் திண்டாடுவோர் சங்கம்.

    ReplyDelete
  26. மனிதம் தொலைகிறது மனிதம் தொலைக்கப்படுகிறது
    அதை மனிதர்களே செய்வதுதான்
    மகா கொடுமையாகிறது.

    யாரைச்சொல்லி நோக..

    ReplyDelete
  27. ஓ மை காட்..!
    கல்வெட்டு, உங்களைப்போன்றவர்களால்தான் பொதுமக்கள் அனைவருக்கும் பிரச்சினை.

    'செதுக்குபவர்களின் கவனக்குறைவால் சிலசமயம் கல்வெட்டு உடையலாம்'. இங்கு சூழ்ச்சியை செதுக்குபவராய் விஜய் டிவியையும் கல்வெட்டாய் அதன் 'நீயா நானா' சூழ்ச்சியையும் உருவகப்படுத்தினேன்.
    ///அய்யோ ..நீங்கள் என்னை வெட்டுவதாகச் சொல்கிறீர்களா?///
    இப்படியெல்லாமா என்மீது வீண்பழி போடுவது?

    மீண்டும் மீண்டும் புரியாமல்தான் குழப்புவீர்கள் என்பதால்.....:

    'அடுத்த திமுக தலைவர் ஸ்டாலினா? ஜெயலலிதாவா?' என்று ஒரு விவாத நிகழ்ச்சியை முழுக்க முழுக்க திமுக காரர்களை வைத்தே ஜெயா டிவி நடத்தினால், அதற்கு திமுக என்ன செய்ய வேண்டும், என்பதில், உங்கள் பதில் என்னவாக இருக்கும் என்று அறிய ஆவல்.

    ReplyDelete
  28. ஒ மை காட்...!
    //வெட்டு/குத்து என்று பயமுறுத்த வேண்டாம்//
    //அய்யோ ..நீங்கள் என்னை வெட்டுவதாகச் சொல்கிறீர்களா?//
    //ஏன் என்னை வெட்டப் பார்க்கீறீர்கள்.//

    பைத்தியமா கல்வெட்டு உங்களுக்கு?

    'என்னை யாராவது வந்து வெட்டுங்களேன்' என்று என் இந்த கூப்பாடு போடுகிறீர்கள்?

    'ஒரு கல்வெட்டு செதுக்கப்படும்போது சிலசமயம் தவறான வெட்டு காரணமாய் கல் உடைந்து விடும். இதில், கல்வெட்டை செதுக்குபவனாய், விஜய் டிவியையும் அதன் சூழ்ச்சியை 'நீயாநானா நிகழ்ச்சி'யாகவும் உருவகப்படுத்தினேன்.

    இஸ்லாத்தைத்தான் தவறாய் புரிந்துகொவீர்கள் என்று தெரியும். எப்போதும் எல்லாத்தையுமா?

    இப்போது சொல்லுங்கள்: "அடுத்த திமுக தலைவர், ஸ்டாலினா, ஜெயலலிதாவா?" என்று ஒரு விவாதம் ஜெயா டிவியில் முழுக்கமுழுக்க திமுக காரர்கள் பங்குபெற நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். ஜெயா டிவி / நிகழ்ச்சி பற்றி, ஒரு உண்மையான திமுக காரராய் உங்கள் கருத்து என்ன கல்வெட்டு?

    ReplyDelete
  29. // Sammy said...
    @கோவி
    //மற்றவர்களுடன் வேடிக்கைப் பார்த்து இருந்தாலும் பதட்டத்துடன் அதையும் படம் பிடித்த்தால் தானே அந்த கொடுமை வெளி உலகுக்கு தெரிந்தது//

    பதட்டத்துடன் படம் பிடிக்கும் நேரத்தில் அவர் வேறு உதவி செய்திருந்தால்...கொடுமையே நடந்திருகாமல் இருந்திருக்கலாம்....இது ஒரு கொடுமையை உருவாக்க காரணமா இருந்து ...அதை உலகுக்கு காமிக்கிற செயல் மாதிரில இருக்கு....//

    இதேபோல்தான், சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்மோதலின்போதும் கேள்விகேட்டார்கள். ஆனால், அன்று அங்கிருந்து விடீயோ வெளிவரவில்லையென்றால் அந்த சம்பவத்தின் வீரியம் பற்றி நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை. அதேபோல்தான் இதுவும். இங்கு ரிப்போர்ட்டிங் தேவைப்படுகிறது. சுற்றிலும் மற்றவர்கள் இருந்தார்களென்றால் அவர்களென்ன புடுங்கிக்கொண்டா இருந்தார்கள்?????????

    வீடியோவைப் பதிவு செய்த நபரைக் குறைகூறுவது முற்றிலும் முட்டாள்தனமானது என்பேன் நான்.

    ReplyDelete
  30. UFO,

    நீங்கள் மனதில் நினைத்த உவமை உவமானங்களை அறியும் வல்லமை இல்லை.

    எம்மைக் குறித்து நீங்கள் சொல்லவில்லை என்றால் நான் உங்கள் மீதிய குற்றத்திற்கு வருந்துகிறேன்.

    **

    நான் எந்த மதத்தையும் அரசியல் கட்சியையும் சாராத ஒருவன்.

    என்னை இப்படி ஒரு அரசியல் கட்சியில் அல்லது இஸ்லாம்,கிறித்துவம்,சனாதனம் என்று இணைத்துப் பேசி உங்களின் உவமை அனுமானங்களை என் மீது ஏற்ற வேண்டாம்.

    எனக்கு யாரும் தலைவர்கள் இல்லை. அது போல் எனக்கு கடவுளின் தேவையும் இல்லை.

    .

    ReplyDelete
  31. //காட்சியில் விற்பனையான புத்தகங்கள் மட்டும் 7 கோடியாம்.//

    நல்லா கேட்டீங்களா பீர்... போன வருஷம், இந்த வருஷம் ரெண்டு சேர்த்தாப்புல இருக்கப்போவுது,
    கோடிக்கு எத்தனை சைபர்னு நம்ம மதுரை அஞசாநெஞசனை கேட்டா சரியா சொல்லுவாருங்கோ...

    ReplyDelete
  32. //கல்வெட்டு, உங்களைப்போன்றவர்களால்தான் பொதுமக்கள் அனைவருக்கும் பிரச்சினை.//

    அப்டியா?

    ஏங்க கல்வெட்டு இப்படி இருக்கீங்க?

    ReplyDelete
  33. @ஊர்சுற்றி
    //சுற்றிலும் மற்றவர்கள் இருந்தார்களென்றால் அவர்களென்ன புடுங்கிக்கொண்டா இருந்தார்கள்?????????
    வீடியோவைப் பதிவு செய்த நபரைக் குறைகூறுவது முற்றிலும் முட்டாள்தனமானது என்பேன் நான். //

    ஐயா...அங்கு உதவி செய்யாத அமைச்சர்கள், கலெக்டர் இவர்கள் மீது தவறு இல்லை என்று யாருமே இங்கு சொல்லவில்லை...அந்த பதவியில் இன்னமும் இருக்கும் தகுதியில் இழந்தவர்கள்..

    சரி வீடியோ காரர்....அவருடைய திறமையான் 'ரிப்போர்ட்டிங்' னால் என்னத்த புடிங்கினார் ...அந்த அமைச்சர்களோ, கலெக்டரோ , வேறு அங்கு தங்கள் கடமையை செய்யாமல் இருந்தவர்கலையோ ....யாரின் மீதாவது நடவடிக்கை எடுக்க வைக்க முடிந்ததா ? ....நாலு பேர் அர்ரெஸ்ட் பண்ணி இருக்காங்க ..அந்த நாலு அர்ரெஸ்ட் யாரை எங்கு வெட்டினாலும் நடக்கும்.. அதற்கு நீங்கள் மெனக்கட்டு(உதவி செய்வதை விட்டிட்டு) வீடியோ பிடிக்க வேண்டாம்.

    அவருடைய திறமையான ரிப்போர்ட்டிங் ஒன்னே ஒன்னுக்கு உதவி இருக்கும் ..அதிகம் விலை குடுக்கும் சேனல் கிட்ட காசு வாங்கிட்டு வித்து இருப்பார்...எல்லாரும் பதட்டத்துடன் இருந்தாலும், அங்கு இவர் ஒரு சம்பாத்தியம் பண்ணிட்டார்.

    என்னுடைய கருத்து ஒரு முட்டாள் தனமான கருத்தாக இருக்கலாம்....பத்திரிகை துறை(journalism) பற்றி சரியாக புரியாதவனாக இருக்கலாம்...அதை பற்றி நிச்சயமாக கவலை இல்லை, அப்படிபற்ற ஒரு விஷயத்தை புரியாதவனாக இருக்கவே விருப்பபடுவேன்.

    ReplyDelete
  34. "தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

    என்றும் அன்புடன்,
    சிங்கக்குட்டி.

    ReplyDelete
  35. தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள் பீர்! :)

    ReplyDelete
  36. தமிழ்மணம் 2009 விருதுக்கு வாழ்த்துக்கள் பீர்.

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.