Jan 9, 2010

சினிமா திருட்டு குண்டர் குற்றமா?

தமிழ்மணம் முதற்கட்ட வாக்கெடுப்பில் 'ஜெய்ஹிந்த்புரத்தின்' விளிம்புநிலை வியாபாரிகள் மற்றும் இஸ்லாமியர்களும் தீவிரவாதமும் என்ற இரண்டு இடுகைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வாக்களித்த பதிவர்களுக்கு நன்றி ! இறுதிச் சுற்றிலும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் பதிவர்கள், பொது வாசகர்கள் அனைவருக்கும் நன்றி !!! - பீர்.

ஜக்குபாய் - திரைக்கு வருவதற்கு முன்பே டிவிடி வெளியாகிவிட்டதாம். திரைத்துறையில் இருக்கும் சில 'பொதுநலவாதிகளே' மார்கெட்டில் வெளியிட்டதாக சொல்லப்படுகிறது. திரைத்துறை வியாபாரிகள் எல்லோரும் சேர்ந்து ஒப்பாரி வைக்கிறார்கள். ஜக்குபாய்க்கு சகுனம் சரியில்லை என்கிறார் ஒரு அறிவு ஜீவி. திருட்டி டிவிடி விற்பவனின் கையை வெட்ட வேண்டும் என்கிறார்கள். திருட்டு டிவிடியை ஒழிக்க தமிழக அரசு குண்டர் சட்டம் பாயும் என்கிறது.

குண்டர் சட்டம் பாயுமளவுக்கு இது குற்றமா? உண்மையில் தமிழகம் தடுக்கப்பட வேண்டிய வேறு குற்றங்கள் இல்லாத அமைதி பூங்காவாகிவிட்டதா? நெல்லையில் காவலரை கொல்லும் ரவுடி, அவரை காப்பாற்ற முடியாத அரசியல் தலைவர்கள். இவர்களை தண்டிப்பதைவிட சினிமாக்காரர்களுக்காக அறிக்கை விடுவதை முக்கியச் செய்தியாகக் காட்ட இந்தத் தொழிலில் என்ன இருக்கிறது? சினிமாக்காரர்களின் ஓட்டுக்காகத்தான் இந்த படங்காட்டப்படுகிறது என்பதையும் யாரும் சொல்ல மாட்டார்கள். கூத்தாடிகளில் எத்தனை பேருக்கு ஓட்டுப்போடும் தகுதியும், தமிழக வாக்குச்சீட்டில் பெயரும் இருக்கிறது என்பது அரசியல்வாதிகளுக்கும் நன்கு தெரியும்.இருந்தும் ஒரு சினிமாக்காரன் நடத்தும் விழாவிற்காக நம் பணத்திலிருந்து லட்சங்களை வாரி வழங்க தயாராக இருப்பதும், படோபட வாழ்க்கை நடத்தும் அவர்களுக்கு வீடுகட்டித்தரவிருப்பதும், தினம் அவர்களுக்காக அறிக்கை தயாரித்து முதலைக்கண்ணீர் விடுவதற்கும் என்ன காரணமாக இருக்க முடியும்? பணம். கணக்குவழக்கில்லாமல் கேட்கும் போதெல்லாம் கோடிகளை அள்ளிக்கொடுக்கத் தயாராக இருப்பது போலவே, கொள்ளையடிக்கும் கருப்புப் பணத்தை உள்வாங்கும் தொழில்துறை அது. கூத்தாடிகள் கையில் நாட்டை கொடுத்தால் குட்டிச்சுவராக்கிவிடுவார்கள் என்பதை மீண்டும் மீண்டும் மெய்பிக்கும் நிகழ்வுகள் நடந்தேருவது வருத்தத்தையே மிச்சப்படுத்துகிறது.

திருட்டு டிவிடிக்காரர்கள் கொடுக்கும் கமிஷன் அரசியல்வாதி முதல் காவல்துறை வரை பங்கு பிரிக்கப்படுகிறது. தயாரிப்பாளருக்கும் பங்கு  சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கைநீட்டி லஞ்சம் வாங்குபவர்கள், (இனி வருமானம் தடைபடும் என்பதை தவிர்த்து யோசித்தாலும்) நிச்சயம் காசு கொடுப்பவனுக்கு துரோகம் செய்ய மாட்டார்கள். எனவே திருடர்களாய் பார்த்து திருந்தாத வரை இத்திருட்டை ஒழிக்க முடியாது. டிவிடி திருடன் ஏன் திருந்த வேண்டும்? என்பதற்கான பொதுவான காரணம் எங்கும் சொல்லப்படவில்லை. நம் புத்திக்கு எட்டியவரை (பணம் கொடுத்து நாம் வாங்கும் டிவிடி எப்படி திருட்டு டிவிடியாகும் என்ற நுணுக்கங்களை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு) நாமே சிந்திக்கலாம்.
நமக்கும் திரைப்பட தயாரிப்பாளருக்கும் சம்பந்தமில்லை. திருட்டு(?) டிவிடி வியாபாரி பேர் கூட தெரியாது. ஆனால் நாம் நுகர்வோர். திருட்டுதனமாய் வாங்கி, திருட்டுதனமாய் ப்ரிண்ட் போட்டு, திருட்டுதனமாய் விற்கப்படும் டிவிடியை காசு கொடுத்து வாங்கி படம் பார்க்கும் திருட்டு டிவிடி பயனர்.  இந்த திருட்டு டிவிடியை வாங்காவிட்டால் நமக்கு என்ன நன்மை, வாங்குவதால் என்ன கேடுவந்துவிடப்போகிறது என்ற அளவிலேயே மிஸ்டர் காமன் மேன் சிந்திக்க முடியும், அவ்வளவே சிந்திக்கிறான். உண்மையை சொல்வதென்றால் திருட்டி டிவிடியால் நம் காமன் மேனுக்கு லாபமே. குடும்பத்துடன் ஒரு புதிய திரைப்படத்தை 20 ரூபாய்க்கு பார்த்துவிடுவதென்பது, நடுத்தரவர்க்கத்தின் அன்றாட செலவில் குறிப்படத்தக்க சேமிப்பை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகும்.
கோடிகளை கொட்டி படமெடுப்பதால் மட்டுமே மில்லியனில் லாபம் தர வேண்டும் என்று நினைப்பது முட்டள்தனம் என்பது போலவே, அந்த கோடி ரூபாய் படத்தை 20 ரூபாய்க்கு வாங்கி பார்த்தால் குண்டர் சட்டம் பாய வேண்டும் என்பதும். டிவிடியில் பார்த்தாலுமே மீண்டும் தியேட்டரில் பார்க்கத்தூண்டும் தரத்துடன் உங்களுடைய படைப்பு இருக்கவேண்டும்.உலகப்படங்களை உருவியாவது அந்த தரத்தை கொண்டுவாருங்கள் தவறில்லை.
திருட்டி டிவிடி விற்பனையில் வரும் பணம் தீவீரவாதத்திற்கு பயன்படுத்தப்படுவதாகச் சொல்லி கமல் என்றொரு நடிகன் மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார்.  டிவிடி வியாபாரிகளை தூக்கிலிட வேண்டும் எனுமளவுக்கு மேடை கட்டி நடிக்கும் கூத்தாட்ட வியாபாரிகள், பெரும்பாலான ஒலகப்படங்களை ஓசியில் டவுன்லோடு செய்தும், திருட்டு டிவிடியிலுமே பார்க்கிறார்கள்.டிவிடி தேயும் அளவு திரும்ப திரும்ப பார்க்கிறார்கள். போகட்டும்.. டிவிடி தேய்ந்தாலும் ரசிகனுக்கு உலகத்தரத்தில் ஒரு தமிழ்திரைப்படம் கிடைக்கிறதா என்றால் இல்லை.அந்தப்படங்களிலிருந்து காட்சிகளையும் தொழில் நுட்பங்களையும் திருடி 'எ ப்ளிம் பை' என்று கொட்டை எழுத்தில் தன் பெயரை பதித்துக்கொள்வதோடு மட்டுமில்லாமல். திருடி எடுத்தது யாருக்கும் தெரியாதிருக்க 'நான் இதுவரை உலகப்படம் பார்ததில்லை' எனும் பேட்டிகள் வேறு. உகாண்டா நாட்டு மொக்கைப்படத்தை காப்பி அடித்தாலும், சரியாக கண்டுபிடித்து எழுத இங்கே பலர் காத்திருக்கிறார்கள். ரசிகர்கள் அனைவரும் மொன்னைகள் என்று  நினைத்துவிட வேண்டாம். மொன்னைகளில் சில ரசிகர்களும் உண்டு அவ்வளவே.
அது போக, எய்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்களை பரப்பும் விபச்சாரத்தை அங்கீகரிக்கச்சொல்லும் 'நியாயவான்கள்', நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் இல்லாத டிவிடி தொழிலை அங்கீகரிக்க சொல்லாததேன் என்பதும் புரியவில்லை. குண்டர் சட்டம் போட்டும் தடுக்க முடியாத திருட்டை 'சட்டபூர்வமாக அங்கீகரித்தால்' என்ன? இலவச வண்ண தொலைக்காட்டிப் பெட்டியும், ஒரு ரூபாய்க்கு அரிசியும் தரும் கருணாநிதி அரசு, புதிய திரைப்படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் வசதியையும் செய்து கொடுத்துவிட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளும் இப்போதிருக்கும் கம்பெனியே தொடர்ந்து சம்பாதிக்கலாம் என்பதை யாரும் சொல்லித்தரவில்லையா?

எது எப்படி இருந்தாலும் கதை, இசை, தொழில்நுட்பம், சக தொழிலாளியின் உழைப்பு இன்னபிறவற்றை திருடி எடுத்து பல சமூக குற்றங்கள் நிகழ காரணமாக இருக்கும் சினிமாவைத் திருடி டிவிடியில் விற்பதை நடுத்தரவர்க்கத்திற்கான ராபின் ஹூட் வகை 'சமூக சேவை' என்றும் சொல்லலாம்.

'திருட்டு டிவிடி ஒழிக்கப்பட வேண்டும்' என்று கீ போர்டை தட்டும் சினிமா வியாபாரிகளில் எத்தனை பேர் தங்கள் கம்யூட்டரில் ஜென்யூன் ஓ.எஸ் மற்றும் பிற ஸாஃப்ட்வேர் பாவிக்கிறார்கள் என்பதையும் நினைவில் நிறுத்தட்டும்.

 • நான் திருட்டு டிவிடி வாங்கி படம் பார்ப்பதில்லை என்பதை ஒரு குறிக்கோளாகவே வைத்திருக்கிறேன். பின்ன... அரை தினாருக்கு வாங்கினாலும் ப்ரிண்டு அலையடிக்குதே.
 • ஆமா.. இதுக்கு முன்ன திருட்டு விசிடிய ஒழிக்கணும்னு சொன்னாங்க. முற்றிலும் ஒழிஞ்சிடுச்சு. இப்போ திருட்டு டிவிடிய ஒழிக்கணும்னு சொல்றாங்க... இதுவும் ஒழிஞ்சிடுச்சுன்னா.. அப்போ அடுத்து திருட்டு டிவ் எக்ஸா?


49 comments:

 1. //எது எப்படி இருந்தாலும் கதை, இசை, தொழில்நுட்பம், சக தொழிலாளியின் உழைப்பு இன்னபிறவற்றை திருடி எடுக்கப்படும் சினிமாவைத் திருடி டிவிடியில் விற்பதை நடுத்தரவர்க்கத்திற்கான 'சமூக சேவை' என்றும் சொல்லலாம்.

  //


  சுமார் 50 படங்களுக்கும்மேல் டிராக்கில் பாடியவன். எந்த பட அதிபரும் என் குரலுக்குரிய விலையைக் குடுத்தார்களே தவிர யாரும் என் குரலைத் திருடவில்லை. எப்படி பீர்அண்ணா இவ்வளவு ஈஸியாக குற்றம் சொல்றீங்க???

  ReplyDelete
 2. இருங்க படிச்சிட்டு சொல்றேன்

  ReplyDelete
 3. அப்துல்லா அண்ணே, உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? சினிமாவில் எந்த தொழிலாளியுடைய உழைப்பும் திருடப்படுவதில்லை என்றும்,
  கதை, இசை, தொழில்நுட்பம் யாவும் முழுக்க முழுக்க சொந்த சரக்கே என்றும்?

  சினிமா போன்ற சில பொழுதுபோக்கு துறைகளில் இத்தகைய 'நுட்ப திருட்டு' தவிர்க்க முடியாததாகவும் நியாயமாகவும் கூட இருக்கலாம். ஆனால், திருடப்படுவதில்லை என்று மறுக்க முடியாது.

  ReplyDelete
 4. இந்த இடுகைக்கு எனது வன்மையான கண்டனங்கள்.

  (என் கண்டனங்களையும், உங்களுடனான நட்பினையும் குழப்பிக்கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த பின்னூட்டம் இடுகின்றேன். )

  ReplyDelete
 5. சான்ஸே இல்ல அப்துல்லா அண்ணே, தொழில், நட்பு, நம்பிக்கை அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லையே.

  மட்டுமல்லாது இது சினிமா குறித்த என் தற்போதைய நிலைபாடு/ கருத்து. ஒருவேளை நான் சரியாக விளங்காமல் கூட இருக்கலாம். எனக்கு சரியாக புரியும்பட்சத்தில் சினிமா குறித்தான என் கருத்திலிருந்து மாறவும் வாய்ப்பிருக்கிறது.

  சினிமா என்றில்லை எந்த ஒரு பொதுக்கருத்தாக இருந்தாலும் இதுவே என் நிலை.

  சரி அது போகட்டும், திருட்டு டிவிடியை நான் ஏன் வாங்கக்கூடாது என்று சொல்லுங்கள்.

  ReplyDelete
 6. //சினிமாவில் எந்த தொழிலாளியுடைய உழைப்பும் திருடப்படுவதில்லை என்றும்,
  கதை, இசை, தொழில்நுட்பம் யாவும் முழுக்க முழுக்க சொந்த சரக்கே என்றும்?

  //

  1) சினிமாவில் தொழிலாளி என்பவர்கள் லைட்ஸ்மேன்,புரடக்‌ஷன் அசிஸ்டெண்ட், டிரைவர் மற்றும் இன்ன பிற. இவர்களுக்கு ஒரு கால்ஷீட்டிற்கு இவ்வளவு சம்பளம் என்று அவர்களின் கூட்டமைப்பான பெப்ஸி வரையறை செய்துள்ளது. அந்தத் தொகையையும் நீங்கள் தொழிலாளியின் கையில் நேரடியாக குடுக்க முடியாது. சங்கத்தில் அதாவது பெப்ஸி யூனியனில் கட்டவேண்டும். அவர்கள் அதை வேலை செய்த தொழிலாளிக்கு அனுப்புவார்கள். சம்பளபாக்கி வைத்தால் அந்தப் படம் 1001 சதவிகிதம் ரிலீஸாக வாய்ப்பில்லை. எனவே சினிமாவில் ஒரு தொழிலாளியின் உழைப்பை யாரும் திருட முடியாது.

  2) கதை, இசை திருட்டு என்பது சரக்கற்ற டைரக்ட்டரும், இசை அமைப்பாளரும் செய்வது. அதையும் அவர்கள் ஓ.சியில் செய்வதில்லை. பட அதிபரிடம் அவர்களுக்குரிய ரேட்டை பெற்றுக்கொள்கின்றனர். அவர்களுக்கு எப்படியும் அடுத்தடுத்த படங்கள் கிடைக்கும். பணம் போட்டு படம் எடுக்கின்றானே அந்த அப்பாவி புரோடியூசர் அவந்தான் பாவம். எவன் பணம் போட்டு செய்யும் விஷயத்தை திருடி எவன் ”சமூகசேவை” செய்வது?? இதுதான் என் கேள்வி?

  ReplyDelete
 7. //சரி அது போகட்டும், திருட்டு டிவிடியை நான் ஏன் வாங்கக்கூடாது என்று சொல்லுங்கள்.

  //

  ஒரு நகையை ஒரு திருடன் திருடி வந்து உங்களிடம் விற்கின்றான். பலர் கண்ணில் இருந்து தப்பி ஓடிவந்து உங்களிடம் விற்க வந்த அந்த உழைப்பைப் பாராட்டி அதை வாங்குவீர்களா? இல்லை திருட்டு நகை வாங்குவது பாவம் என்று ஒதுங்குவீர்களா??

  தியேட்டரில் டிக்கெட் அதிகவிலை என்றால் பணம் போட்டவன் அதற்குறிய விலையை வைக்கத்தான் செய்வான்.அதிகமாகத்தான் இருக்கும். பணம் போடாதவன் 20 ரூபாக்கு சி.டி. தரத்தான் செய்வான்.

  இன்னோன்று எப்படியாகிலும் இன்றைய நிலையில் படம் வெளிவந்த ஒரு மாதத்திலேயே அதிகார்வப்பூர்வமான தயாரிப்பாளரின் உரிமையுடன் சி.டி. வந்து விடுகின்றது. அதற்குள் என்ன அவசரம் அண்ணா??

  ReplyDelete
 8. //மட்டுமல்லாது இது சினிமா குறித்த என் தற்போதைய நிலைபாடு/ கருத்து. ஒருவேளை நான் சரியாக விளங்காமல் கூட இருக்கலாம். எனக்கு சரியாக புரியும்பட்சத்தில் சினிமா குறித்தான என் கருத்திலிருந்து மாறவும் வாய்ப்பிருக்கிறது.

  சினிமா என்றில்லை எந்த ஒரு பொதுக்கருத்தாக இருந்தாலும் இதுவே என் நிலை.

  //

  இந்த தைரியத்தில்தான் பின்னூட்டம் போட்டேன் :)

  ReplyDelete
 9. டிவிடி விஷயத்திற்கு நகை உதாரணம் பொருந்துமா என்று தெரியவில்லை. ஆனாலும் ஏதோ புரிகிறமாதிரி இருக்கிறது.

  இருந்தாலும்,

  அந்த டிவிடியை வாங்குபவன், அதற்கான விலையை ஐம்பதோ நூறோ கொடுத்து விடுகிறான். அந்த படத்தை சில காப்பிகள் ப்ரிண்ட் போட்டு வேறொரு வியாபாரிக்கு பத்துக்கோ பதினைந்திற்கோ விற்கிறான். அதை நான் இருபது ரூபாய்க்கு வாங்குகிறேன். என்னளவில் அந்த பொருள் திருட்டுப் பொருள் இல்லையே.

  சரி.. டிவிடியில் பார்த்தாலுமே மீண்டும் தியேட்டரில் பார்க்கத்தூண்டும் தரத்துடனான படைப்பு வேண்டும் என்பது பற்றிய உங்கள் பார்வை? உதாரணமாக பருத்திவீரன், உ.போ.ஒ போன்ற கமர்ஷிய்ல ஹிட் படங்களைச் சொல்கிறார்களே?

  ReplyDelete
 10. //சரி.. டிவிடியில் பார்த்தாலுமே மீண்டும் தியேட்டரில் பார்க்கத்தூண்டும் தரத்துடனான படைப்பு வேண்டும் என்பது பற்றிய உங்கள் பார்வை?

  //

  என் பார்வை என்ன... அனைவரின் பார்வையுமே அதுபோன்ற படங்கள் எடுக்க வேண்டும் என்பதுதான்.

  ReplyDelete
 11. இதிலிருந்து தெரியும் நீதி என்னன்னா? அப்துல்லா அண்ணன்
  ., இப்படி பின்னூட்டம் போடாம இருக்கனும் என்றால், சினிமா பற்றி எழுதனும் என்று புரிகிறது!

  ReplyDelete
 12. //டிவிடி விஷயத்திற்கு நகை உதாரணம் பொருந்துமா என்று தெரியவில்லை. ஆனாலும் ஏதோ புரிகிறமாதிரி இருக்கிறது.


  //

  அண்ணா நகை என்பது பொருள் என்பதால் உங்களுக்கு உறுத்துகின்றது. சினிமா என்பது பொருள் அற்ற காட்சி என்பதால் உருத்தவில்லை. ஒரு பட அதிபருக்கு அவர் படம் ஒரு பொருள்.அதை நம்மிடம் அவர் தருவது தியேட்ட்ரிலும் அப்புறம் சில நாட்களில் அதிகாரப்பூர்வ சி.டி. உரிமை மூலம் மட்டுமே. இந்த இரண்டு வழிகளில் இன்றி வேறு எப்படி நீங்கள் படம் பார்த்தாலும் அது திருட்டுக்கு துணை போவதே.

  ReplyDelete
 13. அண்ணே திருட்டு DVD ஒழிக்கமுடியாத பிரச்சினை இல்லை, குண்டர் சட்டத்தினால் மட்டும் ஒழிச்சிட முடியாது, என் மாமாவுக்கு சென்னையில் 6 டிவிடி ரெண்டல் கடை இருக்கிறது அதனால் அதை பற்றி நன்றாக எனக்கு தெரியும்.

  போலீஸ் நினைத்தால் ஒரு மாதத்தில் ஒழிக்கலாம்.

  ReplyDelete
 14. சினிமாகாரர்கள் நினைத்தால் ஒரே நாளில் ஒழிச்சிடலாம்.

  ReplyDelete
 15. //போலீஸ் நினைத்தால் ஒரு மாதத்தில் ஒழிக்கலாம்.

  //

  இதுதான் மிகவும் சரி.

  ReplyDelete
 16. சினிமா திருட்டுக்கு குண்டாஸ்னா கே.எஸ்.ரவிக்குமாருக்கு என்ன கிடைக்கும்.

  ஜாக்குபாய் பிரஞ்ச் படாமாமே?

  எல்லாருமா சேந்து ஜக்குபாய மக்குபாய ஆக்கிட்டாங்க.

  //பின்ன... அரை தினாருக்கு வாங்கினாலும் ப்ரிண்டு அலையடிக்குதே. //

  ஆன்லைனல் பாருங்க நல்லா கிளினா இருக்கும்.

  ReplyDelete
 17. நான் அப்துல்லா அவர்கள் சொன்னதே சரி என்று நினைக்கிறேன்.கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டு படம் எடுப்பவர்களின் நிலைமை பற்றியும் சிந்திக்க வேண்டும்.படம் உலகத் தரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் .ஜக்குபாய் விஷயம் குசும்பன் சொன்னது போல போலீஸ் மனது வைக்க வேண்டும்.

  ReplyDelete
 18. திருட்டு வைஃபை டிஸ்கனெக்ட் ஆகிடுச்சு.. :(

  அப்துல்லா அண்ணே, நகை உதாரணம் சரியாவராதுன்னு சொன்னதுக்கு காரணம், ஒரு மாதத்திற்கு பிறகு வரும் டிவிடியையும் நாம் அதே 20 ரூபாக்குத்தான் வாங்குகிறோம். ஒப்பீட்டளவில் அதுவும் திருட்டு டிவிடியே. ஆனால் அது குற்றமாக கருதப்படுவதில்லை.

  ReplyDelete
 19. வாங்க குசும்பன், இன்னோரு நீதியும் தெரியுது.. எசமான் உங்க காலடி ஜெய்ஹிந்த்புரத்தில் படணும்னா சினிமாவைத் தொடணும்.

  ம்.. சினிமாக்காரர்கள் நினைத்தால் ஒரே நாளில் ஒழித்துவிட முடியும் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

  ReplyDelete
 20. ஷாகுல், வேறென்ன.. கே.எஸ். ரவிக்குமாருக்கு பாராட்டுவிழாதான். ஆன்லைனா.. ம்.. பார்க்கலாம்.. பார்க்கலாம்.

  வாங்க ஸ்ரீ, ஜக்குபாய் திருட்டி டிவிடில பார்த்தவர்களே ஒர்த் இல்லைன்னு சொல்றாங்களே.. இனி தியேட்டருக்கு வந்தால் யார் போவா. பர்ஸ் தப்பியதுன்னு நெனச்சுக்க வேண்டியதுதான்.

  ReplyDelete
 21. ஜக்குபாய் ..அந்த படம் படைத்தவர்கள் குழுவினால் மட்டுமே வெளிய வந்திருக்க வேண்டும்.

  இந்த ஒரு பட விஷயத்தில் சினிமா துறை மக்கள் உணர்ச்சிவசபடாம இருக்கலாம்..

  ReplyDelete
 22. சாம், அதெப்படிங்க 18 கோடிய போட்டுட்டு உணர்ச்சிவசப்படாம இருக்க முடியும்?

  சரி.. அவங்க உணர்ச்சி வசப்படாம இருந்தாலும் நாம அப்படி இருக்க முடியுமா? நமக்குன்னு சில கடமை இருக்கில்லையா? :)

  ReplyDelete
 23. ஆயிரம் கோடி போட்டாலும் .....தட்டு வைக்கும் இடத்தில் பாதுகாப்பு இல்லைனா... வெளிய வர தான் செய்யும்.  //நமக்குன்னு சில கடமை இருக்கில்லையா? :) //
  இதை பத்தி பேச முடியாத நிலையில் இருக்கேன் ...உபயோகிக்கும் ஒபெரடிங் சிஸ்டம் (OS) அந்த மாதிரி இருக்கு :-)

  ReplyDelete
 24. திருட்டு டிவிடிக்காரர்கள் கொடுக்கும் கமிஷன் அரசியல்வாதி முதல் காவல்துறை வரை பங்கு பிரிக்கப்படுகிறது. தயாரிப்பாளருக்கும் பங்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.//

  நிச்சயமாய் இதில் அரசியல் வாதிகளூக்கு கமிஷன் கொடுக்கும் அளவுக்கு இடமில்லை. பீர். அதுமட்டுமில்லாமல் எந்த ஒரு தயாரிப்பாளரும் தன் படத்தை திருட்டு டிவிடியில் கொடுப்பது போன்ற கேடு கெட்ட செயலை செய்ய மாட்டான். என்பதை என்னால் உறுதிபடக்கூறமுடியும்.
  தவறான கனிப்பு
  கேபிள் சங்கர்

  ReplyDelete
 25. /குண்டர் சட்டம் பாயுமளவுக்கு இது குற்றமா?//

  நிச்சயம் இது அதை விட பெரிய தண்டனைக்கு உரிய குற்றம். க்டுமையாக தண்டிக்கபடவேண்டிய குற்றம்

  ReplyDelete
 26. /டிவிடி தேய்ந்தாலும் ரசிகனுக்கு உலகத்தரத்தில் ஒரு தமிழ்திரைப்படம் கிடைக்கிறதா//

  உலகதரம் என்றால் உங்களவில் என்னவென்று தயவு செய்து கூறுங்கள் பீர்.

  நலல் த்ரமான படமான அபியும் நானும், அன்பே சிவம் போன்ற் படஙக்ளை நீங்கள் உட்பட பெரும்பாலனவர்கள் டிவிடியிலும், டிவியிலும் பார்த்தார்க்ளே தவிர தியேட்ட்ரில் சென்று பார்க்கவில்லையே.. அப்படியிருக்க ந்ல்ல படஙகளை வெற்றி பெற வைக்காமல் எப்படி உலகதரத்தில் படத்தை எதிர்ப்பார்க்கிறீர்கள்.?
  பீர் நிச்சயமாய் நமக்குள் எந்த விதமான் பர்சனல் விஷயமாய் இதை பேசவில்லை. நீங்கள் என் நன்பர்.. ஒரு கருத்தை ஞாயபடுத்தக்கூடாது என்பதற்காகத்தான் எழுதுகிறேன் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 27. /'திருட்டு டிவிடி ஒழிக்கப்பட வேண்டும்' என்று கீ போர்டை தட்டும் சினிமா வியாபாரிகளில் எத்தனை பேர் தங்கள் கம்யூட்டரில் ஜென்யூன் ஓ.எஸ் மற்றும் பிற ஸாஃப்ட்வேர் பாவிக்கிறார்கள் என்பதையும் நினைவில் நிறுத்தட்டும்.
  //

  என்னிடம் ஜெனீயூன் ஓ.எஸ் இரண்டு வைத்திருக்கிறேன்
  நண்பரே

  ReplyDelete
 28. சங்கர் அண்ணே, மார்கட் டார்கெட் காமன் மேனாக இருக்கும் போது, திருட்டு டிவிடியால் காமன் மேனுக்கு இருக்கும் நன்மை தீமையை அலசாமல் அதை ஒழித்துவிட முடியாது. கோடீஸ்வர தயாரிப்பாளருக்கு மட்டுமே ஏற்படும் நஷ்டத்தை பற்றிய கவலை/அக்கறை எங்கள்(காமன் மேனு)க்கு கிடையாது.

  இதே கேள்வியைத்தான் உங்கள் பதிவிலும் கேட்டிருந்தேன்.

  ReplyDelete
 29. //என்னிடம் ஜெனீயூன் ஓ.எஸ் இரண்டு வைத்திருக்கிறேன்
  நண்பரே//

  அண்ணே தவறாக நினைக்க வேண்டாம், நான் யாரையும் குறிப்பிட்டுச்சொல்ல வில்லை. நம் அனைவருக்கும் தெரியும், எத்தனை பேர் ஜெனீயூன் ஓ.எஸ் பாவிப்பவர்கள் என்பது. (என்னிடமும் ஜென்யூன் விஸ்டா, ஆஃபிஸ் 2007 இருக்கிறது)

  நீங்களோ, அப்துல்லா அண்ணனோ பங்களிக்கும் திரைப்படத்தை திருட்டு டிவிடியில் பார்க்காதிருந்து நண்பர்களையும் அறிவுருத்துவோம். அது உங்கள் மேல் இருக்கும் அன்பு. முகம் தெரியாத சில நல்ல மனிதர்கள் மேல் வைத்திருக்கும் அன்பிற்காக சில நல்ல காரியங்களை செய்வது மட்டுமில்ல, தவறுகளில் இருந்தும் தவிர்ந்திருக்கலாம். ஆனால், இதையே அனைவருக்கும் ஏன் செய்ய வேண்டும் என்பதே தற்போதிருக்கும் கேள்வி.

  ReplyDelete
 30. கேபிள் அண்ணன் பதிவின் பின்னூட்டத்தில்...

  //KVR said...
  இப்படி படம் ரிலீஸ் ஆவதற்கு முன் ஸ்டூடியோவில் ப்ரிண்ட் போட்டு வருவது ஒரு வகை என்றால் வெளிநாட்டு டிவிடி ரைட்ஸில் போகும் டிவிடி ப்ரிண்டுகள் அடுத்த நாளே டிவிடி ரிப்பாக மாறி டொரண்ட் வழியாக இலவசமாக எல்லோருக்கும் கிடைச்சுடுது. டிவிடி ரிப்பில் பார்த்தாலும் நல்லப்படங்களாக இருந்தால் மக்கள் கண்டிப்பாக தியேட்டருக்குப் போய் பார்க்கிறார்கள். சமீபத்திய உதாரணம் 3 இடியட்ஸ். இவர்கள் கோடி கோடியாய் சம்பளம், அவசியமில்லாத வெளிநாட்டுப் படபிடிப்பு/பிரம்மாண்டம் என்று காசை வீணாக்குவதற்கு பதிலாக குறைந்த செலவில் தரமான நல்லப்படங்களாக எடுக்கும் பட்சத்தில் எத்தனை திருட்டு டிவிடி வந்தாலும் தியேட்டர் கலெக்‌ஷனில் குறைவிருக்காது.//

  இதையே நானும் வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 31. 'ஜென்யுன் ஒ.எஸ்' :
  இது இல்லாத பல கோடி பேர்களில் நானும் ஒருவன். பத்து ரூபாய் பெறாத ஒரு சிடியில் ஒரு சாப்ட்வேரை போட்டு விட்டு அதை பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பவர்கள், அப்போது அதை கொள்ளை லாபம் என்றோ அநியாயம் என்றோ நினைப்பதுமில்லை. அப்படி விற்பவர்கள் உலகமகா பணக்காரர்கள் என்பதால் அந்த அநீதிக்கு எதிராய் யாரும் குற்றம் சொல்வதும் இல்லை. விளைவு, பைரேட் சிடிக்கள். இதனை அவர்கள் கண்டுகொள்கிறார்களா? அவர்களை பொறுத்தவரையில் வெளியிட்ட அன்றே கொள்ளை லாபம் பார்த்தாயிற்று. எனவே, அதே பத்தாயிரம் ரூபாய் ஒ.எஸ்.கள் பல தளங்களில் அப்லோட் செய்யப்பட்டாலோ, ஃபிரீ டவுன்லோட் ஆப்ஷன் இருந்தாலோ கண்டுகொள்வதே இல்லை. பத்தாயிரம் ரூபாய் கொடுத்தவர்கள் முட்டாள்களா? இந்நிலையில் நான் வைத்திருப்பது பைரேட் சாப்ட்வேர் என்றே கருத முடியாது.

  திருட்டு டிவிடி:
  நீங்கள் 2 ரூபாய்க்கு ஒரு தினப்பத்திரிக்கை வாங்குகிறீர்கள். படித்துவிட்டு ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு பக்கத்து வீட்டாரிடம் படிக்கத்தருகிறீர்கள் என்றால், நீங்கள் செய்தது குற்றமா? அல்லது அவருக்கு அது திருட்டுப்பொருளா? உங்கள் மீது குண்டர் சட்டம் பாயுமா?

  ஜக்குபாய்:
  உங்கள் வீட்டில் ஒன்றை நான் திருடி அதை ஒரு காமன்மேனிடம் விற்றால் குண்டர் சட்டம் அவன் மீதுதான் பாயுமாம். அராஜகமில்லையா இது? அப்போ நான்? திருடன் இல்லையா? எனக்கு என்ன தண்டனை? இதைத்தான் காமன் மேன் கேட்கிறான். இங்கு திருடியவனே வாழ்வாங்கு வாழ்வதால், காமன் மேனுக்கு இதில் குற்ற உணர்ச்சியே இல்லை. அவனுக்கு இது குற்றமாகவே தெரியவில்லை.

  மேலும், ஆயிரம் ரூபாய் செலவு செய்யும் இடத்தில் வெறும் இருபது ரூபாய்க்கு அப்பொருள் கிடைத்தால் அவனைப்பொருத்தவரை ஆயிரம் ரூபாய் அபகரிப்பவன்தான் கொள்ளைக்காரன். இருபதுக்கு தருபவன் நேர்மையாளன்.

  இதற்கு ஒரேவழி, படம் தரமாக இருக்கவேண்டும்; டிக்கட் விலை நியாயமாய் இருக்க வேண்டும்; இவை இரண்டும் ஏற்பட கலைஞர்களின் சம்பளம் குறைக்கப்பட வேண்டும். நடக்குமா இவை?

  ReplyDelete
 32. உங்க கருத்துக்கு எதிரா சொல்றவங்க எதுக்கு பர்சனலா எடுதுக்காதீங்கன்னு டிஸ்கி போடறாங்க. விடாதீங்க ! என்ன விஷயம்ன்னு விசாரிங்க :)-

  டிவிடில பார்க்கறீங்களோ இல்லையோ, இந்த மாதிரி கருத்தை பரவலாக்காமா இருக்கலாம் :)- என்ன சொல்றீங்க ?

  குண்டர் சட்டம்ன்னா என்னான்னு சரியா தெரியாது. ஜாமீன் கிடையாதா ? அதை தெரியாம என்னோட கருத்தை எப்படி சொல்றது ? அந்த சட்டத்தை ஒரு பதிவு போடுங்க :)-

  ReplyDelete
 33. படம் காப்பி பண்ணி தான் எடுக்கறான். சோ, திருட்டு டிவிடி தப்பு இல்லைங்கற கருத்தை ! திருட்டி டிவிடி தப்பு தான். நாம அதை செய்வோம் தான் ! அதோட விட்டுடனும். அதை சரின்னு சொல்லி நியாயபடுத்தக்கூடாது :)-

  ஒகே. இவ்வளவு தான் குண்டர் சட்டம்ன்னா பின்ன என்ன பிரச்சனை ! குண்டர் சட்டம் பாய்ஞ்சா தான் என்ன ?

  ReplyDelete
 34. // அப்துல்லா.....
  தியேட்டரில் டிக்கெட் அதிகவிலை என்றால் பணம் போட்டவன் அதற்குறிய விலையை வைக்கத்தான் செய்வான்.அதிகமாகத்தான் இருக்கும்//

  அப்துல்லா,
  தியேட்டரில் டிக்கெட்டின் விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது?
  தமிழகத்தில் நட்பபது கொடுமை. உங்களுக்கு இது தெரியவில்லையா.

  **

  அதன் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்கு ஏற்ப விலை வைக்கலாம். ஆனால் பிளாக்கிக் விற்பதும் அதை தயாரிப்பாளர்முதல் படம் பார்ப்பவர் வரியில் சுரணையில்லாமல் அனுமதிப்பது எந்த வகையில் நியாயம்?

  யோக்கியவான்கள் முதலில் இதைச் செய்யட்டும். உங்களைப்போன்ற தமிழக சினிமா ஆதரவளர்கள் இதற்கு களம் இறங்குங்கள்.

  நீங்கள் பாட்டுபாடிய படம் பிளாக்கில் விற்கப்பட்டால் உங்களுக்கும் பாவத்தில் பங்கு உண்டு. :-)))

  அப்படி படத்தை பார்த்து தொலைக்கும் முட்டாள்களுக்கும் பாவத்தில் பங்கு உண்டு.

  பணம் போட்டவன் அதற்குறிய விலையை வைக்கத்தான் செய்வான் என்று தியேட்டர் டிக்கெட்டுக்கு விலைவைப்பதி நியாயப்படுத்தும் உங்களை எல்லாம் வல்ல இசைஅமைப்பாளர் சங்கம் காக்கட்டும்.

  :-)))

  ReplyDelete
 35. பெரிய காமெடி பீஸ்...

  எப்படியாவது வலையுலக இலக்கிய இரசனையை ஒரு இஞ்சாவது வளர்த்துவிடுவது என்ற குறிக்கோளுடன் பைத்தியக்காரன் அண்ட் கிழக்கு கம்பெனி , ஒலகப்படங்களை கிழக்குப்பதிப்பக மொட்டைமாடியில் பொதுக்காட்சிப்போல திரையிடுகிறார்கள்

  ஒரிஜினல் டிவிடியாக இருந்தாலும் பொதுக்காட்சிபோல திரையிட தனி அனுமதி வேண்டும்.

  (ஒலகத்திரைப்பட ஒரிஜினல் டிவிடிகளில் வரும் இன்டர்போல் வார்னிங்கைப் பார்க்கவும்.)

  **

  அப்துல்லாவின் போராட்டம் தமிழ் பட டிவிடிக்களுக்கு மட்டுமா அல்லது எல்லா ஒலக திரைப்படங்களுக்குமா?  அடுத்தமுறை கிழக்கில் ஒலகத்திரைப்படம் போடும்போது

  1. ஒரிஜினல் டிவிடியா என்றும்
  2. சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள்/வினியோகஸ்தர்களிடம் இருந்து பொதுக்காட்சிக்கு அனுமதி பெறப்பட்ட கடிதத்தையும்,
  4. எத்தனை பேருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும்

  சரிபார்த்து , தவறாக ஏதேனும் இருப்பின் குண்டர் சட்டப்படி அத்தனை யோக்கியவான்களையும் அள்ளிப்போக ஏற்பாடு செய்யவும்.

  :-‍)))

  அப்துல்லா அண்ணே செய்வாரா?

  ReplyDelete
 36. மணி, சரி... இருக்கட்டும். நியாயப்படுத்தல. ஆனா தவறு என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

  குண்டர் சட்டம்; வெளிய வரமுடியாட்டா தண்டனை கடுமையா இருக்கும் :( வரண்காந்தி, சீமான் கைது செய்யப்பட்டதும் குண்டர் சட்டத்தின் கீழ்தான்.
  கள்ளசாராயம், வழிப்பறி கொள்ளையர்கள் மீதும் குண்டர் சட்டம் பாய்வதுண்டு. :)

  ReplyDelete
 37. ஆஹா ..நல்ல வேலை ஓர் பின்னுட்டம் போட்டேன், அமைதியா உட்கார்ந்து மடலில் படம் பார்க்க முடிகிறது... கடைசியா வந்த கல்வெட்டு சார் கேள்வி அருமை.


  எனக்கு என்னமோ பீர் இந்தியாவிற்கு வந்தா குண்டர் சட்டம் அவர் மீது பாயும் என்று தோன்றுகிறது ....ரொம்பவே சினிமா துறை மக்களை சீண்டி விட்டுட்டார். ஐயா ஜாக்கிரதை...

  ReplyDelete
 38. எந்த மாதிரி ஜஸ்டிஃபிகேஷன் கொடுத்தாலும் படம் பார்ப்பது நேரத்தையும் பணத்தையும் வீண் விரயம் செய்வது: அது மட்டுமில்லாமல் அருவறுக்கத்தக்க பல விஷயங்களை திரையில் காட்டும்போது வெறும் ஸ்பெக்டேடர்களாகவே நாம் இருக்கிறோம்.

  அப்படி ஒரு ஹராமான விஷயத்துக்கு நாம இவ்வளவு மெனக்கடனுமா? ஃப்ரீயா விடுங்க சகோதரரே!

  ReplyDelete
 39. வாங்க கல்வெட்டு, உங்களைப்போலவே நானும் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

  சாம், எம்மேல குண்டர் சட்டம் பாயுற அளவுக்கு நான் குண்டர்ர்ர் இல்லை. :)

  நாஸியா, ஆமா.. நேரமும் பணமும் விரயம் என்பதில் சந்தகமில்லை. ஆனால், சினிமா ஹராமா?

  ReplyDelete
 40. அப்துல்லாவின் பல கருத்துகளோடு ஒற்று போகிறேன்.

  நகை என்று சொல்லப்பட்ட உதாரணமும் சரியே.

  நான் நிறைய திருட்டு டிவீடியில் பார்த்து இருக்கேன் இப்ப இணையத்தில் அந்த காசு கூட குடுக்காம பார்க்கிறேன்.

  --------------

  இது மட்டுமல்லங்க

  நாம அதிகாரத்தை உபயோகித்து சில காரியங்களை முடித்து கொள்கிறோம்

  உ.தா. டிக்கெட் ரிசர்வேஷன் - பலர் பல மணி நேரம் காத்திருந்து ரிசர்வு பன்னுவார்கள் நம்மில் சிலரோ பலரோ ஒரு போனில் அதை முடிச்சிடுவோம் - இது ஒரு உதாரணமே - இன்னும் இன்னும் எத்தனை எத்தனையோ இருக்கு பொதுமக்களுக்கு நஷ்ட்டம் விளைவிக்கும் விடயங்கள்

  ஆமா இத நான் இப்ப எதுக்கு சொன்னேன்
  மறந்துடுச்சே ........

  ReplyDelete
 41. [[இவர்கள் கோடி கோடியாய் சம்பளம், அவசியமில்லாத வெளிநாட்டுப் படபிடிப்பு/பிரம்மாண்டம் என்று காசை வீணாக்குவதற்கு பதிலாக குறைந்த செலவில் தரமான நல்லப்படங்களாக எடுக்கும் பட்சத்தில் எத்தனை திருட்டு டிவிடி வந்தாலும் தியேட்டர் கலெக்‌ஷனில் குறைவிருக்காது]]


  நானும் வழியெல்லாம்மொழிகிறேன்

  ReplyDelete
 42. "நீங்கள் 2 ரூபாய்க்கு ஒரு தினப்பத்திரிக்கை வாங்குகிறீர்கள். படித்துவிட்டு ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு பக்கத்து வீட்டாரிடம் படிக்கத்தருகிறீர்கள் என்றால், நீங்கள் செய்தது குற்றமா? அல்லது அவருக்கு அது திருட்டுப்பொருளா? உங்கள் மீது குண்டர் சட்டம் பாயுமா?"
  if you sold the "original" paper for one rupee, it is not theft...
  but if you photo copy that newspaper and sold 1000 copies..then it is a theft..
  you are stealing the "WORK and INVESTMENT" of that Newspaper Company...
  grow up people.. don't justify stealings...
  it is not only for bootlegged movies..
  it is same for black tickets and everything

  ReplyDelete
 43. குண்டர் சட்டம் பற்றி மட்டுமே இந்த பதிவுன்னா

  ஸாரி நோ ஐடியாஸ் ...

  ReplyDelete
 44. ஜமால் அண்ணனை நானும் வழியெல்லாம்மொழிகிறேன்

  ReplyDelete
 45. ஜமால் அண்ணே,

  நகை உதாரணம்; அப்போ ஒரு மாசத்திற்கு பிறகு அவர்களே வெளியிடும் டிவிடியை காப்பி பண்ணி விற்பது திருட்டில் வராதா? ஒரு மாசத்திற்கு பிறகு எந்த ப்ரிண்ட் வாங்கினாலும் அது திருட்டு டிவிடி கிடையாதா?

  டிக்கெட் ரிஸர்வேஷன்; அதனால் நேரடியாக பாதிக்கப்படுவது ஒரு காமன்மேன். நான் கேட்பது இதைப்போல ஒரு வாக்கியம், ஏன் திருட்டு டிவிடி கூடாது என்பதற்கு.

  பெரும்பாலான திரைப்பட தயாரிப்புக்கு கருப்புபணம் பயன்படுகிறது என்பதும் அறிந்ததே.

  குண்டர் சட்டம்; தேசிய பாதுகாப்பு சட்டம் கேள்விப்பட்டிருக்கீங்களா? அதேதான். திருட்டு டிவிடி விற்பதனால் தேச பாதுகாப்பிற்கு என்ன கேடு வருகிறது?

  அக்பர், உங்களுக்கும் இதே பதில் பொருந்தும். :)

  ReplyDelete
 46. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!

  ஜக்குபாய் படம் டிவிடியில் வெளிவந்ததற்கு உள்ளாட்கள்தான் காரணமாக இருக்க முடியும். தன வீட்டை சரி பண்ண முடியாதவர்கள் ஊருக்கு நாட்டாமை செய்வதைப் போலத்தான் இந்த விவகாரம் இருக்கின்றது.

  மற்றபடிக்கு , இருக்கின்ற சட்டங்களை வைத்துக் கொண்டே, திருட்டு டிவிடி பிரச்சினையை மிக எளிதாக கட்டுப் படுத்த முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும் சில நேரங்களில், ஏதாவது செய்தோம் என்பதை காட்ட வேண்டிய கட்டாயம் பாமரன் முதல் கோட்டை வரை இருக்கின்றது.

  இன்றைய தமிழ் படங்களில் பலவற்றை பார்ப்பதே பெரிய தண்டனைதான். (அது திருட்டு டிவிடியாக இருந்தாலும் சரி, திரை அரங்காக இருந்தாலும் சரி, உலக தொலைகாட்சிகளில் முதன் முறையாக இருந்தாலும் சரி) குண்டர் சட்டம் வேறு தனியாக வேண்டுமா? ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனைகள் கூடாதென்று நமது அரசியல் சாசனம் சொல்கின்றது என்பதையும் இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

  ஏதாவது ஒன்று செய்து, தமிழ் மக்களை சினிமா மோகத்தில் (அது உலக சினிமாவாக இருந்தாலும் சரி உள்ளூர் ஓட்டை சினிமாகவாக இருந்தாலும் சரி) இருந்து ஓரளவுக்கேனும் வெளியே கொண்டு வர முடிந்தால் இந்த சட்டத்திற்கு நன்றி சொல்வோம்.

  நன்றி.

  ReplyDelete
 47. ப்ரியகிங் நியூஸ்!!!.....யாரோ பீர் முஹமதாம் ஜெய்ஹிந்த்புரம் இன்சு தேடிட்டு இருக்கார் :-)

  ReplyDelete
 48. ///if you sold the "original" paper for one rupee, it is not theft...
  but if you photo copy that newspaper and sold 1000 copies..then it is a theft../// -- வெத்துவேட்டு...! நூறு சதம் சரியான வாதம்தான். ஆனால், நான் சொல்லவந்ததை இன்னும் தெளிவாக சொல்கிறேன்.

  அதே ஒரிஜினல் பேப்பர் ஆயிரம் பேரை இதேரீதியில் சென்றடைந்தால் என்ன சொல்வீர்கள்? நம் ஊரில் லைப்ரரி லைப்ரரின்னு ஒன்னு இருக்கில்லையா? அதில் காலை முதல் மாலைவரை அனைத்து பத்திரிக்கைகளும் வெளியான அன்றே படிக்க இலவசம்தானே? அப்புறம் டீக்கடை பெஞ்சு, சலூன்... என இப்படி நிறைய இருக்கின்றன. இதற்கெல்லாம் எந்த பத்திரிகை ஓனர்களும் கூக்குரலிட்டது இல்லையே? குண்டர் சட்டம் போட்டதில்லையே? அதேபோல, இதையெல்லாம் சினிமா பார்க்க ஆயிரம் ரூபாய் செலவழிக்க முடியாத ஏழைகளுக்காக ஜீரணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதைத்தான் சொல்ல வந்தேன்.

  ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.