Feb 16, 2010

விருதும் விமர்சனமும்

பதிவுலகில் பெரிய அளவில் பேசப்படும் தமிழ்மணம் இணையத்தின் சிறந்த படைப்புகளுக்கான விருதுகள் பட்டியல் கண்டேன்.வழக்கம் போல இங்கும் அரசியல்தானா என்று நொந்து கொண்டேன்.ஒரு படைப்பின் தரத்துக்கு அதன் பொருளடக்கத்திற்கு விருதா அல்லது பெரும்பான்மையாக ஒரு படைப்புக்கு வாக்களித்தால் விருதா ஒன்றும் புரியவில்லை.(தமிழக அரசின் சிறந்த திரைப்பட வசனகர்த்தா விருது பெற்ற கலைஞர் நினைவுதான் வருகிறது)தலித் மக்களின் பிரச்சனைகள்,மனித உரிமைகள் என்று ஒரு தலைப்பு அதில் விருது பெற்ற ஒரு பதிவு "ஷாருக் கானுக்கு ஒரு நியாயம்,தமிழனுக்கு ஒரு நியாயமா" .அமெரிக்கா சென்ற ஷாருக் கான் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைகுள்ளக்கபட்டார்.அதற்காக குரல் கொடுத்த ஊடகங்கள் ஈழ தமிழ் ஆதரவாளரான ஒரு மனித உரிமை போராளி இந்தியா வர விசா மறுக்கப்பட்டதற்கு குரல் கொடுக்கவில்லை என்று எழுதி இருந்தார்.விருது கொடுக்கும் அளவுக்கு இந்த பதிவில் என்ன கருத்து இருக்கிறது என்று தெரியவில்லை.ஷாருக் கான் அமெரிக்க விசா பெற்று முறையாக அமெரிக்கா சென்று இருக்கிறார்.கான் என்ற அவரது பூர்விக முஸ்லிம் பெயரை பார்த்து முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக அவர் தனிமைபடுதபட்டு விசாரிக்கபடுகிறார்.ஷாருக் கான் போன்றவர்கள் தாங்கள் முஸ்லிம் என்று சொல்லிகொள்வதையே விரும்பாதவர்கள்.இந்தியாவில் பிரபலமான ஒரு நடிகனாக இருந்தாலும் அவன் முஸ்லிம் பெயர் வைத்திருந்தால் என்ன கதி என்று அவர் தெரிந்திருப்பார்.இருந்தாலும் அமெரிக்காவின் பாசிச நடவடிக்கைகளை எதிர்த்து அவர்  குரல் கொடுக்க போவதில்லை.இந்தியாவில் தீவிரவாதிகள் என்று தினந்தோறும் கேவலபடுதபடுகிறதே முஸ்லிம் சமூகம் அது பற்றியும் அவர் வருத்தப்பட போவதில்லை.ஆனால் இந்தியாவின் புகழ் பெற்ற ஒரு நடிகன் கேவலபடுதப்பட்டான் என்பதால் ஊடகங்கள் குரல் கொடுக்கின்றனவே தவிர அவன் முஸ்லிம் என்பதால் சந்தேகிக்கப்பட்டான் என்பதை எவரும் கண்டு கொள்ளவில்லை.இது ஒரு முஸ்லிம் எவ்வளவு பெரிய புடுங்கியா (நடிகனா) இருந்தாலும் அவன் மீதும் தீவிரவாத முத்திரை குத்தப்படும் என்பதற்கு எடுத்துகாட்டு.ஒரு சமூகம் தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு அதன் ஒவ்வொரு உறுப்பினரும் சந்தேக கண் கொண்டு பார்க்கபடுவது எவ்வளவு வேதனை தரும் விஷயம்.மனித உரிமை ஆர்வலர் இந்தியா வர மறுக்கப்பட்டதற்கு நாமும் கண்டனம் தெரிவிக்கிறோம்.ஆனால் எதை கொண்டு போய் எந்த விசயத்தோடு ஒப்பிடுகிறார் பொன்னு சாமீ.இதற்க்கு ஒரு விருது.

இரண்டாவதாக "இஸ்லாமியர்களும் தீவிரவாதமும்" என்ற ஒரு கட்டுரை அதற்க்கு ஒரு விருது.அதுவும் ஆன்மிகம் என்ற தலைப்பில்.தீவிரவாதம் பற்றி ஆன்மிகம் என்ற தலைப்பில்தான் தமிழ்மணத்தார் பேசுவார்கள் போலிருக்கிறது."இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற சொல்லாடல் இஸ்லாமியர்களுக்கு கசப்பு தருவது எந்தளவு உண்மையோ அதே அளவு உண்மையே தீவிரவாத விகிதாச்சாரத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக இருப்பதும்".என்று எடுத்தவுடனே சரண்டர் ஆகி ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் ஜெய்ஹிந்துபுரத்தார்.எந்த தீவிரவாத விகிதாசாரத்தில் இஸ்லாமியர்கள் (முதலில் இஸ்லாமியர் என்ற சொல்லாடலே தவறு,முஸ்லிம்கள் என்பதுதான் சரி)முதலில் இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தையும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.நாட்டில் சங்கபரிவார் அமைப்புகள் நடத்திய மத கலவரங்களில் இதுவரை  ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லபட்டிருக்கிரர்கள்.ஆனால் இது வரை  பத்து சதவிகிதம் பேர் கூட தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் இறந்திருக்கமாட்டர்கள்.அதற்காக தங்களை கொலை செய்து தங்கள் பெண்களை கற்பழித்த பொருளாதாரங்களை நாசம் செய்ததற்கு பதிலடியாக முஸ்லிம்கள்தான் குண்டு வெடிப்பு நடத்தி கொலை செய்கிறார்கள் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவிர்கள் என்று நான் கூறவில்லை. மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் பிரக்யா சிங் தாக்கூர்,ராணுவ மேஜர் ஸ்ரீகாந்த் புரோஹிட் ஆகியோரை கைது செய்த காவல் துறை அதிகாரி மறைந்த ஷஹித் ஹேமந்த் கர்கரே கூறுகிறார்.மாலேகான் சிமி அலுவலக குண்டு வெடிப்பு,மாலேகான் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு,ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு,அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு,பாகிஸ்தான் இந்தியாவின் நல்லிணக்கத்திற்காக விடப்பட்ட சம்ஜவ்தா ரயில் குண்டுவெடிப்பு,கோவா குண்டு வெடிப்பு என அனைத்திற்கும் மூல காரணம்  R.S.S  உள் அமைப்பான அபினவ் பாரத் என்ற அமைப்புதான் என்று கண்டுபிடித்த குற்றத்திற்காக சுட்டு கொல்லபட்டாரே(மேலும் தகவலுக்கு WHO KILLED KARKARE என்ற புத்தகத்தை படிக்கவும்) ஹேமந்த் கர்கரே அவர் உயிரோடிருந்தால் உங்களை சுட்டிருப்பார் விகிதாசாரத்தை தவறாக சொல்லியதற்காக. பொடா எனும் கொடிய சட்டத்தில்  சிறையில் அடைக்கப்பட்ட  கைதிகளில் 90 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள் அதில் குற்றம் நிருபிக்கபடதவர்கள் 89 சதவிகிதம் பேர் என்ற விவரத்தையும் இந்திய சிறைகளிலே தனது மக்கள் தொகையை விட அதிகமாக 30 சதவிகிதம் முஸ்லிம்கள் சிறையில் வாடி கொண்டிருப்பவர்கள் என்ற விவரமும் உங்களுக்கு தெரியுமா.தொடர்ந்து தீவிரவாதிகள் என்று ஊடகங்களும் காவல் துறையும் உளவுத்துறையும், சங்பரிவாரும் அமெரிக்காவும் இன்ன பிற அயோக்கியர்களும் செய்து வரும் பிரசாரத்திற்கு நீங்கள் பலியாகி விட்டீர்கள்.அதனால் அமைதி மண்ணாங்கட்டி என்று பஜனை பாடுகிறீர்கள்.இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று இந்த அயோக்கியர்கள் எல்லாருக்கும் தெரியும்.தெரிந்துதான் இந்த பிரசாரத்தை செய்து வருகிறார்கள்.சர்வதேச தீவிரவாதி யார் என்றால் ஒரு முஸ்லிம் சிறுவன் கூட ஒசாமா என்று சொல்வதில்லையா அப்படித்தான்.நமது சகோதரர்களில் ஒரு பிரிவினரை நாமே தீவிரவாதி என்று காட்டி கொடுத்து நாங்களெல்லாம் நல்லவர்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று இவர்களிடம் பஜனை பாடி கொண்டே இவர்கள் செய்யும் அட்டூழியத்தை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் .அதற்க்கு தமிழ் மணம் விருது மட்டுமல்ல நோபல் பரிசு கூட கொடுப்பார்கள்.எனவே சகோதரா முதலில் இஸ்லாத்தின் எதிரிகள் அவர்களின் முழு பரிணாமத்தை புரிந்து கொண்டு அப்புறம் எழுதுங்கள்.

மூன்றாவதாக.தலித்,ஈழ தமிழர்கள்  என ஒடுக்கப்படும் மக்களுக்கான பதிவுகளுக்கு தனி தலைப்புகள் ஒதுக்கப்பட்டதை போல் சிறுபான்மையினர் என்று ஒரு தனி தலைப்பை தமிழ்மணத்தார் அடுத்த தடவை ஒதுக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். 
நன்றி - -இனியவன் 

15 comments:

 1. வெல்கம் பேக்ண்ணே..?!

  தமிழ்மணம் அவார்ட்ஸ் - நோ கமெண்ட்ஸ்.

  ReplyDelete
 2. வாங்கண்ணே,
  நலமா?
  போன் நம்பர் sms பண்ணுங்களேன்.
  என்ன திடீர் திடீர்ன்னு மாடரேசன் போட்டுவிடுறீங்க?

  ReplyDelete
 3. வாங்க ராஜூ, இது ஒண்ணும் வெல்கம் பேக் இல்ல... சும்மா.

  பாலா, நம்பர் மெயில் பண்றேன்.
  நான் எங்க மாடரேஷன் போட்டிருக்கேன். அதுவா ஏதோ நடக்குது. என் ப்ளாக் இப்போ என் கைவசம் இல்ல... என்னான்னு பார்க்க நேரமில்லை. நடக்குறது நடக்கட்டும்.

  ReplyDelete
 4. //நடக்குறது நடக்கட்டும்.//

  அந்த அளவுக்கு எதுக்கும் துணிஞ்சுட்டீங்களா? மதுரைக்குப் போனதும் ஆளே மாறிட்டீங்க!!

  ;-)

  ReplyDelete
 5. ஹூசைனம்மா, ஹி ஹி.. எல்லாம் ஒரு பில்ட்அப் தான்... நானும் ரவுடின்னு காட்டிக்க வேணாமா?

  அய்யோ.. நீங்க பயப்படாதீங்க.

  ReplyDelete
 6. //விருதும் விமர்சனமும்//
  இந்த தலைப்பை(லிங்க்) கிளிக்கினால் வேறு எங்கோ போகுதே என் ரீடரில். செக் பன்னுங்க பீர். நன்றி......

  ReplyDelete
 7. அன்பு பீர்,

  ஜெய்ஹிந்த்புரம் என்ற பெயரில் பிளாக் இருப்பது என்னை வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்தது... நானும் ஜெ.புரம் என்பதால் இருக்கலாம். ஜெகனாதனின் ப்ளாக்கில் இது போல ஒன்றை பார்த்தவுடன் உள்ளே நுழைந்துவிட்டேன்.

  தொடர்ந்து வருகிறேன்.

  அன்புடன்
  ராகவன்

  ReplyDelete
 8. சகோதரர் ஜெய்லானி, எனக்கும் அதே பிரச்சனையே.. தீர்வு தான் இன்னும் கிடைத்தபாடில்லை. விரைவில் சரி செய்துவிடுகிறேன்... இன்ஷாஅல்லாஹ்.

  ReplyDelete
 9. சகோதரர் ராகவன்,
  உங்களுடைய வருகை மகிழ்ச்சியளிக்கிறது.
  சற்றே பிஸியாக இருப்பதால், முன்னைப்போல பதிவுகள் எழுத முடிவில்லை. விரைவில் புத்துணர்வுடன் மீள வேண்டும், சந்திப்போம்.

  ReplyDelete
 10. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

  ReplyDelete
 11. பீர் அண்ணா!!!!!!!!!!ஏன் உங்களை காணவில்லை, மதுரைக்கு போயிட்டீகளா. இல்லை மறந்துபோயிட்டீகளா தங்கை தேடுகிறேன் ஓடிவாங்க...

  ReplyDelete
 12. இதுதான் நம் நாட்டின் நிலைமை.

  உங்கள் ப்ளோக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் உணர்வு மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

  ReplyDelete
 13. நல்லா பார்த்துக்க நானும் ரவுடி.

  ReplyDelete
 14. ################
  உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி
  http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
  ###########

  ReplyDelete
 15. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.