தமிழ்மணம் முதற்கட்ட வாக்கெடுப்பில் 'ஜெய்ஹிந்த்புரத்தின்' விளிம்புநிலை வியாபாரிகள் மற்றும் இஸ்லாமியர்களும் தீவிரவாதமும் என்ற இரண்டு இடுகைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வாக்களித்த பதிவர்களுக்கு நன்றி ! இறுதிச் சுற்றிலும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் பதிவர்கள், பொது வாசகர்கள் அனைவருக்கும் நன்றி !!! - பீர்.
ஜக்குபாய் - திரைக்கு வருவதற்கு முன்பே டிவிடி வெளியாகிவிட்டதாம். திரைத்துறையில் இருக்கும் சில 'பொதுநலவாதிகளே' மார்கெட்டில் வெளியிட்டதாக சொல்லப்படுகிறது. திரைத்துறை வியாபாரிகள் எல்லோரும் சேர்ந்து ஒப்பாரி வைக்கிறார்கள். ஜக்குபாய்க்கு சகுனம் சரியில்லை என்கிறார் ஒரு அறிவு ஜீவி. திருட்டி டிவிடி விற்பவனின் கையை வெட்ட வேண்டும் என்கிறார்கள். திருட்டு டிவிடியை ஒழிக்க தமிழக அரசு குண்டர் சட்டம் பாயும் என்கிறது.
குண்டர் சட்டம் பாயுமளவுக்கு இது குற்றமா? உண்மையில் தமிழகம் தடுக்கப்பட வேண்டிய வேறு குற்றங்கள் இல்லாத அமைதி பூங்காவாகிவிட்டதா? நெல்லையில் காவலரை கொல்லும் ரவுடி, அவரை காப்பாற்ற முடியாத அரசியல் தலைவர்கள். இவர்களை தண்டிப்பதைவிட சினிமாக்காரர்களுக்காக அறிக்கை விடுவதை முக்கியச் செய்தியாகக் காட்ட இந்தத் தொழிலில் என்ன இருக்கிறது? சினிமாக்காரர்களின் ஓட்டுக்காகத்தான் இந்த படங்காட்டப்படுகிறது என்பதையும் யாரும் சொல்ல மாட்டார்கள். கூத்தாடிகளில் எத்தனை பேருக்கு ஓட்டுப்போடும் தகுதியும், தமிழக வாக்குச்சீட்டில் பெயரும் இருக்கிறது என்பது அரசியல்வாதிகளுக்கும் நன்கு தெரியும்.இருந்தும் ஒரு சினிமாக்காரன் நடத்தும் விழாவிற்காக நம் பணத்திலிருந்து லட்சங்களை வாரி வழங்க தயாராக இருப்பதும், படோபட வாழ்க்கை நடத்தும் அவர்களுக்கு வீடுகட்டித்தரவிருப்பதும், தினம் அவர்களுக்காக அறிக்கை தயாரித்து முதலைக்கண்ணீர் விடுவதற்கும் என்ன காரணமாக இருக்க முடியும்? பணம். கணக்குவழக்கில்லாமல் கேட்கும் போதெல்லாம் கோடிகளை அள்ளிக்கொடுக்கத் தயாராக இருப்பது போலவே, கொள்ளையடிக்கும் கருப்புப் பணத்தை உள்வாங்கும் தொழில்துறை அது. கூத்தாடிகள் கையில் நாட்டை கொடுத்தால் குட்டிச்சுவராக்கிவிடுவார்கள் என்பதை மீண்டும் மீண்டும் மெய்பிக்கும் நிகழ்வுகள் நடந்தேருவது வருத்தத்தையே மிச்சப்படுத்துகிறது.
திருட்டு டிவிடிக்காரர்கள் கொடுக்கும் கமிஷன் அரசியல்வாதி முதல் காவல்துறை வரை பங்கு பிரிக்கப்படுகிறது. தயாரிப்பாளருக்கும் பங்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கைநீட்டி லஞ்சம் வாங்குபவர்கள், (இனி வருமானம் தடைபடும் என்பதை தவிர்த்து யோசித்தாலும்) நிச்சயம் காசு கொடுப்பவனுக்கு துரோகம் செய்ய மாட்டார்கள். எனவே திருடர்களாய் பார்த்து திருந்தாத வரை இத்திருட்டை ஒழிக்க முடியாது. டிவிடி திருடன் ஏன் திருந்த வேண்டும்? என்பதற்கான பொதுவான காரணம் எங்கும் சொல்லப்படவில்லை. நம் புத்திக்கு எட்டியவரை (பணம் கொடுத்து நாம் வாங்கும் டிவிடி எப்படி திருட்டு டிவிடியாகும் என்ற நுணுக்கங்களை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு) நாமே சிந்திக்கலாம்.

நமக்கும் திரைப்பட தயாரிப்பாளருக்கும் சம்பந்தமில்லை. திருட்டு(?) டிவிடி வியாபாரி பேர் கூட தெரியாது. ஆனால் நாம் நுகர்வோர். திருட்டுதனமாய் வாங்கி, திருட்டுதனமாய் ப்ரிண்ட் போட்டு, திருட்டுதனமாய் விற்கப்படும் டிவிடியை காசு கொடுத்து வாங்கி படம் பார்க்கும் திருட்டு டிவிடி பயனர். இந்த திருட்டு டிவிடியை வாங்காவிட்டால் நமக்கு என்ன நன்மை, வாங்குவதால் என்ன கேடுவந்துவிடப்போகிறது என்ற அளவிலேயே மிஸ்டர் காமன் மேன் சிந்திக்க முடியும், அவ்வளவே சிந்திக்கிறான். உண்மையை சொல்வதென்றால் திருட்டி டிவிடியால் நம் காமன் மேனுக்கு லாபமே. குடும்பத்துடன் ஒரு புதிய திரைப்படத்தை 20 ரூபாய்க்கு பார்த்துவிடுவதென்பது, நடுத்தரவர்க்கத்தின் அன்றாட செலவில் குறிப்படத்தக்க சேமிப்பை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகும்.
கோடிகளை கொட்டி படமெடுப்பதால் மட்டுமே மில்லியனில் லாபம் தர வேண்டும் என்று நினைப்பது முட்டள்தனம் என்பது போலவே, அந்த கோடி ரூபாய் படத்தை 20 ரூபாய்க்கு வாங்கி பார்த்தால் குண்டர் சட்டம் பாய வேண்டும் என்பதும். டிவிடியில் பார்த்தாலுமே மீண்டும் தியேட்டரில் பார்க்கத்தூண்டும் தரத்துடன் உங்களுடைய படைப்பு இருக்கவேண்டும்.உலகப்படங்களை உருவியாவது அந்த தரத்தை கொண்டுவாருங்கள் தவறில்லை.
திருட்டி டிவிடி விற்பனையில் வரும் பணம் தீவீரவாதத்திற்கு பயன்படுத்தப்படுவதாகச் சொல்லி கமல் என்றொரு நடிகன் மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார். டிவிடி வியாபாரிகளை தூக்கிலிட வேண்டும் எனுமளவுக்கு மேடை கட்டி நடிக்கும் கூத்தாட்ட வியாபாரிகள், பெரும்பாலான ஒலகப்படங்களை ஓசியில் டவுன்லோடு செய்தும், திருட்டு டிவிடியிலுமே பார்க்கிறார்கள்.டிவிடி தேயும் அளவு திரும்ப திரும்ப பார்க்கிறார்கள். போகட்டும்.. டிவிடி தேய்ந்தாலும் ரசிகனுக்கு உலகத்தரத்தில் ஒரு தமிழ்திரைப்படம் கிடைக்கிறதா என்றால் இல்லை.அந்தப்படங்களிலிருந்து காட்சிகளையும் தொழில் நுட்பங்களையும் திருடி 'எ ப்ளிம் பை' என்று கொட்டை எழுத்தில் தன் பெயரை பதித்துக்கொள்வதோடு மட்டுமில்லாமல். திருடி எடுத்தது யாருக்கும் தெரியாதிருக்க 'நான் இதுவரை உலகப்படம் பார்ததில்லை' எனும் பேட்டிகள் வேறு. உகாண்டா நாட்டு மொக்கைப்படத்தை காப்பி அடித்தாலும், சரியாக கண்டுபிடித்து எழுத இங்கே பலர் காத்திருக்கிறார்கள். ரசிகர்கள் அனைவரும் மொன்னைகள் என்று நினைத்துவிட வேண்டாம். மொன்னைகளில் சில ரசிகர்களும் உண்டு அவ்வளவே.
அது போக, எய்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்களை பரப்பும் விபச்சாரத்தை அங்கீகரிக்கச்சொல்லும் 'நியாயவான்கள்', நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் இல்லாத டிவிடி தொழிலை அங்கீகரிக்க சொல்லாததேன் என்பதும் புரியவில்லை. குண்டர் சட்டம் போட்டும் தடுக்க முடியாத திருட்டை 'சட்டபூர்வமாக அங்கீகரித்தால்' என்ன? இலவச வண்ண தொலைக்காட்டிப் பெட்டியும், ஒரு ரூபாய்க்கு அரிசியும் தரும் கருணாநிதி அரசு, புதிய திரைப்படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் வசதியையும் செய்து கொடுத்துவிட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளும் இப்போதிருக்கும் கம்பெனியே தொடர்ந்து சம்பாதிக்கலாம் என்பதை யாரும் சொல்லித்தரவில்லையா?
எது எப்படி இருந்தாலும் கதை, இசை, தொழில்நுட்பம், சக தொழிலாளியின் உழைப்பு இன்னபிறவற்றை திருடி எடுத்து பல சமூக குற்றங்கள் நிகழ காரணமாக இருக்கும் சினிமாவைத் திருடி டிவிடியில் விற்பதை நடுத்தரவர்க்கத்திற்கான ராபின் ஹூட் வகை 'சமூக சேவை' என்றும் சொல்லலாம்.
'திருட்டு டிவிடி ஒழிக்கப்பட வேண்டும்' என்று கீ போர்டை தட்டும் சினிமா வியாபாரிகளில் எத்தனை பேர் தங்கள் கம்யூட்டரில் ஜென்யூன் ஓ.எஸ் மற்றும் பிற ஸாஃப்ட்வேர் பாவிக்கிறார்கள் என்பதையும் நினைவில் நிறுத்தட்டும்.

- நான் திருட்டு டிவிடி வாங்கி படம் பார்ப்பதில்லை என்பதை ஒரு குறிக்கோளாகவே வைத்திருக்கிறேன். பின்ன... அரை தினாருக்கு வாங்கினாலும் ப்ரிண்டு அலையடிக்குதே.
- ஆமா.. இதுக்கு முன்ன திருட்டு விசிடிய ஒழிக்கணும்னு சொன்னாங்க. முற்றிலும் ஒழிஞ்சிடுச்சு. இப்போ திருட்டு டிவிடிய ஒழிக்கணும்னு சொல்றாங்க... இதுவும் ஒழிஞ்சிடுச்சுன்னா.. அப்போ அடுத்து திருட்டு டிவ் எக்ஸா?