Apr 22, 2009

பதிவுலகினர்காக - நயந்தாராவும் ஞானும் இன்னபிறவும் :)

நயந்தாராவும் ஞானும் இன்னபிறவும் :)

நயந்தாரா - அறிமுகம் தேவையில்ல, அதனால அத பத்தி அடுத்த பத்தில பார்ப்போம்,

ஞான் - அதாங்க நான் றத மலையாளத்தில அப்டிதான சொல்றாங்ஞ... அதாவது என்னையபத்தி இரண்டாவது பத்தி.

இன்னபிற - அதென்ன இன்னபிற, இன்னாபிற? எல்லா பதிவுலக பிரபலங்கலும் இந்த தலைப்பை வச்சு பதிவு போட்டாச்சு. அப்டினா? இந்த இன்னபிறவ தலைப்புல போட்டாத்தான்…

எங்க கடைலயும் கூட்டம் சேரும்னா...

சரக்கு விக்கும்னா...

ஹிட்ஸ் வாங்க முடியும்னா...

சூடான இடுகைல வர முடியும்னா...

பிரபலமாக முடியும்னா… (ஐ சொல்லியாச்சு)

தமிழில் பத்து கோடி ஹிட்டுகளை கடந்த முதல் தனிநபர் வலைப்பூவை மேய்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்! ன்னு நோட் போட முடியும்னா...

இன்னபிற முடியும்னா... முடியும்னா... முடியும்னா...

நானும் ஆட்டத்துக்கு ரெடி... (ஸ்..ஸ்.. அப்பா...இப்பவே... மூச்சு முட்டுதே)

இன்னுமொரு இன்னபிற - என் மனைவி குவைத் வரும்வரை நிறுவன வதிவிடத்தில் காலந்தள்ளிய போது மலையாளம் சம்சாரிக்காம்படிச்சு (அட.. பேச கத்துக்கிட்டேங்க). ஐந்து மாதம் முன்பு மனைவியும் மூன்றுமாத ஃபர்ஹானும் குவைத் வந்தபோது நானும் ஒரு ஃப்ளாட் எடுக்க வேண்டியதாப்போச்சு.

எங்க ஃப்ளாட்டுக்கு பக்கத்து ஃப்ளாட்ல ஒரு மலையாள பெண் கணவனுடன் தங்கியிருந்தாள். அவனுக்கு தமிழ் தெரியாது, மலையாளமும் ஹிந்தியும் தெரியும். எனக்கு தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் இன்ன பிறவும் தெரியும். (நம்ம பெருமைய நாமதான் சொல்லணும், கடைல வியாபாரம் சூடுபிடிக்கும் வரை)

நான் அவர்களை அறிமுகப்படுத்துவதற்காக அவர்களுடைய ஃப்ளாட்டிற்கு என் மனைவியை அழைத்துச்சென்றேன். அங்கு இவள் பேசும் தமிழ் அவளுக்கு விளங்கவில்லை, அவளது மலையாளம் இவளுக்கு விளங்கவில்லை, நான்தான் இருவருக்கும் மொழிபெயர்பாளனாக இருக்க வேண்டியதாயிற்று. இவளது மொழியை அவளுக்கும், அவளது மொழியை இவளுக்குமாய் பெயர்த்துக்கொண்டிருந்தேன். இதைச்சொல்லியே ஆக வேண்டும், (மரபு) கேரளா பெண்கள் இயற்கையிலேயே அழகும் அனைவரிடமும் தன்மையாய் சிரித்து பேசும் தன்மையும் கொண்டவர்கள். சிறிது நேரத்தில் அவளின் கேள்விக்கான என் மனைவியின் பதிலையும் நானே நேரடியாய் சொல்ல ஆரம்பித்துவிட்டேன். விளைவு???

நிற்க...

இது ஞான் -

இப்பவே... கண்ணகெட்டுதே...

ஞானும், நயந்தாராவும் நாளை.... என்ன சொல்றீங்க?

மதுர கைபுள்ள காமெடிக்கு கால் இல்ல...பாகம் 02

இக்கதையின் முதல் பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும்

'சர்ரா... கெளம்புடா எ கூட... இப்பவே சாருக்கான போய் பாப்போம்.'

'அண்ணே... வேணாணே...அண்ணே... அண்ணே... ஓடியடையாதுண்ணே... அண்ணே...

எனக்கு யாரையு தெரியாதுண்ணே...'

'தல. போ. தல... போ....போ.... டேய், தூக்குடா... தலய புடிடா... கால புடிடா...'

ஸ்கார்பியோவில் ஏத்திவிட்டு, கதவை அடைக்கிறார்கள்.

ஸ்கார்பியோ கதவு திறக்கப்படுகிறது. சாருக்கான் வீட்டு வாசல், சாருக்கான் ஓடி வருகிறார், 'கைப்புள்ள, எங்க இவ்லோ தூரம்? சொல்லியிருந்தா நானே வந்திருப்பேனே... வா வா என்ன விசயம் சொல்லு'

அண்ணே அதிர்ச்சியாகிறாப்டி, கூடவே கைப்பள்ளயும். அப்ரம்... கைப்புள்ள சிட்சுவேசன சமாளிச்சு அங்கருந்து… விட்ரா….. ஜூட்.......

போர வழில அண்ணே, 'ஏன்டா கைப்புள்ள, சாருக்கான எப்புர்ரா ஒனக்கு தெரியும்?'

'க்..க்..க்...நான்தான் சொன்னேன்லண்ணே.... நீ நம்பல..'

அப்பயும் அண்ணுக்கு சின்ன டவுட்...ஏதாவது கொன்டக்க மன்டக்க உள்வேல பண்ணாலும் பண்ணிருப்பானோனு.... 'வாடா கையி.. ஜனாதிபதிய போயி பாத்துட்டு வந்துடலாம்' (அண்ணே மனசுக்குள்ள ரெண்டு திட்டம், ஒன்னு, அவனுக்கு ஜனாதிபதிய தெரிஞ்சிருந்துச்னா அடுத்த ஜனாதிபதிக்கு தம்பேர சிபாரிசு பண்ண சொல்லிடலாம்… தெர்லன்னா, ஏரியாகுள்ள அலப்ர பண்ணதுக்கு... கைபுள்ளக்கு அதோ….ட ஆப்பு.)

(கை க்கும் உள்ளுக்குள்ள ஒதரல்தான், ஆனா...வெளிய காட்டிக்காம... என்ன வந்தாலும் பாத்துக்கலாம்னு...) சரிண்ணே, வா…போலாம்...

ஜனாதிபதி வீட்ல, பாதுகாப்பு சோதனல்லாம் முடிச்சுட்டு...

வீட்ல ஒக்காந்துருக்காங்க... (கைக்கு ஏற்கனவே பேஸ்மட்டம் வீக்ல... கால்லாம் நடுங்குது....)

ஜனாதிபதி வருகிறார், ஹே... கைபுள்ள.. வா வா எப்டி இருக்கீங்கோ? (உதவியாளரிடம்) கைபுள்ளக்கு சாய் லேகிஆனா..., 2 நாள் தங்கியிருந்துட்டு போ..கைபுள்ள, தேர்தல் நேரம்ல நான் கொஞ்சம் முக்கியமான வேலையா வெளிய போறே... ஒடம்ப பாத்துக்க கைபுள்ள... மெலிஞ்சுட்டே போற... சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட…

கைபுள்ள அண்ணன மொரச்சு பாக்குது...அண்ணே டர்ஸ் ஆராப்டி...

கைபுள்ளக்கு எப்பவும் மூல மட்டும்தான் வேல செய்யாது, அதோட சேர்த்து இப்ப கையும் வேல செய்யல காலும் வேல செய்யல..

அண்ணே ஆஃப் ஆனத பாத்தவொட்ன, கைபுள்ள ஓவரா ஏற ஆரம்பிச்சுடுச்சு...

அண்ணே நீ என்னய போயி சந்தேகப்பட்டியேண்ணே... சர்ணே இப்ப சொல்லு.. ஒனக்கு வேற யார பாக்கனும்? சொல்ணே... இப்பசொல்லு..இப்பசொல்லு..இப்பசொல்லு..

அட...சொல்லு...சொல்லு...சொல்லு...

அண்ணே.. டக்குனு, 'ஒபாமா' ன்டாப்டி... (அண்ணனுக்கு கொஞ்ச நாளாவே ஒலக அரசியல்ல ஒரு கண்ணு)

கைபுள்ளக்கு தெகிரியம், நம்மள மதுர ஆத்தா மீனாச்சி தான் காப்பாத்துறான்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டு... வாண்ணே வண்டிய எடுணே போகலாம்னுச்சு...

அண்ணே, 'கைபுள்ள மாட்ணடா மவனே.... ஒபாமா அமெரிக்கால இருக்காருடா' னுட்டு...கைபுள்ளய ஃப்ளைட்ல ஏத்தி, அமெரிக்கால போய் எரக்கி விட்டாப்டி.

கைபுள்ள அசரல, 'இவ்லோ தூரம் ஒத்தாச பண்ண ஆத்தா இனியும் பண்ணுவான்னு' ஒபாமாவ பாக்க போனா...

அவரு முக்கியமான குடியரசு கட்சி மாநாட்ல இருக்காப்டி. நம்ம ஊரு மாரி அங்க மேடைல கூட்டமால்லாம் இருக்க மாட்டங்ஞலாம்ல... ஒபாமா மட்டும் தனியா நன்னுதான் பேசிட்ருக்காப்டி.

லச்ச கணக்ல சனம் கூடி நின்னு பேச்ச கேட்டுட்ருக்கு.

கைபுள்ளயும் அண்ணணும் கடேசில நிக்கிராங்ஞ.....

கைபுள்ள ஓசிக்கிது....'இப்டி நின்னுட்டேருந்தா....ஒன்ன்னும் ஓடியடையாது, நம்மதான் ஏதாவது செஞ்சாகனும்'

'அண்ணே நீ இங்கயே நில்ணே, நான் ஒபாமா பக்கத்ல போயி கைகாட்றேனுட்டு கெளம்பிடுச்சு.

அப்டியே வெரசா போயி... அங்கிட்டு நின்னவேன் கைய கால புடுச்சு, கவுட்டுக்குள்ள போயி...... மேட ஏறிடிச்சு.

"கைபுள்ள ஒபாமா பக்கத்ல நன்னு கைய காட்டுது."

கைபுள்ள அண்ணே பக்கம் பாத்து ஒரு லுக் விடுது, (அந்த லுக் ல அண்ணணுக்கு லக் இல்ல, அன்-லக்கிலுக்)

கொஞ்ச நேரத்துல அண்ணே மயக்கம்போட்டு விழுந்துட்டாப்டி.

கைபுள்ள (பாசக்கார பயபுள்ளைல) ஓடிவந்து தண்ணிய கிண்ணிய தெளிச்சு... அண்ணன எழுப்பிவிட்டு கேட்டுச்சாம், 'ஏண்ணே இப்டி பண்ணிபுட்ட... அப்டி என்ன புதுசா பாத்துப்புட்ட? எப்பவும் நடக்றது தானணணே?' என்று கேட்க,

அண்ணே சொன்னாப்டி, 'கைபுள்ள, நீ மேடல போயி கை காட்டுனத கூட தாங்கிட்டேன்டா.... ஆனா, என் பக்கத்ல நன்ன ஒருத்தன் கேட்டான், 'ஆமா... கைபுள்ள பக்கத்ல நின்னு ஒருத்தன் மைக்ல பேசிட்ருக்கானே, யாரவன்?' னு...

Apr 21, 2009

மதுர கைபுள்ள காமெடிக்கு கால் இல்ல...

வர வர கைப்புள்ளயோட அலப்பர ஏரியாக்குள்ள தாங்க முடியாம போச்சு. எப்ப பார்த்தாலும் நாங்க போகாத ஊரில்ல பார்க்காத ஆள் இல்ல. திருப்பரங்குன்றம், திருமங்கலம்....... இந்த ரேஞ்சுக்கு நாங்கல்லா...அ..அ..அ... ன்னு அழிம்பு பண்ணிக்கிட்டிருந்துச்சு. லேட்டஸ்டா...இப்ப, அரசியல் ஆர்வம் வேற வந்துடுச்சா?, டேய்... நேத்து வந்த பயபுள்ள, காச காட்டி சீட்ட வாங்கிபுட்டான். நாம பரம்பர பரம்பரயா.. கட்சிக்கு உயிர குடுத்துக்கிட்ருக்கோம். வட்டத்ல கூட ஒரு பதவி தர மாட்டேங்கிராய்ங்க......

உடனே கைப்புள்ளயோட கையாள் வாலு, 'தல...( காதுக்குள்ள ) ஒனக்கு ஏது தல பரம்பரல்லாம்? (சத்தமா) நீ ஒரு வார்த்த சொல்லு தல... அவன உண்டு இல்லனு பண்ணிருவோம்..'

"ஆமா.. போங்கடா...டுபுக்குகளா..., ஆள பாத்தா.. நல்லவன் மாதிரியேயேயே தெரியிராய்ங்க..ஆனா உடம்பெல்லாம் வெசம். அவன்ட போய்.. என்னய போட்டு குடுத்து, கறவ மாடும் பத்தாயிரமு வாங்றதுக்கு... _____ மூடிட்டு போங்கடா... எங்கொய்யால."

'தல சூடாயிடுச்சு... பக்கத்ல யாரும் நிக்காத... கூட்டம் போடாத.. போ...போ...போய்ட்டேரு.....'

அந்த நேரம் பாத்து...நம்ம கைப்புள்ளயோட தல, மதுர சிங்கம் 'கஞ்சா கெஞ்சன்', ஸ்கார்பியோல வர்ராப்டி. "டேய்ய்ய்ய்.... என்னடா... இங்க... சத்தம்..."

'அண்ணே... ஒண்ணுமில்லண்ணே... நீங்க போங்கண்ணே... நா பாத்துக்கிறேண்ணே... டாய்....எவன்டா... சத்தம் போட்டது..... ' இது நம்ம தல.

உடனே வாலு தலட்ட, 'தல நீதான் சவுன்டு குடுத்தன்னு ஒத்துக்க தல, என்ன செஞ்சிடுவாங்ஞனு பாத்துடுவோம்' 'அண்ணே எங்க தலதான்ணே 'நாங்க போகாத ஊரில்ல... பார்க்காத ஆள் இல்ல' னு சவுன்டு குடுத்தது, இப்ப என்னாங்குறீங்க?' என எகிற...

கைப்புள்ள மனசுக்குள்ள, 'அட வென்றுகளா..... இப்பிடி மாட்டிவிட்டுட்டாங்ஞ..."

உடனே பெரிய தல கோவமாயிட்டாப்டி, நம்ம கைப்புள்ளய பார்த்து, ' ங்கொய்யால...வாடா இங்க.... பெரிய இவனா நீ.... ஒனக்கு யார்ரா தெரியும், சொல்ரா..., சாருக்கான் தெரியுமாடா?

நம்ம கைப்புள்ளக்கி தேட்டர்ல விக்ற 'பாப்கான' விட்டா வேற எந்த கானயும் தெரியாது.

கைப்புள்ள பதில் சொல்றதுக்கு முன்னாடி வாலு உள்ள வந்துட்சு, ' எங்க தலக்கி ச்சார்கான்லருந்து பாப்கான் வரக்கும் எல்லா கானையு தெரியும்' அந்த கான்ட போய் தல பேர சொல்லிபாருண்ணே, பயந்து நடுங்குவாப்டி'

'சர்ரா... கெளம்புடா எ கூட... இப்பவே சாருக்கான போய் பாப்போம்.'

'அண்ணே... வேணாணே...அண்ணே... அண்ணே... ஓடியடையாதுண்ணே... அண்ணே...

எனக்கு யாரையு தெரியாதுண்ணே...'

அப்பறம் என்னாச்சுனு.. கைபுள்ளய ஃபாலோ நாளைக்கு சொல்றேங்க...

இரண்டாம் பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும்