Apr 9, 2009

சந்தைப்படுத்துதல் - சிறுகுறிப்புகள்

1.நீங்க விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ண பாக்கறிங்க, நேரா அவள்ட போய் , "நான் பணக்காரன், என்னை கல்யாணம் பண்ணிக்கிரியா? " - நேரடி சந்தைப்படுத்துதல்(Direct Marketing) 2.நீங்க கூட்டமா பசங்களோட விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ண பாக்கறிங்க, நம்ம பசங்கள்ள யாராவது ஒருத்தன் அவள்ட போய், " இவண் பணக்காரன், கல்யாணம் பண்ணிக்கோ" - விளம்பரம் (Advertising)

3.நீங்க விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ண பாக்கறிங்க, நேரா அவள்ட போய் (அல்லது அவளோட தோழிகளிடம்) அவளுடைய தொலைபேசி எண் வாங்கிட்டு அடுத்தநாள் தொலைபேசியில் அழைத்து,"நான் பணக்காரன், என்னை கல்யாணம் பண்ணிக்கிரியா?" - தொலைபேசி வழி சந்தைப்படுத்துதல் (Telemarketing) 4.நீங்க விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ண பாக்கறிங்க, எழுந்து நின்று சட்டையை சரி பண்ணிவிட்டு அவளுக்கு சாம்பார் ரசம் மோர் ஊத்தி, நான் வேணா வண்டில கொண்டு போய் உங்க வீட்ல விடட்டுமா? (Offer) வண்டில போகும் போது,"ம்ம்.. ம்ம்.. "நான் பணக்காரன், என்னை கல்யாணம் பண்ணிக்கிரியா? " - பொதுமக்கள் தொடர்பு (Public Relations) 5.நீங்க விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ணு உங்கள பாக்குறா. நேரா உங்கள்ட்ட வந்து," நீ பணக்காரன், என்னை கல்யாணம் பண்ணிக்கிரியா? " - வர்த்தக குறி அறிதல் (Brand Recognition) 6.நீங்க விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ண பாக்கறிங்க, நேரா அவள்ட போய் , "நான் பணக்காரன், என்னை கல்யாணம் பண்ணிக்கிரியா?..... அவள் உடனே உங்கள் கன்னத்தில் செருப்பால் அடித்தால் - வாடிக்கையாளர் பின்ஊட்டு (Customer Feedback) 7.நீங்க விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ண பாக்கறிங்க, நேரா அவள்ட போய் , "நான் பணக்காரன், என்னை கல்யாணம் பண்ணிக்கிரியா?..... அவள் தனது கணவனை உங்களுக்கு அறிமுக படுத்துகிறாள் - கிராக்கி மற்றும் விநியோக இடைவெளி (demand and supply gap) 8.நீங்க விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ண பாக்கறிங்க, நேரா அவள்ட போய், ஏதும் சொல்றதுக்கு முன்னாடியே, வேறொருத்தன் வந்து, "நான் பணக்காரன், என்னை கல்யாணம் பண்ணிக்கிரியா? ன்னு கேக்குறான், அவளும் அவனுடனேயே போய்விட்டால்..." - போட்டி உங்கள் சந்தைப்பங்கை சாப்பிடுகிறது (competition eating into your market share) 9.நீங்க விருந்துக்கோ கல்யாணத்துக்கோ போறீங்க; ஒரு அழகான வசீகரமான பொண்ண பாக்கறிங்க, நேரா அவள்ட போய் , "நான் பணக்காரன், என்னை கல்யாணம் பண்ணிக்கிரியா? " அப்டின்னு சொல்றிங்க... உங்க மனைவி வர்றாங்க. - புதிய சந்தைக்குள் நுழைய கட்டுப்பாடு (That's restriction for entering new markets)

Apr 7, 2009

சிரிங்க... சிரிங்க...

1. பெண்களுக்கு 35 க்கு பிறகு குழந்தை வெண்டுமா? இல்லை 35 குழந்தைகளே அதிகம். 2. பராசுட் திறக்கவில்லை என யாரும் இதுவரை புகார் செய்தது இல்லை. 3. பூமியில் வாழ்வது காஸ்ட்லி தான், ஆனால் அதில் வருடம் ஒரு முறை சூரியனை சுற்றுவதும் அடங்கும். 4. உனது எதிர்காலம், நீ காணும் கனவை பொறுத்தது. போ விரைவில் தூங்கப்போ. 5. ஆல்கஹால் மெதுவாய் கொல்லுமாம், அதனாலென்ன யாருக்கு அவசரம்? 6. கடவுள் நம்மை உறவினருடன் படைக்கிறான், நல்ல வேலை நண்பர்களை நாமே தேர்ந்தெடுகலாம். 7. வேறு யாரும் செய்ய முடியாத ஏதாவது உன்னால் செய்ய முடியுமா? ஆமாம், என்னால் மட்டுமே என் கையெழுத்தை வாசிக்க முடியும். 8. உங்கள் வீட்டு பூனை அதன் பெயர் சொல்கிறதாமே? ஆமாம், அதன் பெயர் மியாவ். 9. ஒரு பெண்ணிடம் கேட்கப்பட்டது, உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம்? அவள், "என் கணவனின் செக் புத்தகம்". 10. சாப்பிடுவதற்க்கு முன்பு பிராத்தனை செய்வீர்களா? அதற்கு அவசியம் இல்லை, என் மனைவி நன்றாக சமைபாள்.  

Feb 20, 2009

ஈகை

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது A help rendered in hour of need though small is greater than the world. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந் தாற்றின் அடங்கப் பெறின். அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும் Knowing wisdom who lives controlled name and fame seek him untold. அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை தன் மீது குழி பறிப்போரை தாங்குகின்ற பூமியை போல தம்மை இகழ்ந்து பேசுகின்றவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும் As earth bears up with diggers too to bear revilers is prime virtue - குறள்