Oct 30, 2010

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீடு செய்ய நான் தயார்

நான் இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறேன். இங்கு தொழில் செய்வதற்கு ஒரு நம்பிக்கையான துணையை தேடிக்கொண்டிருக்கிறேன். கைவசம் XXXXX பணம் இருக்கிறது. .................

இப்படியாகச் செல்கிறது அந்த மின்னஞ்சல். அது அப்படியே இங்கே...

Dear Friend.
Good day to you, I am so sorry for sending you unsolicited mail, I got your contact from a Gulf Business directory I saw in my agents office and decided to contact you directly for the sake of business,
 
My name is steven madurn from Gambia. I am now in United Arab Emirates searching for a reliable business partner, I have about 5.5 million dollars and would want to invest it here in Dubai, am only soliciting for your assistance to help me .If you are willing to invest in this business please give me your confidential,

contact phone number so that we can see and discuss in details.
Thank you once again for your interest.
Steven madurne

அது இன்று மதியம் என்னுடைய பெட்டியில் வந்து கிடந்தது. என்னால் முடிந்த வரையில் முதல் இரண்டு வரியை மட்டும் தமிழில் படுத்தியுள்ளேன். அதில் சொல்லப்பட்டுளளள 5.5 மில்லியன் என்பதற்கு எத்தனை பூஜ்யம் அதை எவ்வாறு இந்திய மதிப்பில் மாற்றுவது என்பது கூடத் தெரியாத என்னை எப்படி தேர்ந்தெடுத்தார்கள். நான் பிஸினஸ் செய்வதாகவோ, செய்யப்போவதாகவோ எந்த ஒரு பொதுத்தளத்திலும் சொன்னதில்லையே. அல்லது நான் செய்யப்போகும் பிஸினஸ்க்கு பணம் வேண்டும் என்று கூட யாரையும் கேட்டதில்லை. ஒருவரைத்தவிர, ஒரு வேளை அவர்... ச்சே ச்சே. வாய்ப்பில்லை. பிள்ளை பூச்சி அவர். ரொம்ம்ம்ப நல்லவர் கூட.  அது கிடக்கட்டும்...

இது போன்ற மின்னஞ்சல்களில் மட்டுமே மயங்கிவிடுவோம் என்று எப்படி நம்புகிறார்கள்? ஒருவேளை இதில் மயங்கி மடிபவர்களும் இருப்பார்களோ? ஒருவேளை மடலின் நடுவே மானே, தேனே, பொன்மானே இதெல்லாம் போட்டிருந்தால் கூட நானோ அல்லது அன்புக்கு அடிமையாகும் சக அன்பர்களோ மயங்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இத்துடன் டீ செலவுக்கு பணம் அனுப்பியுள்ளோம் என்றாவது இருந்திருக்கலாம். எதுவும் இல்லாமல் வெறுமனே.. ச்சே. என்ன பிஸினஸ் ப்ரப்போஸல் இது.

நானும் ஒருவருக்கு பிஸ்னஸ் ப்ரப்போஸ் செய்திருந்தேன். நாம் இருவரும் பாட்னர்ஸ். இருவருமே ஒர்கிங் பார்ட்னர்ஸ், (இருக்கும் இடத்திலிருந்தே) லாபத்தில் இருவருக்குமே பங்கிருக்கிறது. மட்டுமல்லாது, இதில் நீங்கள் பண முதலீடும் செய்ய விரும்பினால் அதற்கென தனியான லாபமும் கணக்கிடப்படும். ப்ராடக்ட் தயாரான உடனே, உங்களது அறிவு முதலீட்டிற்கான கூலி தரப்படும், சரக்கு விற்பனையாகும் போது பண முதலீட்டிற்கான லாபமும் கணக்கட்டு பகிரப்படும். இதுதான் நம்ம ப்ரப்போஸல். நீங்கள் தயார் என்றால் மேலே பேசலாம். 

அவர் இன்னும் தயாராகவில்லை, அவருக்கென வடிவமைத்த அந்த ப்ராடக்ட் அப்படியே நிற்கிறது.

6 comments:

  1. lets spread this kind of cheating and try to lodge cyber crime complaint.

    ReplyDelete
  2. நானும் நானும் தயாருங்கோ

    முதலீட்டார்கள் லைனில் வரவும்

    ReplyDelete
  3. lets spread this kind of cheating and try to lodge cyber crime complaint.

    ReplyDelete
  4. //நான் செய்யப்போகும் பிஸினஸ்க்கு பணம் வேண்டும் என்று கூட யாரையும் கேட்டதில்லை. ஒருவரைத்தவிர//

    அஞ்சறை மில்லியன் டாலர் தர்றேன்னு சொன்னாங்கன்னா, சத்தம் காட்டாம அதை வாங்கிப் பையில் போட்டுக்காம, ஊருக்கே மைக் வச்சு சொல்ற உங்கள நம்பி இன்வெஸ்ட் பண்றேன்னு சொல்ற/சொல்லப்போற அப்பாவி யாருங்க? :-)))

    ReplyDelete
  5. என்னை மாதிரி தெரிய தொழில் அதிபர்கள் அமீரகத்திலேயே இருக்கும்போது அந்த டுபாக்கூர் உங்களை என் தேர்ந்தெடுத்தான்....வெரி பேட்.... இனிமே மெயில் வந்தா என்னோட கான்டாக்ட்ஸ் குடுங்க...
    ராக்ஃபெல்லர் கூட கான்பிரன்ஸ் இருக்கு வர்ட்டா... ... :)

    ReplyDelete
  6. //சரக்கு விற்பனையாகும் போது பண முதலீட்டிற்கான லாபமும் கணக்கட்டு பகிரப்படும். இதுதான் நம்ம ப்ரப்போஸல். நீங்கள் தயார் என்றால் மேலே பேசலாம். //

    அட, இந்த டீல் நல்லாருக்கே.. இது குறித்த மேலதிக விபரங்கள் என் தனிமடல் முகவரிக்கு அனுப்ப முடியுமா?
















    இப்படியெல்லாம் எதிர்பார்த்துத்தானே இந்தப் பதிவு? :-))))))))))

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.