Jan 5, 2010

உங்கள் தங்கமணியிடம் உதை வாங்குவது எப்படி?

திருமணம், விருந்து போன்ற நிகழ்வுகளில்...
தங்ஸ்ஸயே சுத்தி சுத்தி வாரீங்க >>> ம்.. பொழச்சு போங்க.
அப்படி சுத்தி வரும்போது சக பதிவரிடம் சீரியஸா பேசறீங்க >>> மூக்கிற்கு மேல் கோபத்தை பார்க்கலாம்.
அப்படி பேசும் போது இடையே ஹாய் சொல்பவருக்குப் பெயர் ரீடா, கீதா, ஜமீலா வாக இருந்துவிட்டால் >>> மூக்கிற்கு கீழேயும் கோபத்தை கேட்கலாம்.
அவர் உண்மையில் அழகி, புத்திசாலியும் கூட >>> வாழ்த்துக்கள்... உதை உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

தங்ஸ் பிறந்தநாளின் போது...
வெளியே அழைத்துச் சென்றால் >>> ம்.. பொழச்சு போங்க.
அந்த இடம் உங்கள் விருப்ப இடமாக (மட்டும்) இருந்தால் >>> மூ. மே. கோ.
அங்கு தங்கஸ்க்கு பிடித்த டிஷ்/பொருள் கிடைக்காவிட்டால் >>> மூ. கீ. கோ.
இதையெல்லாம் விட ஆரம்பத்திலேயே பிறந்தநாள் தேதியை மறந்து (நினைவிருந்தாலும்) தொலைத்துவிட்டால் >>> வாழ்த்துக்கள்... உதை உறுதி செய்யப்பட்டுவிட்டது.

தங்ஸ் சமைத்த உணவை சுவைக்கும்(?) போது...
ஒன்றும் பேசாமல் சாப்பிட்டால் >>> ம்.. பொழச்சு போங்க.
அட.. சுடுதண்ணி நல்லா பண்ணியிருக்கம்மா >>> மூ. மே. கோ.
இன்னிக்கும் அதே சாம்பாரா >>> மூ. கீ. கோ.
எங்க அம்மா சாம்பார் நல்லா வெப்பாங்க >>> வாழ்த்துக்கள்... உதை உறுதி செய்யப்பட்டுவிட்டது.

தங்ஸ் கூட சினிமாவிற்கு செல்லும் போது...
சினிமா தங்ஸ்க்கு பிடிச்சிருக்கு >>> ம்.. பொழச்சு போங்க.
அதே சினிமா உங்களுக்கு பிடிக்கவில்லை >>> மூ. மே. கோ.
உங்களுக்கு பிடிச்சிருக்கு, தங்ஸ்க்கு பிடிக்கவில்லை >>> மூ. கீ. கோ.
அந்த சினிமா உலகத்தரத்தில் இருந்தால் >>> வாழ்த்துக்கள்... உதை உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

தங்ஸ், உங்களிடம், 'இந்த ட்ரெஸ் எனக்கு எப்பிடியிருக்கு?' என்று கேட்கும் போது...
நீங்கள், 'நீ உடுத்தியிருப்பதால் தான் இந்த உடைக்கே அழகு' >>> ம்... பொழச்சு போங்க.
நல்லாயிருக்கு.. நல்லாயிருக்கு >>> மூ. மே. கோ.
அந்த நீலக்கலர் இதைவிட நல்லாயிருக்குமே >>> மூ. கீ. கோ.
வேறு ஏதாவது ஏடாகூட உண்மை சொல்றீங்க >>> வாழ்த்துக்கள்... உதை உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

தங்ஸ், உங்களிடம் ஏதாவது பிரச்சனை பற்றி பேசும் போது...
லேப்டாப்பை மடித்துவைத்துவிட்டு கேட்டுக் கொண்டிருந்தால் >>> ம்.. பொழச்சு போங்க.
பின்னூட்டமிட்டுக்கொண்டே ம்.. ம்... என்று மட்டும் சொன்னால் >>> மூ. மே. கோ.
நீங்களும் திரும்ப ஏதாவது அறிவுரை சொன்னால் >>> மூ. கீ. கோ.
தங்ஸ் பேசிக்கொண்டிருக்கும் போது, நீங்கள் குறட்டைவிட்டால் >>> வாழ்த்துக்கள்.. உதை உறுதி செய்யப்பட்டுவிட்டது.

இனி வரப்போகும் நாட்களில் இன்னும் அதிகமாக டிப்ஸ் கிடைக்க வாய்ப்பிருக்கிறது :-)

36 comments:

  1. இதுநம்ம ஏரியா கிடையாது. இருந்தாலும் ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்காக வந்தேன்... பின்னாடி உதவும்... :-)

    ReplyDelete
  2. போனிலேயே நிறைய உதை வாங்குவிங்க போலயே!

    ReplyDelete
  3. இது எனக்கு அவுட் ஆஃப் சிலபஸ். ஆனா, ஆப்பு சிலபஸா மாறம, இருக்குறதுக்காக கேட்டுக்குறேன்.

    ReplyDelete
  4. ஹா ஹா ஹா. ஏன் ஏன் ஏன்னு கேட்டேன். மத்ததுக்கெல்லாம் மக்கள் (நான் அவன் இல்லை) வாங்குறது பத்தாதுன்னு புதுசா வேற யோசனை சொல்றியளே சீதேவி.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்!!! உடம்பை பத்திரமா பார்த்துக்கங்க..

    ReplyDelete
  6. &&&&
    தங்ஸ் சமைத்த உணவை சுவைக்கும்(?) போது...
    ஒன்றும் பேசாமல் சாப்பிட்டால் >>> ம்.. பொழச்சு போங்க.
    &&&&

    அப்படியா ! ரொம்ப்ப்ப நல்ல தங்க்ஸ் போல :)-

    ReplyDelete
  7. அனுபவமா?

    பாவம் நீங்க.

    ReplyDelete
  8. அனுபவம் பேசுகிறது.

    ReplyDelete
  9. ♠ ராஜு ♠ said...
    //இது எனக்கு அவுட் ஆஃப் சிலபஸ். ஆனா, ஆப்பு சிலபஸா மாறம, இருக்குறதுக்காக கேட்டுக்குறேன்.//

    இதை நான் வழிமொழிகிறேன்.

    சட்டுன்னு பினாத்தலார், மற்றும் அவர் நண்பர் ராமமூர்த்தி நடராஜன் ஞாபகம் வருவது தவிர்க்கமுடியவில்லை.

    ReplyDelete
  10. பிரதாப், அந்த பிலிப்பைனி கூட தங்ஸ் கேட்டகிரி வருவாங்க :-)

    வால், அவ்வ்வ்... கம்பெனி சீக்ரட் வெளிய சொல்லாதீங்க.

    ராஜூ, அவுட் ஆஃப் சிலபஸ்ல ஏதும் டவுட் இருந்தா தனியா கால் பண்ணுங்க.

    நவாஸூதீன், ஏதோ நம்மால முடிஞ்ச சின்ன உதவி.

    லோகு, இது ரொம்ப ஓவர். நீங்களும் இந்த நிலைக்கு வந்துதான் ஆகணும்.

    மணி, உங்க கிட்ட இன்னும் நிறைய மேட்டர் இருக்கும் போலருக்கே. கொஞ்சம் ஷேர் பண்ணுங்க பாஸ்.

    TVR சார், இந்த புன்னகைக்கு அர்த்தம் புரியல... (சேம் ப்ளட்?)

    ஷாகுல், வாங்க.. நீங்களும் எழுதுவீங்க. காத்திருக்கிறேன்... ஆனா அப்ப வந்து பாவம்னு சொல்ல மாட்டேன்.

    வாங்க கண்ணகி, லேபிள்ல அனுபவம்னு போடல இருந்தாலும் கண்டுபிடிச்சுட்டீங்க. ஆனா... பாதிதான் அனுபவம் மீதி அறிவுரை. :)

    ReplyDelete
  11. பாலா, அந்த மாடி வீட்டு மேட்டரும் நினைவு வருதா?

    ReplyDelete
  12. நீங்க வாங்கியது பத்தாதுன்னு நாங்களும் வாங்கனும்னு பதிவ போட்டுட்டீங்க..
    என் தங்கமனி வேற இத படிச்சாச்சு.... இனி........?

    ReplyDelete
  13. //பின்னூட்டமிட்டுக்கொண்டே ம்.. ம்... என்று மட்டும் சொன்னால்//

    ப்ராக்டிக்கலா யோசிக்கிறாங்கய்யா...ஹி..ஹி ‍ மத்ததெல்லாம் சங்க காலம் முதல்ல இருந்துச்சாம், பதிவாளரா புரோமோஷன் கிடைச்சதும் இதுவும் சேர்த்துக்குட்டாங்க‌ போல.

    ReplyDelete
  14. பல தடவை உதை வாங்கிருக்கு போல???

    ம்ம்ம்ம்...

    ReplyDelete
  15. அனுபவம் போதாதுன்னு தெரியுது!! நீங்கல்லாம் என் ரங்ஸ்கிட்ட ட்ரெய்னிங் எடுக்கணும்!! இதுவரைக்கும் என்கிட்ட அவர் திட்டு வாங்கினதே கிடையாது தெரியுமா?

    ReplyDelete
  16. ரீடா, கீதா, ஜமீலா......ஹ்ம்ம் ஓகே ஓகே....
    அது எப்படி பாஸ் கேர்ள் பிரென்ஸ்ல குட மதநல்லிணக்கம் பண்றீங்க.

    ReplyDelete
  17. அருமை :))) இங்கயும் அதே அதே

    ReplyDelete
  18. இந்த இடுகைக்கு வாக்களித்து தமிழ்மண முகப்பில் வரச்செய்த முகம் தெரியா நண்பர்களுக்கும், தமிலிஷ் முகப்பில் வரச்செய்த..

    syednavas
    mohamedFeros
    balavinblog
    sridharrangaraj
    samioline
    Kalakalapriya
    boopathee
    vilambi
    paarvai
    urvivek
    ambuli
    bhavaan

    அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  19. சங்கவி, உங்க தங்கமணி படிச்சாச்சுன்னாலே.. நீங்க எஸ்கேப்புன்னு அர்த்தம். எஞ்சாய்.. ;)

    ஷஃபி, பதிவாளராகிட்டா இப்படித்தான் யோசிக்கணும். (ஆமா.. அதென்ன சார் பதிவாளர்?)

    மஸ்தான், கொம்பெனி சீக்ரட் வெளியே சொல்லப்பட மாட்டாது. (மீசையில் மண் இல்லை)

    வாங்க ஸ்ரீ,

    ஹூசைனம்மா, சார் உங்களை நல்லா புரிஞ்சுவச்சிருக்காருன்னு நினைக்கிறேன். அதாங்க..நல்லா ஏமாத்துறாருன்னு.

    நன்றி சிவக்குமரன்,

    சாம், நீங்க கலகத்த உண்டுபண்ணிடாதீங்க ;)

    நன்றி மோகன்குமார், ஸேம் ப்ளட்?

    கலகலப்ரியா, முடியல.. இல்ல?

    நன்றி அக்பர்,

    ReplyDelete
  20. ம்ம்ம்ம் , சரிசரி

    ReplyDelete
  21. சீக்கிரம் ஊருக்கு போறீங்க

    வா.உ.நி.

    ReplyDelete
  22. தங்கமணிகளுக்கு எதிரா இப்படி எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்க.

    வாங்க ஹுசைனம்மா, சின்ன அம்மிணி திரும்பவும் கமிட்டி கூட்டி ஹஸ்பண்டாலஜி -09 ஆரம்பிச்சிடலாம்.

    :))

    ReplyDelete
  23. <<<
    இந்த இடுகைக்கு வாக்களித்து தமிழ்மண முகப்பில் வரச்செய்த முகம் தெரியா நண்பர்களுக்கும், தமிலிஷ் முகப்பில் வரச்செய்த..
    >>>

    இதுக்கே நன்றியா??? அரசியலில் வருகிற எண்ணம் இருக்கிறது போல???

    வருங்கால அமெரிக்க ஜனாதிபதி பீர், வாழ்க வாழ்க :D

    ReplyDelete
  24. //இதுக்கே நன்றியா??? அரசியலில் வருகிற எண்ணம் இருக்கிறது போல???//

    ஊருக்குப் போறதுக்கு முன்னாடியே அந்தக் காத்து அடிச்சிருச்சு போல.. அதுவும் மதுர.. அதான்...

    தமிழிஷ்காரங்ககிட்டயும் சொல்லி ஓட்டுபோட்டவங்க டீடெய்ல்ஸ் பொடுக்காதீங்கன்னு சொல்லணும், அப்பத்தானே ஓட்டு போடாட்டியும் போட்டாச்சுன்னு சொல்லிக்கலாம்..

    //அதென்ன சார் பதிவாளர்?//

    பதிவாளர்னா ரிஜிஸ்ட்ரார்தானே? யுனிவர்சிடி ரிஜிஸ்ட்ரார், மேரேஜ் ரிஜிஸ்ட்ரார், பத்திரப்பதிவு ரிஜிஸ்ட்ரார்....

    //திரும்பவும் கமிட்டி கூட்டி ஹஸ்பண்டாலஜி -09//

    அவர் ஊருக்குப் போறதுக்கு முன்னாடி தைரியமா செய்யக்கூடிய கடைசி விஷயம்; இனி அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல. அதனால மன்னிச்சி விட்டுறலாம் தென்றல்!!

    ReplyDelete
  25. தங்ஸ் சமைத்த உணவை சுவைக்கும்(?) போது...

    ஒன்றும் பேசாமல் சாப்பிட்டால் >>> ம்.. பொழச்சு போங்க.

    அட.. சுடுதண்ணி நல்லா பண்ணியிருக்கம்மா >>> மூ. மே. கோ.


    எங்க அம்மா சாம்பார் நல்லா வெப்பாங்க >>> வாழ்த்துக்கள்...


    Extreme dialogue

    ReplyDelete
  26. வாங்க சின்ன அம்மிணி, இதுக்கு அர்த்தம் என்ன? பெருமூச்சா.. பரிதாபமா? ;)

    ஜமால், நீங்க வாங்கிட்டிருக்கீங்க அதனால எனக்கு வாழ்த்துச் சொல்றீங்க..ம்.

    புதுகைத் தென்றல், நல்லாபார்த்து சொல்லுங்க, இது தங்கமணிகளுக்கு ஆதரவான பதிவு. இதுக்கே ஊர கூட்றியளே...

    மஸ்தான், அரசியல்ல இதெல்லாம் சாதாரணம். அதுகிடக்கட்டும் போயும் போயும் அமெரிக்க ஜனாதிபதி ஆக்கிட்டிங்களே. வேற நாடே கிடைக்கலையா? ஒரு காங்கோ, ஒரு ஷார்ஜா கூட பரவாயில்லைங்க.

    ஹூசைனம்மா, ஒட்டுபோடுபவர்களை குறுகுறவென வாட்ச் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கோம். தப்பிக்க முடியாது. இனி தவறாது ஓட்டு போடணும்.
    ரிஜிஸ்ட்ரார்; அப்போ இவங்க எல்லாருமே சார் பதிவாளர்களா?
    கடைசிவரி; நோ கமெண்ட்ஸ். :)

    வாங்க யுனிவர்ஸல், நன்றி.

    ReplyDelete
  27. தங்கமணியிடம் உதை வாங்குவது எப்படின்னு பதிவு போட்டிருக்கீங்க. எதுக்காககெல்லாம் உதை விழலாம்னு சொல்லியிருக்கீங்க.

    இதெப்படி தங்கமணிக்கு சப்போர்ட் செய்யும் பதிவு ஆகும்.

    http://pudugaithendral.blogspot.com/2010/01/blog-post_06.html இங்க போய் பதிவுகளை படிச்சு பாத்துட்டு அப்புறமா தங்கமணி பத்தின பதிவுகளை எழுதறதை பத்தி யோசிங்க

    :))))

    ReplyDelete
  28. புதுகைத் தென்றல்,
    ரங்கமணிகளுக்கு எதுக்கெல்லாம் உதை கொடுக்கலாம் என்ன நல்ல எண்ணத்தில் பதிவை படிச்சு பாருங்க.

    இது ஒரு பினநவீனத்துவ பதிவா தெரியும். :)

    ReplyDelete
  29. தங்கமணியிடம் உதை வாங்குவது எப்படி எனும் இந்தப் பதிவை வன்மையாக கண்டிக்கறேன்.

    :)

    ReplyDelete
  30. நாபாட்டுக்கு சும்மா இருக்கேன்.. உசுப்பேத்துறீங்க...

    ஸ்டார்ட் மீஜிக். :)

    'கொலைவெறியோடு தங்கமணி' புத்தம் புதிய மெகாத்தொடர் விரைவில்.

    புதுகைத் தென்றல், வரலாறு உங்களை மன்னிக்காது. :)

    ReplyDelete
  31. நாபாட்டுக்கு சும்மா இருக்கேன்.. உசுப்பேத்துறீங்க...

    ஸ்டார்ட் மீஜிக். :)

    'கொலைவெறியோடு தங்கமணி' புத்தம் புதிய மெகாத்தொடர் விரைவில்.

    புதுகைத் தென்றல், வரலாறு உங்களை மன்னிக்காது. //

    :)))) நிம்மதியா இருக்கு

    ReplyDelete
  32. இதுவரை உதை வாங்கினதிலிருந்து இதையெல்லாம் தெரிஞ்சுகிட்டீங்களா??

    இல்ல, வேற வழில தெரிஞ்சுகிட்டு.... இனிமே உதை வாங்காம தப்பிச்சுடலாம்னு இதை பகிர்ந்துகிட்டீங்களா?? :-))

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.