Dec 21, 2009

பேயோன், விளம்பரம், பதிவர்கள் - மினி ஜிகர்தண்டா


விஜய் டிவி நீயா நானாவில் நேற்றைய தலைப்பு; வாழ்கையை அதிகம் ரசிப்பது - சோம்பேறிகளா? சுறுசுறுப்பானவர்களா?. தலைப்புக்கு பஞ்சம் வந்துவிட்டதோ என்று நினைத்துக்கொண்டே, சுறுசுறுப்பான நம்ம அணிதான் வெற்றிபெரும் என்ற முன்முடிவோடு பார்த்துக்கொண்டிருக்கையில், கோபிநாத் உடைய ஆதரவு சோம்பேறிகளுக்கு இருந்தது அதிர்ச்சியளிக்கவில்லை. ஒரு சுறுசுறுப்பானவரை பார்த்து கேட்டார், 'இன்று உங்களை கடந்து சென்ற பெண்ணை ரசித்தீர்களா? அதை வர்ணிக்க முடியுமா?' நம்மாள் அதான் சுறுசுறுப்பானவரால் முடியவில்லை. ஒரு மழையைக்கூட அவரால் வர்ணிக்க முடியவில்லை. இவரையெல்லாம் யார் சுறுசுறுப்பானவர் பக்கம் சேர்த்தது? இவர்களுக்கு சுறுசுறுப்பிற்கும் துறுதுறுவிற்கும் வித்தியாசம் தெரியவில்லை. அவசரக்குடுக்கைகளைத்தான் சுறுசுறுப்பானவர் என்று நினைத்தே பேசிக்கொண்டிருந்தனர். இடையிடையே ஐ.டி கடைக்காரர்கள் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டே இருந்தனர். கடைசியில் ஒரு சுறுசுறுப்பானவர், 'அவரிடம் கேட்டீர்களே, இன்று கடந்து சென்ற ஒரு பெண்ணை ரசித்தீர்களா? அதை வர்ணிக்க முடியுமா என்று, என்னால் முடியும். நான் ஒரு பெண்ணை ரசித்தேன், இப்போதும் ரசிக்கிறேன்.' என்று தனக்கு முன் சோம்பேறிகள் அணியில் இருந்த ஒரு பெண்ணைக் காட்டினார். இருவரும் தங்களுக்குள் ஜாடையில் பேசிதையும் சொன்னார். அருமை... நிகழ்ச்சியில் ரசிக்கும்படியாக இருந்த செக்மண்ட் அதுதான்.

வந்தாச்சு வந்தாச்சு... ஒரு குண்டு மல்லிகா... என தொடங்கும் ஏதோவொரு சோப்பு விளம்பரம் என்னை மிகவும் கவர்ந்தது. ரசிக்கும்படியான காட்சியமைப்பு, த்ரிஷாவும் வருகிறாள், தேவையில்லாமல்.
பசங்க ஷோபிக்கண்ணு வரும் ஒரு விளம்பரமும் நைஸ்.
பிங்கோ சிப்ஸ் விளம்பரத்தில் ஒரு பெண் சிப்ஸ் தின்றுகொண்டே பாய் ஃப்ரெண்டிற்கு பறக்கும் முத்தம் கொடுக்கிறாள், அதை காதலன் தன் சட்டைப்பைக்குள் போட்டதும் தீப்பிடிக்கிறது. அவ்வளவு ஹாட்டாம்... சிப்ஸ். சூப்பர் தீம் இல்லையா? எவ்வளவு அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டாலும் ஒருசில விளம்பரங்களே மனதைக் கவர்கின்றன, பதிகின்றன. அதிலும் மிகச்சில மட்டுமே ப்ராண்ட் நேமையும் சேர்த்து மனதில் பதிக்கின்றன. அந்த வகையில் நிர்மா, லக்ஸ் ஸோப், வோடாபோன், வேட்டைக்காரன் போன்றவற்றிற்கு முதலிடம் தரலாம். சில விளம்பரங்கள் ப்ராண்ட் நேமையும் கெடுத்துவிடும் என்பதற்கு கடைசி விளம்பரமும் ஒரு உதாரணம்.

ஈரோடு வாழ் பதிவர்களால் 'ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமம்' அமைக்கப்பட்டுள்ளது. உங்களுடைய குறிக்கோள்கள், திட்டங்களை அறியவும் ஆவலாய் உள்ளேன் ஐயா. (இந்த உள்ளேன் போட்டாலே.. ஐயா அதுவா வந்து ஒட்டிக்கிடுது) குறிக்கோள்கள், செயல் திட்டங்களை இல்லாத எந்த குழுமமும் வரலாற்றில் இடம் படித்ததில்லை தெரிந்திருப்பீர்கள். உங்களுடைய பணிகள் சிறக்கவும், தொய்வடையாமல் தொடந்து நடைபெறவும் வாழ்த்துக்கள் நண்பர்களே. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் அண்ணன் கார்த்திகை பாண்டியன் தலைமையில் நாங்களும் ஒன்று கூடுவோம்ல.

அமீரகப் பதிவர்களும் ஒரு மாநாடு நடத்தியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அவர்களே தயாரித்து(?) இயக்கி(?) நடித்து(?) இசையமைத்து(?) கட்டமைத்து(?) பிரியாணி சாப்பிட்டு விளம்பரப்படுத்திய(!) மெகா திரைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். ஜோலி போயாலும் ஜீவிக்காம்... இல்லே. (அலுவலகத்தில் ஊடூப் காத்து புடுங்கிட்டானுக... வீட்டில போய்தான் பார்க்கணும்)

தமிழ்மணம் விருது 2009 க்கான வாக்கெடுப்பு நடந்து வருகிறது. சில ஆயிரம் தமிழ் வலைப்பதிவர்கள் இருந்தும் மிகச்சில இடுகைகளே விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது ஏன் என்பது புரியவில்லை. தங்கள் எழுத்தின் மேல் தங்களுக்கே நம்பிக்கை இல்லாத பதிவர்களா? அல்லது இணையத்தில் எழுதுவதெல்லாம் எழுத்தே அல்ல என்ற வகையில் இருப்பவர்களா என்பதும் தெரியவில்லை. பரிந்துரைக்கப்பட்டுள்ள இடுகைகளில் நான் முன்பே வாசித்திருப்பவை மிகச்சில மட்டுமே. அவற்றிற்கு எனது வாக்கை யோசிக்காமல் அளித்துவிட்டேன். அதில் என்னுடைய இரண்டு இடுகைகளும் அடங்கும். நான் நேசிக்கும் என் எழுத்து.

ஒரு பாடல் தொலைக்காட்சியிலோ, வானொலியிலோ அல்லது வேறு ஊடகத்திலோ ஒலிபரப்பாகும் போது அதனுடன் நாமும் சேர்ந்து பாடினாலோ அல்லது குளியலரையில் பாடினாலோ இனிமையாக ஒலிக்கும் நம் குரலை தனியாக பாடும்போது நாமே சகிக்க முடியவதில்லையே... ஏன்? - சின்னப்பையன்.

ட்விட்டரில பல சுவாரஸ்யத் தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன என்பது அறிந்ததே. writerpayon மிகவும் சுவாரஸ்ய ட்விட்டியாக இருக்கிறார். அவருடைய சமீபத்திய சில ட்விட்ஸ்;

எனக்குள்ள சுதந்திரம் என் கதைகளுக்கு இல்லை. நான் எழுதுவதால் நன்றாக இருப்பது தவிர அவற்றுக்கு வேறு வழி இல்லை. வருத்தமாக, மகிழ்ச்சியாக உள்ளது. - 

புத்தக வெளியீடு என்றாலே லாரியில் அனுப்பியது போல் வந்துவிடுகிறார்கள் கூட்டமாய். இங்கே என்ன அவிழ்த்துப் போட்டா ஆடுகிறோம்? வருகைக்கு நன்றி. - 

வானம் மிக இருளும்போதெல்லாம்.... உலகம் அழிந்து எனது டிவிடி தொகுப்பு சேதமடைந்துவிடுமோ என்கிற பயம். சிறுவயதிலிருந்தே இந்த பயம் இருக்கிறது. - 

நான் ட்விட்டரில் ஆள் மற்றும் புத்தக பெயர்களை உதிர்ப்பதை பார்த்து சிலர் நான் நிறைய தெரிந்தவன் என நினைக்கிறார்கள். நடக்கட்டும், நடக்கட்டும். - 

டிஸ்கி: குளிர் அதிகமாக இருப்பதால் மினி ஜிகர்தண்டா. கண்டெண்ட் இல்லை என்றோ, ஆணி அதிகம் என்றோ நினைத்துவிட வேண்டாம் என்றால் நம்புவீர்களா? :) நம்பவில்லை என்பவர்களுக்காக மின்மினி ஜிகர்தண்டா, மின்னாமினி ஜிகர்தண்டா, மி.ஜி கூட வருங்காலத் திட்டத்தில் இருக்கிறது.

34 comments:

  1. ஈரோடு வால்ன்னே படிச்சு பழக்கமாயிட்டதால, இந்த ஈரோடு வாழை,ஈரோடு வால்ன்னு படிச்சுட்டேன்.
    ஜாரி..ச்சே..ஸாரி..ஸாரி எழுத்தாளரே.

    ReplyDelete
  2. வார்த்தைக்கு வார்த்தை பதிவில் உள்ளவற்றை வழிமொழிகிறேன்..பதிவிற்கு ஓட்டு போட்டாச்சு.

    ReplyDelete
  3. //. writerpayon மிகவும் சுவாரஸ்ய ட்விட்டியாக இருக்கிறார்.///

    வழிமொழிகிறேன்!

    ரைட்டர் பேயோன் பேரவை

    ReplyDelete
  4. விஜய் டிவி நீயா நானா -நேற்று!

    சோம்பேறித்தனத்திற்கும், பதட்டப்படாமல், நிதானமாக இருப்பதற்கும் உள்ள வேறுபாட்டைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் வைக்கப்பட்ட தலைப்பு!

    அதே மாதிரி சுறுசுறுப்பு என்றால், பதட்டத்தோடு அங்கும் இங்கும் அலைவதுதான் என்று நினைப்பது போலத் தான் நிகழ்ச்சி இருந்தது.

    கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்க விடாமல், மேம்போக்காகப் பேசிக் கொண்டிருக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டவர்கள் மட்டுமே நீயா நானா கோதாவில்...!

    நம்ம மருதை எப்பவுமே, ஸ்லோ, சோம்பேறி ரகம் தான்! மூன்று மாதத்திற்கு முன்னால் கூடி முடிவு செய்ததைக் கூட இன்னமும் நடத்த முடியவில்லை! அதற்குள் இன்னுமொரு ப்ராஜெக்டா?

    என்ன காரணம் என்று கேட்டால் ஷாலினி தேதி கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள்! ஷாலினி இல்லையென்றால், மாலினி, அதுவும் இல்லை என்றால் ஒரு ஷகீலா!

    ஷகீலாவை விட Good Touch,Bad Touch சப்ஜெக்டில்வேறு எவர் தான் விலாவாரியாக எடுத்துச் சொல்லிவிட முடியும்? சொல்லப் படும் விஷயத்தின் முக்கியத்துவத்தைவிட, சொல்கிற நபரின் பாபுலாரிடியை மட்டுமே நம்புவது சரியாகப் படவில்லை.

    தனி நபர்களை மட்டுமே நம்பி எடுக்கப் படும் முடிவுகள் கொஞ்சம் பலவீனமாகத் தான் இருக்கும்.

    கா.பாவுக்கு ஜிகர் தண்டாவை இன்னும் கொஞ்சம், ஊற்றிக் கொடுத்து சுறுசுறுப்பு ஏற்படுத்துங்கள் பீர்!

    ReplyDelete
  5. பிங்கோ விள‌ம்பர‌த்தில் மிக‌வும் க‌வ‌ர்ந்த‌து அந்த‌ "டொய்ங்" ச‌த்த‌ம் தான்.

    //புத்தக வெளியீடு என்றாலே லாரியில் அனுப்பியது போல் வந்துவிடுகிறார்கள் கூட்டமாய். இங்கே என்ன அவிழ்த்துப் போட்டா ஆடுகிறோம்? //

    கேவ‌ல‌மான‌ க‌ருத்துரை !!!அவ‌ருக்கு ஆழ்ந்த‌ அனுதாப‌ங்க‌ள்.

    ReplyDelete
  6. //தமிழ்மணம் விருது 2009 க்கான வாக்கெடுப்பு நடந்து வருகிறது.//

    எல்லாரும் பங்கெடுத்தா ஓட்டு யார் போடறதாம். :)

    ReplyDelete
  7. எனக்கும் அந்த குண்டு மல்லிகா, குட்ட கோமளா விளம்பரம் பிடித்தது!! செய்யது தம்பி சொன்னது போல பிங்கோ விளம்பரத்தில் அந்த டொய்ங்க் சத்தம் தான் என்னுடய விருப்பம் கூட!

    ReplyDelete
  8. பேயோனை அடுத்தமுறை பாக்குறப்ப தொலைபேசித்துறையில் வேலை பார்க்கின்றாரான்னு கேளுங்க

    :))

    ReplyDelete
  9. பேயோனை அடுத்தமுறை பாக்குறப்ப தொலைபேசித்துறையில் வேலை பார்க்கின்றாரான்னு கேளுங்க

    :))

    ReplyDelete
  10. //பசங்க ஷோபிக்கண்ணு வரும் ஒரு விளம்பரமும் //

    அண்ணே அது ஷோபிக்கண்னு இல்லை. சிகப்பி என்பது புதுக்கோட்டை பகுதியில் பெண்களுக்கு வைக்கப்படும் ஒரு பெயர். வீட்டில் அதோடு செல்லமாக கண்ணு என்பதனையும் சேர்த்து அழைப்பர். வட்டார வழக்கில் சிகப்பி கண்ணு ”சோப்பிகண்ணு”வாகிவிடும்.

    :)

    ReplyDelete
  11. //செய்யது தம்பி சொன்னது போல //

    என்னது செய்யது உங்க தம்பியா?? கொடுமை! அவர் எனக்கே அண்ணன்

    :)

    ReplyDelete
  12. குளிர் அப்படி ஒன்றும் இல்லையே!
    சரி, மினி ஜிகர்தண்டாவிற்கு பதிலா சூடா மிளகாய் பஜ்ஜி, இல்லாட்டி தூள் பஜ்ஜி போடலாமே...

    ReplyDelete
  13. நைஜிரியா வலைப் பதிவர் சந்திப்பை இங்கு சொல்லாமல் விட்டுடீங்களே..

    இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்..

    ReplyDelete
  14. // வாழ்கையை அதிகம் ரசிப்பது - சோம்பேறிகளா? சுறுசுறுப்பானவர்களா?. //

    ஆஹா எப்படியெல்லாம் சிந்திகிறாங்கப்பா?

    ReplyDelete
  15. நீங்க சொன்ன சீன்...
    http://video.yahoo.com/watch/6594782?v=6594782

    ReplyDelete
  16. ராஜூ, ஈரோடு வாழ் தான் ஈரோடு வால். படித்ததில் தவறோன்றுமில்லை. ஆனா அந்த ஜாரி... ஹி ஹி.

    வாங்க TVR சார், மிக்க மகிழ்ச்சி.

    ஆயில்யன், என்னையும் பேரவையில் சேர்த்துக்கோங்க. கொ ப செ கூட பரவாயில்லை.

    கிருஷ்ணமூர்த்தி சார், நீயா நானா - என் எண்ணத்தில் இருப்பதையே எனக்கு சொல்ல தெரியாததையே அழகாச் சொல்லியிருக்கீங்க. நம்ம மருத - ஹிஹி...

    செய்யது, பிங்கோ ஓகே.
    பேயோன் - அவரை ஃபாலோ செய்தால் இப்படி சொல்ல மாட்டீர்கள். - பேயோன் பேரவை, குவைத்.

    சின்ன அம்மிணி, நமக்கு நாமே ஓட்டு போட்டுக்க வேண்டியதுதான். :)

    நாஸியா, அடுத்த முறை அந்த டோய்ங்க் சத்தத்தை கவனிக்க வேண்டும்... டோய்ங்க்ன்னு மண்டைல கொட்டுதான்னு. :)

    ReplyDelete
  17. ட்விட்டர் நல்லாத்தான் இருக்கு!

    ReplyDelete
  18. அப்துல்லா அண்ணே, பேயோன் - எனக்கும் சந்தேகம் இருந்துச்சு.
    சோப்பிகண்ணு விளக்கத்திற்கு நன்றி, இந்த பேரே ஒரு நண்பன் சொன்னதுதான்.

    பாலா, அந்த டோய்ங்க் சொல்ல மறந்துட்டீங்களே ;)

    இராகவன் அண்ணே, அடுத்த முறை மொராக்கோவில் பதிவர் சந்திப்பு நடக்கும் போது நிச்சயம் சேர்த்துவிடுவோம்.

    சுட்டிக்கு நன்றி நண்பரே,

    வாங்க அபுஅஃப்ஸர், நன்றி.

    ReplyDelete
  19. வாங்க வால், ரைட்டர் பேயோன ஃபாலோ பண்றீங்கதான?

    ReplyDelete
  20. உங்களுக்கே அண்ணனா? அப்ப எனக்கு தாத்தாலோ!

    ReplyDelete
  21. இன்னை எதிர்தாப்புல போன வர்ணிப்பது கூட சுறுசுறுப்பின் அடையாளமா என்னக் கொடுமைய்யா இது??? கோபிநாத்துக்கு இப்ப வரவர விவஸ்தையே இல்ல ... அப்பப்ப வடிவேறு சொல்றா மாதிரி அக்ககக. என்று வேறு சொல்லி கடுப்பேத்துகிறார். அவருவருக்க ஒரு ஸ்டைல் என்று ஏன் வைத்துக்கொள்ளமாட்டேன்கிறார்கள்.?

    பேயோன் டிவிட்டியது எல்லாம் அருமை...

    ReplyDelete
  22. நல்லா இருக்குங்க போஸ்ட். விஜய் டிவி நீயா நானா ரொம்ப melodramatic ஆ இருக்குங்க. என்னால ஒரு அஞ்சி நிமிஷம் கூட பொறுமையா பார்க்க முடியலை. தமிழ்மணம் விருது கொஞ்சம் போர் தான் :)- ஏதாவது போட்டின்னா புதுசா எழுத ஒரு சான்ஸ் கிடைக்கும். இருக்கறதுல ஒன்னு எடுத்து சப்மிட் பண்றதுல சுவாரசியம் இல்லை. நான் என்னோட பதிவுகளை classify பண்ணிபார்த்தேன். ஒண்ணுக் கூட தேறலை. எனக்கு satisfaction இல்ல :)- So, no submission.

    ReplyDelete
  23. மினின்னாலும் ஜில்லுன்னு தான் இருக்கு மொத்தமும் ...

    ReplyDelete
  24. குளிர் சாஸ்தியோ குவைத்தில்? இம்முறை ஜிகர்தண்டா நமுத்துப் போன பிஸ்கட்.

    த்ரிஷாதான் அந்த விளம்பரத்தில ஒரு திடுக் திருப்பம் வரக் காரணமாய் இருப்பவர். எப்படி தேவையில்லாமல் வருகிறாள்(ர்) என்று சொல்லலாம்?

    ”பேயோன்” - பேரே திகிலைக் கிளப்புதே. நல்லவேளை நான் டிவிட்டலை.

    /நான் நேசிக்கும் என் எழுத்து.//

    போன பதிவிலேயே சொல்லணுமுன்னு நினைச்சேன். கருத்திலிருந்து விலகிவிடும் என்பதால் சொல்லலை.

    வரவர உங்க எழுத்து ரொம்ப கடினமா (பின்நவீனமா??) ஆகிட்டு வருது. ரெண்டு மூணு தரம் வாசிச்சாதான் புரியுது. என்னைப் போல மக்குகளுக்கானதில்லயோனு தோணுது.

    ReplyDelete
  25. நீயா நானா-வில் தலைப்பைப் பார்த்து வேறு ஸானலுக்கு ரிமோட்-ஜம்பிவிட்டேன்! நீங்க ​சொன்ன சுறுசுறு துறுதுறு விளக்கம் சுருசுரு!

    எனக்கு இப்ப வர்ற மாஸ்டர்கார்ட் விளம்பரம் எனக்குப் பிடிச்சிருக்கு.. 4 நண்பர்கள் கதையை அவர்களின் காலேஜ்ஜிலிருந்து சுண்டிவிட்ட காசு மாற்றி ​சொல்லுகிறது! நீங்க பாத்ததுண்டா?

    ReplyDelete
  26. வாங்க பிரதாப், வரவர கோபிநாத் கடுப்பேத்துகிறார். பேயோன் சுவாரஸ்ய ட்விட்டிதான். ஃபாலோ பண்ணிப்பாருங்க.

    மணி, தமிழ்மணம் - என்கிட்ட சொல்லியிருந்தால் நானே உங்களுடையி இடுகைகளை பரிந்துரைத்திருப்பேன். BTW பின்னூட்ட விருது வைத்திருந்தால் உங்களுக்குத்தான் முதலிடம்.

    வாங்க ஜமால், சில்லுன்னு இருக்கா... அவ்வ்வ்

    ஹூசைனம்மா, நம்பலைல்ல... உங்களுக்காகவே மின்னாமினி ரெடியாகிட்டிருக்கு.
    த்ரிஷா - ஒரு கருத்து சொன்னா ஆராயணும் இப்பிடி கேள்வி கேட்க கூடாது.
    பேயோன் - ஆளே ஒரு திகில் பார்ட்டி தான்.
    என் எழுத்து புரியலையா? சரி.. இனி புரியும் படியாக எழுத முயற்சிக்கிறேன். குட்டிற்கு நன்றி.

    வாங்க ஜெகா, மாஸ்டர்கார்ட் விளம்பரம் இன்னும் பார்க்கல... முன்னாடி கேட்ரீனா சீட்டா ஜோன்ஸ் வந்த விளம்பரம் அருமையா இருந்துச்சு.

    ReplyDelete
  27. நீங்கள் நல்லா எழுதுகிறீர்கள்.. அதை விட நன்றாக ரசிக்கிறீர்கள் :)

    writerpayon ஐ காட்டியதற்கும் நன்றி!!

    ReplyDelete
  28. வாங்க பிரசன்னா, மகிழ்ச்சி.

    முதலாவதாய் நான் ரசிகன், வாசகன். அதைப்பகிரத்தான் இந்த 'ஜெய்ஹிந்த்புரம்'

    நன்றி.

    ReplyDelete
  29. கணினியை ஆன் செய்ததும் முதல் வேலையாக டபிள்யூ டபிள்யூ டாட்காம் கூகுளில் என் பெயரை தட்டச்சு செய்து தேடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அப்படி தேடியபோது இந்த இடுகையை பார்த்தேன். நன்று.வலைப்பூவை 484 பக்கங்கள் வரும்வரை எழுதிவிட்டு பிறகு புத்தகமாக போடுங்களேன். தமிழில் 484 பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் அரிது.

    ReplyDelete
  30. //தொய்வடையாமல் தொடந்து நடைபெறவும் வாழ்த்துக்கள் நண்பர்களே.//

    நன்றி

    ReplyDelete
  31. //சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் அண்ணன் கார்த்திகை பாண்டியன் தலைமையில் நாங்களும் ஒன்று கூடுவோம்ல.//

    நல்லது எங்களையும் அழையுங்கள்...

    ReplyDelete
  32. நாஞ்சில் கொடுத்த லிங்க்.. வந்தா எல்லாம் சோக்கு.. நல்லாயிருந்ததுங்க :)

    ReplyDelete
  33. ஆங் வேகமா படிக்கவைக்கறீங்க..

    ReplyDelete

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.