Oct 4, 2008

துஆக்களின் அற்புத பலன்கள் - நூல் விமர்சனம்

துஆக்களின் அற்புத பலன்கள் - நூல் விமர்சனம் இது உர்துவிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட நூல்.
துஆ வுடன் தொடங்கும் எந்த ஒரு செயலுக்கும் நிச்சியம் பலன் உண்டு என்கிறார் ஆசிரியர் மௌலானா முஹம்மது இல்யாஸ் நத்வி பட்கலீ . அதற்கு தன்னுடைய வாழ்விலேருந்தே பல உண்மை சம்பவங்களை எடுத்து சொல்கிறார், படிப்பவர்கள் தன் நடைமுறை வாழ்வில் நிச்சயம் துஆ வையும் இணைத்து கொள்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தமிழில்: மௌலவி செயத் அப்துர் ரஹ்மான் உமரி (மொழி இன்னும் கொஞ்சம் மெருகேற வேண்டும், மௌலவி

வெளியீடு: அஹத் பப்ளிஷர்ஸ், மதுரை. +91 9345055666.

பயனுள்ள நல்ல நூல். தரமான புத்தகக்கட்டு. புத்தகத்திலிருந்து ஒரு சம்பவம், எல்லாவகையான சோதனைகளும் விலகிப்போகும் இஃஜாஸ் இறையச்சமுள்ள நல்லமனிதர். வாழ்க்கையில் எல்லாவகையான வசதிகளையும் அல்லாஹ் அவருக்கு வழங்கியிருந்தான். குடும்பத் தொழில் அல்லாது தனி தொழில், தனி வீடு என்று என்று வாழ்க்கையில் வளமாக அவர் செட்டில் ஆகியிருந்தார். ஏழைகளை ஆதரிப்பது, ஆதவற்றவர்களை உபசரிப்பது போன்ற அருங்குணங்கள் சிறுவயதிலிருந்தே அவரிடம் இயற்கையாக அமைந்திருந்தன. அதன் காரணமாக எல்ோருடைய நேசத்திற்கும் பாசத்திற்கம் உரித்தானவராக இருந்தார். அதிய்யா பதூல்!. இஃஜாஸுடைய மூத்தமகள். ஆளை அசரவைக்கும் அழகும் சௌந்தர்யமும் ஒருங்கேபெற்ற பேரழகு இளம்பெண். இஸ்லாமிய ஒழுக்கத்தின்படி வாழ்க்கை நடத்தவேண்டும் என்ற பக்குவத்தை இயல்பிலேயே பெற்றவள். மெட்ரிக் பள்ளித்தேர்வில் முதலிடத்தை வென்றிருந்தாலும் இருபாலரும் கலந்து கற்கும் கல்லூரிக்கு செல்லவிரும்பாமல் அதே ஊரிலிருந்த ஓர் இஸ்லாமியப் பாடசாலையில் மூன்றாண்டு இஸ்லலாமியப் பட்டப்படிப்பில் சேர்ந்துகொண்டாள். பண்பும் படிப்பும் அழகும் அருங்குணமும் கொண்ட அதிய்யா தங்கள் வீட்டு மருமகளாக வரமாட்டாளா என்று அவ்வூரிலுள்ள அனைத்து தாய்மார்களும் ஏங்கலாயினர். இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே நல்லதோர் இடத்தில் இஃஜாஸ் சம்பந்தமும் பேசி முடித்திருந்தார். மூன்றாமாண்டு படிப்பு முடிந்ததும் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. நாட்கள்தாம் எவ்வளவு வேகமாக நகருகின்றன!. இதோ கல்யாண தேதி வெகுவிரைவில் வந்துவிடும். தன்னுடைய மூத்தபெண் செல்வமகளுடைய திருமண தேதியை வெகுஆர்வமாக இஃஜாஸ் எதிர்பார்த்திருந்தார். வீடே கல்யாணக்களை கட்டியிருந்தது. மணப்பெண்ணுக்கான நகைகள், புத்தாடைகள் என்று தினமும் வீட்டுப்பெண்கள் ஷாப்பிங் செய்தவாறு இருந்தனர். திடீரென்று ஒருநாள் அதிய்யாவின் உடல்நிலை சீர்கெட்டது. தாங்கமுடியாத வயிற்றுவலி. நிறுத்தாமல் வாந்தி எடுத்துக்கொண்டே இருந்தாள். குடும்ப டாக்டரை அழைத்துக் காட்டினார்கள். மருந்து மாத்திரை கொடுத்தும் நிற்கிறபாடில்லை. பக்கத்திலுள்ள மாநகருக்கு கூட்டிக்கொண்டுபோகலாம் என்று டாக்டர் சொன்னதன் பேரில் பெரிய ஹாஸ்பிடல் ஒன்றில் அட்மிட் செய்தார்கள். ஸ்கேன் எடுக்கப்பட்டது; லாபராட்டரியில் இரத்தம், சிறுநீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ரிஸல்ட் வந்ததும் இஃஜாஸுடைய நிம்மதி முற்றிலும் குலைந்துவிட்டது; அவருடைய மனக்கோட்டைகள், கனவுகள் எல்லாம் தகர்ந்துவிட்டன. பூமி அதே இடத்தில் பிளந்து அவரை விழுங்கிவிடும் போலிருந்தது. பதூலுக்கு புற்றுநோய் பீடித்திருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்று டாக்டர் சொன்னவுடன் அவருடைய உள்ளம் உடைந்து சுக்குநூறாகிவிட்டது. ஹதாமதிக்காதீர்கள்! தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து. உடனடியாக நல்லதொரு கேன்ஸர் ஸ்பெஷசலிஸ்ட் யாரிடமாவது போய்க் காட்டுங்கள்' என்று டாக்டர்கள் விரைவு படுத்தினார்கள். தன்னுடைய ரிபோர்ட் என்னவாகயிருக்கும் என்று தெரிந்துகொள்ள பதூலுக்கும் ஆவலாக இருந்தது. சோகத்தில் மூழ்கிப்போய் தொங்கிப்போன முகத்தோடு அப்பா தன்னுடைய அறைக்குள் நுழைவதைக் கண்ட பதூலுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஏதோ நெகடிவ் ரிசல்ட் வந்திருக்கின்றது என்று மட்டும் புரிந்தது. பலமுறை கேட்டும் அப்பா எதுவுமே சொல்லவில்லை. கவலைப்பட ஒன்றுமில்லை! எல்லாம் சரியாகிவிடும் என்றுமட்டும் திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். எதைப்பற்றியும் நீ கவலைப்படாதே! காலிகட்டில் வயிற்றுவலிக்கான நிபுணர் ஒருத்தர் இருக்கிறாராம். அவரிடம் போய் சிகிச்சை எடுத்துக்கொண்டால் விரைவில் எல்லாம் நலமாகிவிடும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்' என்று பலதையும் இஃஜாஸ் சொல்லியவாறு இருந்தார். ஹஇங்கே பாருங்கப்பா! ரிசல்ட் என்னவென்று எனக்கு முழுவதையும் சொல்லியாகவேண்டும். இல்லையென்றால் நான் மருந்தையும் சாப்பிடமாட்டேன்; சிகிச்சையும் எடுத்துக்கொள்ளமாட்டேன். நோயைக் கொடுத்தவன் இறைவன்தான். அதற்கான மருந்தையும் அவனால்தான் கொடுக்கமுடியும். ஏதேனும் சிக்கல் என்றால் அவனிடம் கையேந்தி மன்றாடுவோம். அதைவிட்டுவிட்டு இப்படி சோகமாக நின்றுகொண்டிருந்தால் எப்படி?' என்று ஒரேயடியாக பதூல் சொன்னதும் வேறுவழியேதும் தெரியவில்லை. டாக்டர் சொன்னதையெல்லாம் சொல்லியாகவேண்டிய கட்டாயத்துக்கு இஃஜாஸ் தள்ளப்பட்டார். எல்லாவற்றையும் சொன்னார். இஃஜாஸ் சொல்லிமுடித்ததும் அடுத்தநொடியில் பதூலின் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன. ஹஎனக்கு வேறு என்ன வியாதிவேண்டுமானாலும் வரலாம். ஆனால், கேன்ஸர் மட்டும் வரவே வராது!' இஃஜாஸுடைய விழிகள் வியப்பால் விரிந்தன. ஹஎன்னம்மா, சொல்றே கண்ணு! டாக்டர்கள் எல்லாவகையான டெஸ்ட்டையும் எடுத்தபிறகுதான் இந்த மாதிரி சொல்லியிருக்கிறார்கள். நீயென்னடான்னா எடுத்த உடனேயே இல்லைன்னு மறுக்கிறாயே!' பதூல் சொல்லத் தொடங்கினாள்: ஹஅப்பா! நான் ஒரு ஹதீதை படித்திருக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள், ஹஏதேனும் கஷ்டமான நோயில் அல்லது ஏதேனும் கடும் ஆபத்தில் சிக்கிக்கொண்டுள்ளவரைப் பார்த்தால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள். அத்தகைய நோயிலிருந்து அல்லாஹ் உங்களைக் காப்பாற்றியுள்ளான் அல்லவா? அவ்வாறு அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்தினால் அந்த நோய் உங்களுக்கு வரவே வராது!'. எனக்கு நினைவு தெரிந்தநாள் முதல் உலகத்திலேயே கஷ்டமான நோய் புற்றுநோய்தான் என்று பலபேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். புற்று நோய் யாருக்கேனும் வந்துவிட்டால் அதிலிருந்து மீள்வது கடினம் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த நோய் வந்தவர்கள் படும் துன்பத்தை யாராலும் பார்க்க சகிக்காது என்றும் சொல்கிறார்கள். இந்த ஹதீதை கேள்விப்பட்ட நாளில் இருந்து கேன்ஸரைப் பற்றிக் கேள்விப்பட்டாலோ புத்தகங்களில் படித்தாலோ உடனே நான் அந்த துஆவை ஓதிக்கொள்ளுவேன். அந்த நோயாளிகளுக்காகவும் துஆ செய்வேன். அந்த நோயிலிருந்து என்னைக் காப்பாற்றியதற்காக என்னால் முடிந்தளவு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவேன். அந்த துஆ இதுதான்... அல்ஹம்து லில்லாஹில்லதீ, ஆஃபானீ மிம்மப்தலாக்க பிஹி, வ ஃபழ்ழளனீ அலா கஸீரிம் மிம்மன் ஃகலக்க தஃப்ழீலா! ஹஇவரைப் பீடித்துள்ள இந்த நோயில் இருந்து என்னைக் காப்பாற்றிய அல்லா{ஹக்கே புகழ் அனைத்தும்!. அவன் படைத்த எத்தனையோ படைப்பினங்களைவிட எனக்கு சிறப்பை அளித்துள்ளான்!' என்பது இந்தத் துஆவின் பொருள். இந்த துஆவை ஓதிவந்தால் கண்டிப்பாக அந்த வியாதி ஓதியவர்களுக்கு வரவேவராது என்று இறைத்தூதர் ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லாம் அவர்கள் கூறியுள்ளார்கள். நானும் அதை அப்படியே மனப்பூர்வமாக நம்பி ஓதி வந்துள்ளேன். தனக்கு நன்றி செலுத்திய அடியானை அந்த அல்லாஹ் காப்பாற்ற மாட்டானா? அதனால்தான் அடித்துச் சொல்கிறேன். எனக்கு வேறு எந்த வியாதி வேண்டுமானாலும் வரலாம். ஆனால், கேன்ஸர் மட்டும் வரவே வராது!. உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால் வேறு ஏதேனும் தலைசிறந்த டாக்டரிடம் போய்ப் பார்ப்போம். அவர் சொல்வதைச் செய்வோம். கடைசியில் நான் சொன்னபடிதான் ரிஸல்ட் வரும்!'. பதூலுடைய வார்த்தைகளைக் கேட்கக்கேட்க இஃஜாஸுடைய உள்ளத்தில் மெதுவாக நம்பிக்கைக் கதிர் ஒன்று உதயமானது. தன்னுடைய அண்ணனையும் அவர் சந்தித்துப் பேசினார். டாக்டர்கள் சொன்னதையும் பதூல் சொன்னதையும் அவரிடம் கூறினார். இரண்டுபேரும் ஆலோசனை செய்தார்கள். ஹஎதற்கும் ஒருமுறை சோதித்துப் பார்த்துவிடுவோமே! புற்றுநோய் மருத்துவத்தில் தலைசிறந்த ஆராய்ச்சி நிறுவனமான டாடா புற்றுநோய் ஆய்வு மையம் மும்பையில் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட உயர்தர மருத்துவக் கருவிகள் அங்கு உள்ளன. மிகவும் திறமையாக அங்கு நோய்க்கான சிகிச்சை அளிக்கப் படுகின்றது. அல்லா{ஹத்தஆலா வேண்டுமளவுக்கு உனக்கு வசதியையும் கொடுத்துள்ளான். ஆகையால். தாமதிக்காமல் ஒருமுறை அங்குபோய் சிகிச்சை செய்து பார்த்துவிடுவோம்' என்ற முடிவிற்கு வந்தார்கள். அடுத்தநாள் விமானம் மூலம் மும்பைக்கு பறந்தார்கள். பதூல் அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். விளக்கமான ரிபோர்ட் உங்களுக்கு வேண்டுமென்றால் இரண்டு நாள் தங்கி எல்லா டெஸ்ட்டுகளையும் எடுத்துப் பார்த்துவிடுங்கள் என்று டாக்டர்கள் ஆலோசனை தந்தார்கள். அவை அனைத்தும் காஸ்ட்லியான சோதனைகளாக இருந்தன. ஏராளமான பணம் செலவானது. இஃஜாஸ் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் அல்லாஹ்விடம் துஆ செய்துகொண்டே இருந்தார். வீட்டினர் அனைவரும் ரிஸல்ட்டை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தனர். நான்காவது நாள் தன்னைப் பார்க்கவருமாறு தலைமை டாக்டர் இஃஜாஸை வரவழைத்தார். ஹயா அல்லாஹ்! எங்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்துவிட்டோம். இனிமேல் நி கருணை காட்டினால்தான் உண்டு!' என்று மனதிற்கள் இஃஜாஸ் பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தார். நல்லசெய்தி வரவேண்டுமே என்று அவருடைய மனம் துடியாய் துடித்துக் கொண்டிருந்தது. தூரத்தில் உட்கார்ந்திருந்த டாக்டரின் முகத்தைப் பார்த்தவாறே இஃஜாஸ் அறைக்குள் நுழைந்தார். டாக்டருடைய முகத்தில் ஏதேனும் அறிகுறிகள் தென்படுகின்றவா என்று துலாவினார். தூரத்தில் இருந்தே புன்னகைத்தவாறு டாக்டர் இஃஜாஸைப் பார்த்தார். இஃஜாஸுக்கு கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. டாக்டர் தன்னருகில் உட்காருமாறு கூறிவிட்டு பேசத் தொடங்கினார். ஹமிஸ்டர் இஃஜாஸ்! ஓர் ஆச்சரியமான விஷயத்தை சொல்லப்போகிறேன். மருத்துவம் சொல்கின்ற படி எல்லாவகையான டேஸ்ட்டுகளையும் நாங்கள் செய்துவிட்டோம். புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்று மருத்துவம் கூறும் எல்லா அறிகுறிகளும் உங்கள் மகளிடம் காணப்படுகின்றன. ஆனால், மருத்துவக் கல்விக்கு எதிராக ரிஸல்ட் வந்துள்ளது. நோய் தாக்கவில்லை! மனித சக்திக்கு மீறிய ஏதோ ஒரு சக்தி செயல்படுகின்றது என்றுதான் இதற்கு காரணம் கூறவேண்டும். ஆயிரக்கணக்கான பேஷன்டுகளில் யாரேனும் ஒருவருக்குத்தான் இம்மாதிரியான ரிஸல்ட் வரும். இந்த ரிஸல்ட்டைப் பார்த்ததும் உங்களைக் கேட்காமல் நாங்களாகவே வேறு பல டெஸ்ட்டுகளையும் செய்துபார்த்தோம். எல்லா டெஸ்ட்டுகளிலும் இதே போலத்தான் ரிஸல்ட் வந்தது!'. பொலபொலவென்று இஃஜாஸுடைய கண்களில் இருந்து கண்ணீர் கசிந்துகொண்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் என்ற அவர் மனதுக்குள் அரற்றிக் கொண்டிருந்தார். டாக்டருடைய கைகளைப் பிடித்து அவர் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். ஹஎனக்கு எதற்காக நன்றி சொல்கிறீர்கள்? எல்லாவற்றையும் மாற்றியமைக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்' என்றார் டாக்டர். உடனே ஓடோடி வந்து பதூலுடைய அறைக்குள் நுழைந்தார். டாக்டர் சொன்னதை வேகவேகமாகச் சொன்னார். பதூலுடைய முகத்தில் எந்த ஆச்சரியமும் தென்படவில்லை. அப்படியா என்று சாதாரணமாக அவள் கேட்டுக்கொண்டாள். ஹநான் அல்லாஹ்வையும் நம்புகிறேன்; அல்லாஹ்வுடைய தூதரையும் நம்புகிறேன். எனக்கு புற்றுநோய் வராது என்பது எனக்கு முன்பே தெரியுமே!' என்று அதற்கான காரணத்தையும் அவள் கூறினாள். பதூலுடைய வீட்டில் வருத்த மேகங்கள் விலகி நம்பிக்கை வெளிச்சம் பளீரென்று அடித்தது. அந்தநாள் அவர்களுக்கு பண்டிகை நாள். சந்தோஷம் எல்லோருடைய முகங்களிலும் தவழ்ந்தது. பதூலுடைய கல்யாணமும் அதே வருடம் சிறப்பாக நடந்தேறியது. அல்ஹம்துலில்லாஹ்!.

No comments:

Post a Comment

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.