Oct 29, 2008

அயல் நாட்டு அகதிகள்

அயல் நாட்டு அகதிகள் தினாருக்கும், ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள்! பண்டிகை நாட்களை, குடும்பத்தோடு குதூகலிக்க முடியாமல் Eid Mubarak, Happy New Year, Happy Pongal என்று மனம் முழுக்க சோகத்தோடு கைபேசியில் கூக்குரலிடும் கையாலாகதவர்கள் இங்கே கண்ணே, கனியமுதே என்றெல்லாம் மனைவியை நெஞ்சுருக கொஞ்சிமகில அவள் நேரில் இல்லை கணிபொறியிலும் கைபேசியிலும் மனைவியின் குரல் கேட்டு, கேட்டு, எங்கள் காதல் கூட இங்கு commercial ஆகிபோனது தொலைதூர காதல் செய்தே தொலைந்து போனவர்கள் நாங்கள், “நான் இங்கே நல்லா இருக்கேன்” என்று எப்போதும் சொல்லும் Default குரலுக்கு சொந்தகாரர்கள். உணவில் குறையிருந்தாலும் உடல் நல குறைவிருந்தாலும் First Class என்று சொல்லியே பலகிபோனவர்கள் வியர்வையில் நாங்கள் உழன்றாலும் விடுமுறைக்கு போகுமுன் வாசனை பூச்சு வாங்க மறப்பதில்லை எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க கணிபொறிக்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள் நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை என்றாலும், கலைத்து போகிறோம் திரைகடலோடியும் திரவியம் தேடும் திசைமாறிய பறவைகள் நாங்கள் எங்களுக்கும் மாதகடைசி உண்டென்பது யாருக்கும் புரிவதில்லை உனக்கென? விமான பயணம், வெளிநாட்டு வேலை என்றெல்லாம் உள்ளூர் வாசிகள் விடும் பெருமூச்சு வளைகுடா நாட்டின் வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது ஆரம்பத்தில், முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதபட்டோம் எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு செய்திருக்கின்றோம் இப்போது தான் புரியத்துவங்கியது சேர்ந்தே நரைக்கவும், நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை, வாலிபத்தை இழப்பீடு கிடைக்காத இழப்பு இது, நஷ்டஈடு கிடைக்காத நஷ்டம் இது, கடன், திருமணம், சொந்தமாய் வீடு, குழந்தையின் எதிர்காலம், குடும்பச்சுமை இப்படி காரணம் ஆயிரம் தோரணம் போல கண் முன்னே. அம்மாவின் அன்பு, நண்பர்களுடன் அரட்டை, காதலியின் கண்சிமிட்டல், மனைவியின் சினுங்கள், குழந்தையின் மழலை இப்படி எத்தனையோ இழந்தோம் எல்லாவற்றையும் இழந்தும் இன்னும் நாங்கள் இங்கே ஏன் இருக்கின்றோம்? இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதாலா? இல்லை இழப்பிலும் சுகம் கண்டு கொண்டதாலா? நாங்கள் அன்புக்கு ஏங்கும் அகதிகள்!!! நன்றி; எங்கோ வாசித்தது

No comments:

Post a Comment

மனம் திறந்து செதுக்குங்கள், என் எழுத்துக்களை.