Apr 29, 2009

சூடான ஈழ வியாபாரம்

உலகமே பொருளாதார பின்னடைவில் இருந்தாலும், இன்று தமிழகத்தில் சூடான வியாபாரம் நடக்கிறது, ஈழ வியாபாரம்... ஈழ அரசியல் வியாபாரம்.

ராஜதந்திரங்களில் கலைஞரை விஞ்ச ஆளில்லை, தேர்தலுக்கு தேர்தல் புதுப்படம் காண்பிப்பார். இம்முறை தியேட்டர் காலி என்பதால், புதுத்திருப்பங்களுடன் ஈழ மெகா தொடர் ஓட்டுகிறார்.

கற்றுக்கொண்ட அம்மாவும் (நேற்றுவரை புளித்த) ஈழமிட்டாயை நாளையே வாங்கித்தருகிறேன் என்கிறார்.

மாம்பழத்திற்காக அம்மாவையும் அப்பாவையும் சுற்றிவரும் மருத்துவரும், தன்மானமிழந்த வைகோ வும் இம்முறை ஈழத்தை கூவி விற்கிறார்கள். திருமாவிற்கிருப்பது 'வெரு' நா.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக வின் தற்போதைய ஈழநிலை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

தேமுதிக, மமக, சமக லமக (ங்கொ…மக்க) மற்ற அனைத்து க வும் இவ்விடயம் பற்றி பேசாமல் இல்லை.

இதில் பலவகை நிலைபாடுகள்...

புலியும் வேண்டும் ஈழமும் வேண்டும்.

புலி வேண்டாம் ஈழம் வேண்டும்.

ஈழம் வேண்டாம் புலி வேண்டும்.

புலியும் வேண்டும் ஈழமும் வேண்டும் ஆனால் பிரபாகரன் மட்டும் வேண்டாம்.

புலியும் வேண்டாம் ஈழமும் வேண்டாம் ஆனால் பிரபாகரன் மட்டும் வேண்டும்.

அனைத்து அரசியல் வியாபாரிகளும் ஈழத்தை சூடாக சந்தைப்படுத்துகிறார்கள். அனைவருக்கும் ஓட்டு வேண்டும் அதன் மூலம் காசு பார்க்க வேண்டும், பார்த்த காசை பாதுகாக்க வேண்டும்.

அமெரிக்க, அரபு நாடுகளின் ஏசி யில் இருந்து கொண்டு பதிவிடும் நாம் சற்று மாறுபட்டு சிந்தித்தாலும், நம்மில் எத்தனை பேர் வீதிக்கு வருவோம், வாக்களிக்க செல்வோம்? (நாட்டிலிருந்து பதிவிடுபவர்கள் ஒண்ணும் விதிவிலக்கல்ல)

தன் தலைவன் / தலைவியின் அன்றைய செயலுக்கு (அதற்கு மாற்றாக அடுத்தநாள் வேறொன்று, அதற்கும்) சப்பைக்கட்டாக ஒரு பதிவு, கும்மி, பின்னூட்ட விளையாட்டு அதிலும் குழாயடி 'என் டவுசர்குள்ள கைவிட்ட' போன்ற வசைகள், இவையெல்லாம் சற்று முகம் சுழிக்கவைக்கிறது.

இங்கும் சிலர் கடையில் ஈழத்தை விரிக்கிறார்கள், (எதிர் கருத்தோ, ஒத்த கருத்தோ) வியாபார மணம் சூடாகிறது.

பதிவுலகின் பிரபல பதிவர்கள் இன்று என்ன பதிவிட்டுள்ளார்கள் என்று பார்த்துவிட்டு தனது வாக்கை தீர்மானிப்பவர் எத்தனை பேர்?

ஒரே சமயத்தில் 100 அல்லது 1000 பேர் வந்து எனது பதிவை வாசித்தாலும், அதில் வாக்களிக்கும் எத்தனை பேரின் மனது மாறிவிடப்போகிறது?

சரி... வாக்களிக்கும் மக்கள்,

நம்மக்கள் ஒன்றும் சாதாரணப்பட்டவர்கள் அல்ல... 'கடந்த ஆட்சியில் எனக்கு தேவையாதை செய்து கொடுத்தவனுக்கே (அல்லது இன்று பிரியாணி கொடுப்பவனுக்கு) ஓட்டு அல்லது ஒண்ணும் செய்யாதவனுக்கு ஓட்டு இல்லை... எதிர்த்து நற்கும் மற்றவனுக்கு' என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள். எதிர்த்து நிற்பவன் இதற்கு முன் ஏதாவது செய்தானா என்றால், 'மறந்து விட்டது' L L L. மைக்கை தூக்கிக்கொண்டு செல்லும் அனைவரிடமும், ' எனக்கு இன்னும் டிவி தரல, கேஸ் அடுப்பு தரல, எங்க தெருல தண்ணி வரல, ரோடு போடல,' என்று தான் அடுக்குகிறான். ஈழப்பிரச்சனை ஒன்றும் மக்களை பெரிதாக பாதித்துவிட்டதாக தெரியவில்லை. தன் வீட்டில் அடுப்பு எரிகிறதா? அதற்கு யார் தீக்குச்சி தருகிறார்கள்? என்றுதான் வாக்களிக்கும் அன்றாடங்காய்ச்சி பார்க்கிறானே தவிர, அண்டைச்சமூகத்தில் எரிக்கப்படும் வீடுகளை அல்ல... அவனுக்கு விழிப்புணர்வு இல்லை என்று சொல்வதற்கில்லை. அரசியல்வாதிகளைப்போல இவனுக்கும் சுயநலம். அவனிடமிருந்து இவனோ, இவனிடமிருந்து அவனோ கற்றுக்கொண்டுவிட்டார்கள். இது வேதனையளித்தாலும் மறுக்கமுடியாத உண்மை.

வேண்டாம் நண்பர்களே... அண்டை சமூகமொன்று ஒடுக்கப்பட்டு விரட்டியடிக்கப்படுகிறது. இதிலும் வியாபாரம் செய்யாதீர்கள்...

*******************************************************

Chill: நண்பர் ஒருவர் சொன்னார், 'கருணாநிதி, 'வசனம் மட்டுமல்ல நடிக்கவும் வரும்' என்று நிரூபித்துவிட்டார், ஜெயலலிதா, 'நடிப்பு மட்டுமல்ல வசனமும் வரும்' என்று நிரூபித்துவிட்டார். ஆம்... எனக்கு "ஓ" ட்டு போடவும் தெரியும் என்று நிரூபிக்கப்போகிறேன்.

Apr 28, 2009

ரஜினி ரசிகர்கள் ரசிக்க... மற்றவர்கள் சிரிக்க...

இந்த வீடியோவை பாருங்கள்... நிச்சயம் ரஜினி ரசிகர்கள் எல்லாம் ரசிப்பீர்கள்... மற்ற அனைவரும் சிரிப்பீர்கள்...

ஒருவேளை சுல்தான் இப்படித்தான் இருக்குமோ?

அன்பார்ந்த வாக்காள பெருங்குடிமக்களே.. ஒங்க பொன்னான வாக்குகள்ல ஒண்ண எனக்கும் க்ளிக்குங்க......

Apr 27, 2009

பதிலூட்டமே தனிப்பதிவாக - ஜெய்ஹிந்துபுரம் நினைவுகள் 01

நயன்தாராவும் ஞானும் இன்னபிறவும் பகுதி II பதிவில் பின்னூட்டமிட்ட நண்பர் விஸ்வநாதன் விட்டுச்சென்ற எங்கள் பழைய ஜெய்ஹிந்துபுரம் பற்றிய உள்ளக்கிளக்கல்தான் இந்தப்பதிவு. சரியாக சொன்னால் இது அவருக்கெழுதிய பதிலூட்டம், நினைவுகளை மட்டுப்படுத்த முடியாமல் நீளம் மிகுதியானதால், பதிலூட்டத்தை பதிவாக இடும்படியாயிற்று.

அது 80 களின் தொடக்கமாயிருக்கலாம், அப்போது நாங்கள் இருந்தது ஜீவாநகர் முதல் தெரு, கடைசியில். எனது ஆரம்பக்கல்வியை பாரதியார் ரோட்டில் இருக்கும் (இப்போதும் இருக்கிறதா?) கிரேஸ் ஆங்கிலப்பள்ளியில் பயின்றேன். என் வீட்டிலிருந்து பாரதியார் ரோட்டிலிருக்கும் பாடசாலை குறைந்தது 2 கி.மீட்டராவதிருக்கலாம். ஆயா தான் எங்களை வீட்டிலிருந்து அழைத்துச்செல்வதும், திரும்ப வந்துவிடுவதும் (பிள்ளை பிடிப்பவனிடமிருந்து பாதுகாக்க). என் வீடுதான் பாடசாலையிலிருந்து தூரமென்பதால், ஆயா முதலில் என் வீட்டிற்கு வந்துவிடும். ஆயாவுக்கு அதிகப்படியான நாட்களில் காலை உணவு எங்கள் வீட்டில்தான். அம்மா எவ்வளவு தான் வற்புருத்தி, சூடாக (இட்லி தோசை பொங்கல் அல்லது சோறு) எது கொடுத்தாலும் வாங்க மறுத்துவிட்டு, 'மாமி, பழைய கஞ்சியும், உப்பு ஊறுகாயும் மட்டும் குடு, அதுபோதும் நீ சீக்கரம் ராசாவ கெளப்பிவுடு ஆத்தா' என்று சொல்லும்.

நான் தயாராகி கிளம்பிவிட்டால், என் கையை பிடித்தவாறே ஆயா நடையை துவக்கும். வழியில் புலிப்பாண்டியன் தெரு, ராமையா குறுக்கு வீதி, வீரகாளியம்மன் கோயில் தெருக்களில் இரண்டு மூன்று பையன்களையும் அழைத்துக்கொண்டு நடை தொடர்ந்துகொண்டேயிருக்கும். இரண்டிரண்டு பேராக கைகோர்த்து நடக்கவேண்டும். கடைசியாக, நேதாஜி தெருவிலிருந்து ரோஸியும் எங்களோடு சேர்ந்தவுடன், எனது கையை விடுவித்து ரோஸியின் கையை பிடித்துக்கொள்ள சொல்லும். எங்கள் அனைவருடைய மதிய உணவு கூடையையும் ஆயாதான் சுமந்துவரும்.

காலம் சென்ற என் தந்தையிடம் அப்போது ஒரு லூனா மொபட் இருந்தது. எப்போதாவது ஆயா வராவிட்டாலோ அல்லது எனக்கு வகுப்பில் தாமதமானாலோ, அப்பா தான் பள்ளியில் விடுவதும் அழைத்துவருவதும். அப்பாவுடன் லூனாவில் பயணிப்பது எனக்கு விருப்பமாயிருந்தது. வழியிலிருக்கும் வெண்மணி சைவ உணவகத்தில் பொங்கல் வடையோ அல்லது பாண்டியன் ஸ்டோரில் சாக்லேட்டோ கிடைக்குமென்பது காரணம்.

மிக அரிதாக ஆயாவும் வராமல், அப்பாவுக்கும் வேலையிருந்து விட்டால், தனியாளாக தல மாதிரி நடக்கவேண்டியதுதான். அப்போதெல்லாம் அம்மா சொன்ன, 'வாப்பா... வழில யார் கூப்டாலும் போவகூடாது... சாக்லேட் குடுத்து, அம்மா கூப்டுராங்கனு கூப்டுவாங்ஞ.. போயிடாத, வீடுவிட்டா பள்ளியோடம், பள்ளியோடம் விட்டா வீடுன்னு வந்துடனும்...சரியாப்பா...' என்பதை நினைவில் நிறுத்திக்கொள்வேன். தனியாகச்சென்றால், தேவர்நகரிலிருந்து பாரதியார் ரோடு வரை குறுக்காக நீண்டிருக்கும் பாதையை பயன்படுத்துவதுதான் வழக்கமாயிருந்தது, ராமையா வீதி சந்திக்கும் இடத்திலிருக்கும் நாடார்கடையில் கமர்கட் வாங்கிக்கடிப்பதும்.

அப்படி தனியே வந்துகொண்டிருந்த ஒருநாள்,

ராமையா வீதி சந்திப்பருகே வருகையில், எப்போதும் அங்கிங்குமாய் அலைந்துகொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தை காணவில்லை. தொலைவிலிருந்தே நோட்டமிட்டேன், நாடார் கடை பூட்டிக்கிடந்தது. "ச்சே..." . இருட்ட துவங்கிவிட்டிருந்தது. நாலைந்து அடி வைத்திருப்பேன், காலில் ஏதோ மாட்டு சாணம் போல... மிதித்துவிட்டேன். 'அடச்சே...என்னடா... இது' கடுப்பாகிவிட்டது. அருகில் கிடந்த மரக்கட்டையோ, டயரோ தெரியவில்லை, வாட்டர் கேனால் ஒரு அடி. கோபம் குறைந்தது போல ஓர் உணர்வு. பாருங்கள், நமக்கு நம் மீதோ அல்லது வேறு எதன் மீதோ உள்ள வெறுப்பை, மற்றொன்றின் மீது நமது அதிகாரத்தை செலுத்துவதன் மூலம் குறைத்துக்கொள்கிறோம் அல்லது குறைந்ததாய் எண்ணிக்கொள்கிறோம்.

வீட்டிற்கு வந்தவுடன் அம்மா, 'வாப்பா... வா.... கையால் கழுவிட்டு சாப்டலாம் வா...., டேய்.... ஷூல்ல என்னடா செவப்பு, என்னத்த மிதிச்சுட்டு வந்த? இங்கிட்டு வா... தேச்சு கழுவி விட்றேன்.'

'அம்மா... அந்த நாடார்கட பக்கத்ல வரும்போது... என்னத்தையோ மிதிச்சிட்டேம்மா....'

'அடப்பாவி மவனே... அங்கிட்டு தானடா தவக்காள பாண்டிய வெட்டி போட்ருக்கதா... சீதாக்கா சொல்லுச்சு...அவென் பொணத்தயாடா மிதிச்சிட்டு வந்து நிக்கிற?'

'அம்மா...அதில்லம்மா...'

'நீ சும்மா...கெட எனக்கு தெரியும், வா... தலக்கி குளிக்க ஊத்தி... மந்திரிச்சு விட்றேன்... அப்பரமா போய் தூங்கு'

மறுநாள் அம்மா வெளியில் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டு எழும்புகிறேன்,

'ஆத்தா... எம்மவே... நேத்து தவக்கள பாண்டி பொணத்த மிதிச்டு வந்துட்டான் ... காச்ச நெருப்பா.... கொதிக்குது'

'மாமி... வேப்பல மாரியாத்தட்ட போயி... மந்திரிச்சிட்டு வா... எல்லாம் சரியாபோயிடும்.'

('அடப்பாவிகளா.... பச்சபுள்ளய நைட்டு தலக்கி குளிக்க ஊத்திட்டு...சாப்பாடு குடுக்காம தூங்கப்போட்டா.... காய்சல் வராம வேற என்னடா வரும்.')

******************************************************************

பழைய ஜெய்ஹிந்துபுரம் இப்படித்தான் இருந்தது. எதற்கெடுத்தாலும் வெட்டு... குத்து... சர்வ சாதாரணமாக நடக்கும். அப்பொழுதெல்லாம், ரிக் ஷா ஆட்டோ காரர்கள் ஜெய்ஹிந்துபுரமென்றால் சவாரி வர மாட்டார்களாம்

Chill: நாங்களெல்லாம் வெளிநாடு சென்றவுடன்தான் ஜெய்ஹிந்துபுரம் அமைதியாக இருப்பதாக அங்கு பெட்டிக்கடை வைத்திருக்கும் பெரியவர் சொன்னதாக தகவல்.

******************************************************************

நினைவுகள் நீளும்…

அடுத்த பதிவில்...ஜெயிலுக்கு போறேன்... ஜெயிலுக்கு போறேன்... ஜெயிலுக்கு போறேன்... அட...நெசந்தாங்க...

அன்பார்ந்த வாக்காள பெருங்குடிமக்களே.. ஒங்க பொன்னான வாக்குகள்ல ஒண்ண எனக்கும் க்ளிக்குங்க......

Apr 26, 2009

அழகிக்கு நேர்ந்த அவமானம்

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினூஉங்கில்லை உயிர்க்கு.

மிக்க உறுதியுடன் காக்கப்பட வேண்டியது அடக்கமாகும். அடக்கத்தை விட ஆக்கம் தரக்கூடியது வேறொன்றுமில்லை.

ஒழுக்கம் விழுப்பந்தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்

ஒருவருக்கு உயர்வு தரக்கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாக போற்றப்படுகிறது.

-திருக்குறள்

*************************************************************

வேறென்ன சொல்ல....

Apr 24, 2009

உங்கள் பதில் என்ன? ஹெச். ஆர். கேள்விகள்

. 23-04-2009 தமிழக அரசு வெற்றிகர வேலை நிறுத்தத்தின் போது, நீங்கள் தனியாக இரு இருக்கை மகிழுந்தை ஓட்டிச்செல்கிறீர்கள். வழியில் ஒரு பேருந்து நிறுத்தத்தில்,

1. ஒரு வயதான பெண், தற்சமயம் முதலுதவி கிட்டவில்லை என்றால்... இறந்துவிடும் தறுவாயில்.

2. ஒரு பழைய நண்பன், முன்பொரு முறை உங்கள் உயிரைக்காத்தவன்.

3. ஒரு பதின்வயது பெண், நீங்கள் இவ்வளவு நாளாக தேடிக்கொண்டிருந்த உங்களுக்கான வாழ்க்கைத்துணை.

மூவரும் நின்றுகொண்டிருக்கிறார்கள்

உங்கள் வாகனத்தில் இன்னும் ஒருவருக்கே இடமுள்ள நிலையில், நீங்கள் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்?

1. சாகக்கிடக்கும் வயதான பெண்னை ஏற்றிச்சென்றால், ஓர் உயிரைக்காத்த புண்ணியம் கிட்டும்.

2. பழைய நண்பன், சந்தேகமில்லாமல், உங்கள் உயிரைக்காத்தவனுக்கு நன்றிக்கடன் தீர்க்கவேண்டிய சந்தர்ப்பம் இதுதான்.

3. எப்படியிருந்தாலும் உங்களுக்கான சரியான வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க இதைவிட்டால் வேறு சந்தர்பம் கிட்டாது.

இருநூறு பேரிலிருந்து ஒருவனாய் நிறுவனத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவன் சொன்ன விடை என்ன தெரியுமா?

வாகனச்சாவியை பழைய நண்பனிடம் கொடுத்து, வயதான பெண்னை அருகிலிருக்கும் மருத்துவமனையில் விடச்சொல்லுவேன், நான் எனது வாழ்க்கைத்துணையுடன் பேருந்திற்காக காத்திருப்பேன்.

சில நேரங்களில், வரட்டு பிடிவாத எண்ணங்களை விட்டுக்கொடுத்தலும் நன்மை பயக்கும்.

; நான் உனது சகோதரியுடன் ஓடிப்போய்விட்டால், என்ன செய்வாய்?

தேர்ந்தெடுக்கப்பட்டவன் சொன்ன விடை; 'உங்களைவிட சிறந்த வாழ்க்கைத்துணை எனது சகோதரிக்கு கிட்டாது ஐயா...'

; (மாணவியிடம்) ஒருநாள் காலையில் எழும்போது, நீ கருவுற்றிருப்பதை உணர்கிறாய், சொல் என்ன செய்வாய்?

அன்றைய தினத்தை மிகவும் மகிழ்ச்சியாக விடுமுறை எடுத்துவிட்டு, எனது கணவனுடன் கொண்டாடச்செல்வேன்.

கேள்வியை ஏன் தவறான கண்ணோட்டத்தில் அணுக வேண்டும்? இது, திருமணமான பிறகு அவளிடம் கேட்கப்படுவதாய் எடுத்துக்கொள்ளலாமே?

; தேர்வாளர் ஒரு காபி வரவழைத்து, உங்களுக்கு முன்பாக வைக்கிறார், கேள்வி ஆங்கிலத்தில் கேட்கப்படுகிறது, 'உனக்கு முன்னால் என்ன வைக்கப்பட்டுள்ளது?'

'டீ' என்று சொன்னவன் தேர்வு செய்யப்பட்டான். ஏன்?

ஆங்கிலத்தில், "U" என்ற அச்சரத்திற்கு முன்னால் வருவது "T" என்ற அச்சரம்.

; ராமபிரான் தனது முதல் தீபாவளியை எந்த இடத்தில் கொண்டாடியிருப்பார்?

சாதாரணமாக நமக்கு குழப்புவது அயோத்தியா? மிதிலையா? இலங்கையா? (ஐயோ.. சொல்லலாம்ல?) என்று...

ஆனால் உண்மையில் தீபாவளி கொண்டாடப்படுவது, "யுவகிருஷ்ணன்" நரகாசுரனை கொன்றதற்காகவே...

தசாவதாரத்தில், ராமாவதாரத்திற்கு பிறகே கிருஷ்ணாவதாரம் வருகிறது. எனவே ராமபிரான் தீபாவளி கொண்டாடியிருக்க முடியாது.

; கடைசி கேள்வியை கேட்கிறார், இந்த மேசையின் நடுப்பகுதி எது?

தேர்வானவன் ஒரு இடத்தில் தோராயமாக கை வைத்துச்சொல்கிறான் ,'இது தான் நடுப்பகுதி' என்று.

தேர்வாளர் கேட்கிறார், 'எப்படிச்சொல்கிறாய்'

'ஐயா, இதற்கு முந்தைய கேள்விதானே கடைசிக்கேள்வி என்றீர்கள்?"

Chill: இது மாதிரியான பதில்களையே தேர்வாளர்கள், தேர்வு செய்யப்படவேண்டியவர்களிடம் எதிர்பார்க்கிறார்கள் (நான் உட்பட...நீ எப்படா..............ன்னு கேக்காதீங்க..... கேள்விப்பட்டதில்லையா? Every dog has a day…நமக்கும் அந்த day வராமயா போயிடும், அடடே.... )

'கட்டத்திற்கு வெளியேயும் சிந்தியுங்கள்'

அன்பார்ந்த வாக்காள பெருங்குடிமக்களே..

ஒங்க பொன்னான வாக்குகள்ல ஒண்ண எனக்கும் க்ளிக்குங்க......

நயன்தாராவும் ஞானும் இன்னபிறவும் பகுதி II

பதிவுலக பிரபலங்களுக்காக ஒரு முன் குறிப்பு;

இது ஒரு மொக்கைப்பதிவு மட்டுமே, யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. எனது இப்பதிவுகளினால் யாருடைய மனதையேனும் காயப்படுத்தியிருந்தேனேயானால், வருந்துகிறேன்.

நீண்ட நாட்களாகவே பதிவுலகின் வெளி வாசகனாயிருந்து, நமக்கெல்லாம் தமிழ் எழுத (லகர, றகர மற்றும் தட்டச்சு) வராது என்றிருந்த போது, நண்பர் கோவி.கண்ணனின் பிழைகளுடன் எழுதுபவர்கள் இனி எழுத வேண்டாம் ? மற்றும் முன்முடிவு ! ஆகிய பதிவுகள்தான் என்னையும் இங்கு எழுதத்தூண்டியது.

இந்தக்கடை விரிப்பினால் எனக்கு பைசா பிரயோசனமில்லை, ஆனாலும் ஒரு அரிப்பு... (விரிப்பு, அரிப்பு.... அதா வருது) அதுதான் என்னை எழுதச்சொல்வது, மற்றபடி எழுத்து என் தொழில் அல்ல. நான் வேறு துறையைச்சார்ந்தவன்.

******************************************************

பின் குறிப்பு; (இத கடைசிலதான சொல்லணும்னு கேட்காதீங்க) இந்த பதிவு பற்றி கண்ணன் என்ற நண்பனிடம் மின்அளவலாவிக்கொண்டிருந்தேன், (ஆள் பேருக்கேத்த மாதிரி, புரிஞ்சிருச்சில? இதுக்கும்மேல விளக்கினா... அடிய அட்டாச்மென்ட்ல அனுப்புவான்) அவன், 'உனக்கு ஏன்டா இந்த தேவையில்லாத வேலை, பைசா பிரயோசனமா ஏதாவது பண்ணுன்னு சொல்லிட்டு... சரி, என்ன தலைப்பு வைக்கப்போறன்னு கேட்டான்,' 'நயந்தாராவும் ஞானும் இன்னபிறவும்' என்று சொன்னேன். அவன் உடனே, டேய்..பார்த்துடா.. ஏற்கெனவே உனக்கு தமிழ் தகராறு, நயன்தாரவும் ஞானும் இன்ன பிராவும் ன்னு டைப் பண்ணிடாத அடி விழுந்திடும்' அப்டின்னான்.

என்ன கருமம்டா இது.. இதுல இவ்லோ சட்டச்சிக்கல் இருக்கறது தெரியாம போச்சே... பேசாம தலைப்ப மாத்திவச்சுடுவோம்னு நினைச்சேன். ஆனாலும் நம்ம குறிக்கோள் (கடை, சரக்கு, ஹிட், பத்து கோடி நோட்..) அதுக்கு இடம் குடுக்கல...

நிற்க! சம்பவத்திற்குள் நுழைவோம்.

இந்த பதிவின் முதல் பாகமாகிய பதிவுலகினர்காக - நயந்தாராவும் ஞானும் இன்னபிறவும் :) வாசிக்க இங்கே சொடுக்கவும்

ஞான் - எனக்கு எப்படியோ மலையாளத்தின் மீது காதல் வந்துவிட்டது. எதனால் அது? தமிழ்நாட்டு எழவு அரசியல் மீதுள்ள வெறுப்பா? அல்லது அங்குள்ள எளிய அரசியல்வாதி, உண்மையான வேற்றுமையில் ஒற்றுமை, இயற்கைச்சூழல், திரைப்படம், அழகான பெண்கள் இன்ன பிறவற்றின் மீதுள்ள ஈர்ப்பா? தெரியவில்லை. ஆனால் காதல்.. கேரளத்தின் மீது பற்று ஒரு ஈர்ப்பு.

மலையாளம் கற்கத்தொடங்கிய ஆரம்பக்காலங்களில் ஏசியா நெட் டில் வரும் தொடர்களையும், விளம்பரங்களையும் ஒன்றும் புரியாவிட்டாலும் ரசித்துக்கொண்டிருப்பேன். அந்த பேச்சுநடை என்னை கவர்ந்தது. குறிப்பாக பெண் குரல். அப்படியிருக்கும் பொழுது முதன் முதலில் நேரில் பேச வாய்ப்புக்கிட்டிய இச்சந்தர்பத்தை நழுவ விட மனமில்லாமல் (மொழியின் மீதிருந்த காதல், தவறாக ஏதும் நினைக்கவேண்டாம்) நீட்டிக்கொண்திருந்த போது,

என் மனைவியின் குரல், "ஏங்க, ரொம்ப நேரம் இங்கயே உக்காந்து பேசிட்டிருந்தாச்சு, வீட்ல இன்னும் சாப்பாடு ரெடி பண்ணல.. வாங்க போகலாம்" "

அப்போதுதான் உரைத்தது. மாலை நேரம் வந்தோம், இரவு நெருங்கிவிட்டதென்பது. 'சரிம்மா...வா, போகலாம்'

அவள் பக்கம் திரும்பி, 'அப்பச்சரி, ஞங்களு போகுந்நு... ஒருபாடு சமயாயி, அவிட கய்கானொன்னு வச்சிட்டில்ல'

அதற்கவள், 'ஒ.. இவிடதன்ன கயிகாமாயிருந்நு, ஞானு மறந்நு போயி... சாரி எட்டோ...'

'எய்......அதொன்னு கொழப்பல்ல, இநி சமயுண்டுல்லோ' என்று நானும் விடைபெற்றேன்.

விடிவதற்குள் அவள் பயொடேடா,

ஊர் த்ரிசூராம், அங்கு கோயில்களில் நடக்கும் த்ரிசூர் பூரம் மிக பிரசித்தி, அதில் கலந்துகொள்வதற்காகவே யானைகள் ப்ரத்தியேகமாக வளர்க்கப்படுகின்றன. அந்த யானைகளில் அவள் பகுதி யானை தான் முதல் பரிசு பெறுமாம். பி. ஃபார்ம் படிப்பு. கணவன் இங்கிருப்பதால், இங்குள்ள மருத்துவமனையில் வேலை கிடைத்தால், இருவரும் இங்கேயே நிரந்தரமாய் தங்கிவிடலாமென திட்டமாம். ஆனால், பி. எஸ். ஸி நர்ஸிங் முடுத்திருந்தால், எளிதில் வேலை கிடைக்குமெனவும். நர்ஸூக்கான வேலை வாய்ப்புதான் உலகெங்கும் அதிகமாக உள்ளதாகவும், மற்றும் பல இன்ன பிறக்களும் சொல்லிக்கொண்டிருந்தாள், அவையனைத்தையும் சொல்லலாமென்றால்..... அதற்குள், விடிந்துவிட்டது. இன்று அலுவலகம் செல்லவேண்டும்.

அலுவலகம் கிளம்பிக்கொண்டிருக்கையில், 'ஏம்மா...உனக்கு போரடிச்சுச்சுன்னா... பக்கத்து ஃப்ளாட்ல போயிருந்துக்கோ...டைம் பாஸாகும்' என்றுதான் சொன்னேன்.

'உங்க வேலைய பாத்துகிட்டு போங்க, எங்களுக்கு தெரியும்...என்ன செய்யணும்னு...நாங்க பாத்துக்குறோம்...... &@#$%&# பொரித்து தள்ளிவிட்டாள்.

ஆரம்பத்துலயே ஆரம்பிச்சுட்டாங்ஞலா... என நினைத்துக்கொண்டு, அலுவலகம் வந்துவிட்டேன்.

அவுட்லுக் திறந்தால் முதல் மடல், என் மனைவியிடமிருந்து வந்து வழுகிறது. திகிலுடன் திறந்தேன், '

அன்புள்ள கணவனுக்கு,

நீங்கள் அடுத்த ஃப்ளாட்டுக்கு போவதோ, அந்த பெண்ணிடம் பேசுவதோ எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. (அவளும் அவள் மொகரகட்டையும்... எப்படி இளிச்சு இளிச்சு பேசுகிறாள். இந்த மலையாளி பொண்ணுங்களே இப்படித்தான், யாரையாவது வலைச்சு போட பாப்பாளுக...)தயவுசெய்து இனியும் அந்த பக்கம் செல்லவேண்டாம். மீறிச்சென்றால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இப்படிக்கு,

அன்புள்ள மனைவி,

அதன் பிறகுதான் தெரிந்துகொண்டேன், நம் பெண்களிடம் மலையாள பெண்களுக்கு இருக்கும் மதிப்பை?.

இனியும் அந்த பக்கம் செல்ல நான் என்ன மடையனா? அதோடு அந்த பெண் அங்கிருப்பதை மறந்துவிட்டேன்.

நயன்தாரா - என்னமோ தெரியலங்க நயன்தாராவ பிடிச்சிருந்துச்சு. ஒரு வா......ர்த்த சொல்.....ல ஓடி வந்தாங்களே.... அப்பத்லருந்து. என்ன காரணம்னு சொல்ல தெரியல, ஆனா பிடிச்சிருந்துச்சு.

நான் அதிகமாக திரைப்படம் பார்ப்பதில்லை. நல்ல பாடல்கள் ரசிப்பேன். விதிவிலக்காக நயன்தாரா ஆடிய சில குப்பை பாடல்களும். அந்த வரிசையில், சத்யம் ல் ஒரு நயன்தாரா பாடல் வருமே அதுகூட.. அதில தான் ஆரம்பித்தது வினை,

ஒரு நாள் அந்த பாடலுக்கு நயன்தாரா ஏசியா நெட் டில் ஆடிக்கொண்டிருந்தாள், நானும் பழக்கதோஷத்தில், 'நயன்தாரா.... ச்சும்மா..... சொல்லக்கூடாது...' என்று சும்மா சொல்லிவிட்டேன். டங்ங்ங்ங்ங....பின்னாலிருந்து விழுந்தது மண்டையில் கொட்டு. 'என்னைய பக்கத்ல வச்சுக்கிட்டே நயன்தாரா.... ச்சும்மா..... சொல்லக்கூடாதா... அப்ப நான் இல்லாதப்ப... என்னல்லாம் செஞ்சிருப்பீங்க? ம்ம்ம்ம்ம....' அப்பா அப்படி ஒரு முறைப்பு... அதற்கு முன் எப்போதும் பார்த்ததில்லை.

அடி வாங்கறது நமக்கென்ன புதுசா? இதெல்லாம் சகஜம்பா....

பிறகொருநாள், நயன்தாரா பல்லேரிக்கா விற்கும் பாடல்... பழைய அடி மறந்துபோய், 'ஐ... நயன்தாரா' என்று கத்திவிட்டேன். என் மனைவி ஒன்றும் சொல்லவில்லை, எனக்கு ஆச்சரியம். அனுமதி கிடைத்துவிட்டதோ?...

அடுத்த பாடல், கா.....ற்றின்.... மொழி....ஒலியா... இசையா...

பின்னாலிருந்து சத்தம் வந்தது, 'ஐ.. ப்ருத்வி ராஜ்'

******************************************************

ஐயா... யாரவது, 30 நாளில் மலையாளம் மறப்பது எப்படி ன்னு புத்தகமோ, பதிவோ... போட்டிருத்தால்... தயவுசெய்து லிங்க் அனுப்பிவைக்கவும்.

******************************************************

அன்பார்ந்த வாக்காள பெருங்குடிமக்களே..

ஒங்க பொன்னான வாக்குகள்ல ஒண்ண எனக்கும் போடுங்க...

Apr 22, 2009

பதிவுலகினர்காக - நயந்தாராவும் ஞானும் இன்னபிறவும் :)

நயந்தாராவும் ஞானும் இன்னபிறவும் :)

நயந்தாரா - அறிமுகம் தேவையில்ல, அதனால அத பத்தி அடுத்த பத்தில பார்ப்போம்,

ஞான் - அதாங்க நான் றத மலையாளத்தில அப்டிதான சொல்றாங்ஞ... அதாவது என்னையபத்தி இரண்டாவது பத்தி.

இன்னபிற - அதென்ன இன்னபிற, இன்னாபிற? எல்லா பதிவுலக பிரபலங்கலும் இந்த தலைப்பை வச்சு பதிவு போட்டாச்சு. அப்டினா? இந்த இன்னபிறவ தலைப்புல போட்டாத்தான்

எங்க கடைலயும் கூட்டம் சேரும்னா...

சரக்கு விக்கும்னா...

ஹிட்ஸ் வாங்க முடியும்னா...

சூடான இடுகைல வர முடியும்னா...

பிரபலமாக முடியும்னா… (ஐ சொல்லியாச்சு)

தமிழில் பத்து கோடி ஹிட்டுகளை கடந்த முதல் தனிநபர் வலைப்பூவை மேய்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்! ன்னு நோட் போட முடியும்னா...

இன்னபிற முடியும்னா... முடியும்னா... முடியும்னா...

நானும் ஆட்டத்துக்கு ரெடி... (ஸ்..ஸ்.. அப்பா...இப்பவே... மூச்சு முட்டுதே)

இன்னுமொரு இன்னபிற - என் மனைவி குவைத் வரும்வரை நிறுவன வதிவிடத்தில் காலந்தள்ளிய போது மலையாளம் சம்சாரிக்காம்படிச்சு (அட.. பேச கத்துக்கிட்டேங்க). ஐந்து மாதம் முன்பு மனைவியும் மூன்றுமாத ஃபர்ஹானும் குவைத் வந்தபோது நானும் ஒரு ஃப்ளாட் எடுக்க வேண்டியதாப்போச்சு.

எங்க ஃப்ளாட்டுக்கு பக்கத்து ஃப்ளாட்ல ஒரு மலையாள பெண் கணவனுடன் தங்கியிருந்தாள். அவனுக்கு தமிழ் தெரியாது, மலையாளமும் ஹிந்தியும் தெரியும். எனக்கு தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் இன்ன பிறவும் தெரியும். (நம்ம பெருமைய நாமதான் சொல்லணும், கடைல வியாபாரம் சூடுபிடிக்கும் வரை)

நான் அவர்களை அறிமுகப்படுத்துவதற்காக அவர்களுடைய ஃப்ளாட்டிற்கு என் மனைவியை அழைத்துச்சென்றேன். அங்கு இவள் பேசும் தமிழ் அவளுக்கு விளங்கவில்லை, அவளது மலையாளம் இவளுக்கு விளங்கவில்லை, நான்தான் இருவருக்கும் மொழிபெயர்பாளனாக இருக்க வேண்டியதாயிற்று. இவளது மொழியை அவளுக்கும், அவளது மொழியை இவளுக்குமாய் பெயர்த்துக்கொண்டிருந்தேன். இதைச்சொல்லியே ஆக வேண்டும், (மரபு) கேரளா பெண்கள் இயற்கையிலேயே அழகும் அனைவரிடமும் தன்மையாய் சிரித்து பேசும் தன்மையும் கொண்டவர்கள். சிறிது நேரத்தில் அவளின் கேள்விக்கான என் மனைவியின் பதிலையும் நானே நேரடியாய் சொல்ல ஆரம்பித்துவிட்டேன். விளைவு???

நிற்க...

இது ஞான் -

இப்பவே... கண்ணகெட்டுதே...

ஞானும், நயந்தாராவும் நாளை.... என்ன சொல்றீங்க?

மதுர கைபுள்ள காமெடிக்கு கால் இல்ல...பாகம் 02

இக்கதையின் முதல் பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும்

'சர்ரா... கெளம்புடா எ கூட... இப்பவே சாருக்கான போய் பாப்போம்.'

'அண்ணே... வேணாணே...அண்ணே... அண்ணே... ஓடியடையாதுண்ணே... அண்ணே...

எனக்கு யாரையு தெரியாதுண்ணே...'

'தல. போ. தல... போ....போ.... டேய், தூக்குடா... தலய புடிடா... கால புடிடா...'

ஸ்கார்பியோவில் ஏத்திவிட்டு, கதவை அடைக்கிறார்கள்.

ஸ்கார்பியோ கதவு திறக்கப்படுகிறது. சாருக்கான் வீட்டு வாசல், சாருக்கான் ஓடி வருகிறார், 'கைப்புள்ள, எங்க இவ்லோ தூரம்? சொல்லியிருந்தா நானே வந்திருப்பேனே... வா வா என்ன விசயம் சொல்லு'

அண்ணே அதிர்ச்சியாகிறாப்டி, கூடவே கைப்பள்ளயும். அப்ரம்... கைப்புள்ள சிட்சுவேசன சமாளிச்சு அங்கருந்து விட்ரா….. ஜூட்.......

போர வழில அண்ணே, 'ஏன்டா கைப்புள்ள, சாருக்கான எப்புர்ரா ஒனக்கு தெரியும்?'

'க்..க்..க்...நான்தான் சொன்னேன்லண்ணே.... நீ நம்பல..'

அப்பயும் அண்ணுக்கு சின்ன டவுட்...ஏதாவது கொன்டக்க மன்டக்க உள்வேல பண்ணாலும் பண்ணிருப்பானோனு.... 'வாடா கையி.. ஜனாதிபதிய போயி பாத்துட்டு வந்துடலாம்' (அண்ணே மனசுக்குள்ள ரெண்டு திட்டம், ஒன்னு, அவனுக்கு ஜனாதிபதிய தெரிஞ்சிருந்துச்னா அடுத்த ஜனாதிபதிக்கு தம்பேர சிபாரிசு பண்ண சொல்லிடலாம்தெர்லன்னா, ஏரியாகுள்ள அலப்ர பண்ணதுக்கு... கைபுள்ளக்கு அதோ….ட ஆப்பு.)

(கை க்கும் உள்ளுக்குள்ள ஒதரல்தான், ஆனா...வெளிய காட்டிக்காம... என்ன வந்தாலும் பாத்துக்கலாம்னு...) சரிண்ணே, வாபோலாம்...

ஜனாதிபதி வீட்ல, பாதுகாப்பு சோதனல்லாம் முடிச்சுட்டு...

வீட்ல ஒக்காந்துருக்காங்க... (கைக்கு ஏற்கனவே பேஸ்மட்டம் வீக்ல... கால்லாம் நடுங்குது....)

ஜனாதிபதி வருகிறார், ஹே... கைபுள்ள.. வா வா எப்டி இருக்கீங்கோ? (உதவியாளரிடம்) கைபுள்ளக்கு சாய் லேகிஆனா..., 2 நாள் தங்கியிருந்துட்டு போ..கைபுள்ள, தேர்தல் நேரம்ல நான் கொஞ்சம் முக்கியமான வேலையா வெளிய போறே... ஒடம்ப பாத்துக்க கைபுள்ள... மெலிஞ்சுட்டே போற... சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட

கைபுள்ள அண்ண மொரச்சு பாக்குது...அண்ணே டர்ஸ் ஆராப்டி...

கைபுள்ளக்கு எப்பவும் மூல மட்டும்தான் வேல செய்யாது, அதோட சேர்த்து இப்ப கையும் வேல செய்யல காலும் வேல செய்யல..

அண்ணே ஆஃப் ஆனத பாத்தவொட்ன, கைபுள்ள ஓவரா ஏற ஆரம்பிச்சுடுச்சு...

அண்ணே நீ என்னய போயி சந்தேகப்பட்டியேண்ணே... சர்ணே இப்ப சொல்லு.. ஒனக்கு வேற யார பாக்கனும்? சொல்ணே... இப்பசொல்லு..இப்பசொல்லு..இப்பசொல்லு..

அட...சொல்லு...சொல்லு...சொல்லு...

அண்ணே.. டக்குனு, 'ஒபாமா' ன்டாப்டி... (அண்ணனுக்கு கொஞ்ச நாளாவே ஒலக அரசியல்ல ஒரு கண்ணு)

கைபுள்ளக்கு தெகிரியம், நம்மள மதுர ஆத்தா மீனாச்சி தான் காப்பாத்துறான்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டு... வாண்ணே வண்டிய எடுணே போகலாம்னுச்சு...

அண்ணே, 'கைபுள்ள மாட்ணடா மவனே.... ஒபாமா அமெரிக்கால இருக்காருடா' னுட்டு...கைபுள்ளய ஃப்ளைட்ல ஏத்தி, அமெரிக்கால போய் எரக்கி விட்டாப்டி.

கைபுள்ள அசரல, 'இவ்லோ தூரம் ஒத்தாச பண்ண ஆத்தா இனியும் பண்ணுவான்னு' ஒபாமாவ பாக்க போனா...

அவரு முக்கியமான குடியரசு கட்சி மாநாட்ல இருக்காப்டி. நம்ம ஊரு மாரி அங்க மேடைல கூட்டமால்லாம் இருக்க மாட்டங்ஞலாம்ல... ஒபாமா மட்டும் தனியா நன்னுதான் பேசிட்ருக்காப்டி.

லச்ச கணக்ல சனம் கூடி நின்னு பேச்ச கேட்டுட்ருக்கு.

கைபுள்ளயும் அண்ணணும் கடேசில நிக்கிராங்ஞ.....

கைபுள்ள ஓசிக்கிது....'இப்டி நின்னுட்டேருந்தா....ஒன்ன்னும் ஓடியடையாது, நம்மதான் ஏதாவது செஞ்சாகனும்'

'அண்ணே நீ இங்கயே நில்ணே, நான் ஒபாமா பக்கத்ல போயி கைகாட்றேனுட்டு கெளம்பிடுச்சு.

அப்டியே வெரசா போயி... அங்கிட்டு நின்னவேன் கைய கால புடுச்சு, கவுட்டுக்குள்ள போயி...... மேட ஏறிடிச்சு.

"கைபுள்ள ஒபாமா பக்கத்ல நன்னு கைய காட்டுது."

கைபுள்ள அண்ணே பக்கம் பாத்து ஒரு லுக் விடுது, (அந்த லுக் ல அண்ணணுக்கு லக் இல்ல, அன்-லக்கிலுக்)

கொஞ்ச நேரத்துல அண்ணே மயக்கம்போட்டு விழுந்துட்டாப்டி.

கைபுள்ள (பாசக்கார பயபுள்ளைல) ஓடிவந்து தண்ணிய கிண்ணிய தெளிச்சு... அண்ணன எழுப்பிவிட்டு கேட்டுச்சாம், 'ஏண்ணே இப்டி பண்ணிபுட்ட... அப்டி என்ன புதுசா பாத்துப்புட்ட? எப்பவும் நடக்றது தானணணே?' என்று கேட்க,

அண்ணே சொன்னாப்டி, 'கைபுள்ள, நீ மேடல போயி கை காட்டுனத கூட தாங்கிட்டேன்டா.... ஆனா, என் பக்கத்ல நன்ன ஒருத்தன் கேட்டான், 'ஆமா... கைபுள்ள பக்கத்ல நின்னு ஒருத்தன் மைக்ல பேசிட்ருக்கானே, யாரவன்?' னு...

Apr 21, 2009

மதுர கைபுள்ள காமெடிக்கு கால் இல்ல...

வர வர கைப்புள்ளயோட அலப்பர ஏரியாக்குள்ள தாங்க முடியாம போச்சு. எப்ப பார்த்தாலும் நாங்க போகாத ஊரில்ல பார்க்காத ஆள் இல்ல. திருப்பரங்குன்றம், திருமங்கலம்....... இந்த ரேஞ்சுக்கு நாங்கல்லா.......... ன்னு அழிம்பு பண்ணிக்கிட்டிருந்துச்சு. லேட்டஸ்டா...இப்ப, அரசியல் ஆர்வம் வேற வந்துடுச்சா?, டேய்... நேத்து வந்த பயபுள்ள, காச காட்டி சீட்ட வாங்கிபுட்டான். நாம பரம்பர பரம்பரயா.. கட்சிக்கு உயிர குடுத்துக்கிட்ருக்கோம். வட்டத்ல கூட ஒரு பதவி தர மாட்டேங்கிராய்ங்க......

உடனே கைப்புள்ளயோட கையாள் வாலு, 'தல...( காதுக்குள்ள ) ஒனக்கு ஏது தல பரம்பரல்லாம்? (சத்தமா) நீ ஒரு வார்த்த சொல்லு தல... அவன உண்டு இல்லனு பண்ணிருவோம்..'

"ஆமா.. போங்கடா...டுபுக்குகளா..., ஆள பாத்தா.. நல்லவன் மாதிரியேயேயே தெரியிராய்ங்க..ஆனா உடம்பெல்லாம் வெசம். அவன்ட போய்.. என்னய போட்டு குடுத்து, கறவ மாடும் பத்தாயிரமு வாங்றதுக்கு... _____ மூடிட்டு போங்கடா... எங்கொய்யால."

'தல சூடாயிடுச்சு... பக்கத்ல யாரும் நிக்காத... கூட்டம் போடாத.. போ...போ...போய்ட்டேரு.....'

அந்த நேரம் பாத்து...நம்ம கைப்புள்ளயோட தல, மதுர சிங்கம் 'கஞ்சா கெஞ்சன்', ஸ்கார்பியோல வர்ராப்டி. "டேய்ய்ய்ய்.... என்னடா... இங்க... சத்தம்..."

'அண்ணே... ஒண்ணுமில்லண்ணே... நீங்க போங்கண்ணே... நா பாத்துக்கிறேண்ணே... டாய்....எவன்டா... சத்தம் போட்டது..... ' இது நம்ம தல.

உடனே வாலு தலட்ட, 'தல நீதான் சவுன்டு குடுத்தன்னு ஒத்துக்க தல, என்ன செஞ்சிடுவாங்ஞனு பாத்துடுவோம்' 'அண்ணே எங்க தலதான்ணே 'நாங்க போகாத ஊரில்ல... பார்க்காத ஆள் இல்ல' னு சவுன்டு குடுத்தது, இப்ப என்னாங்குறீங்க?' என எகிற...

கைப்புள்ள மனசுக்குள்ள, 'அட வென்றுகளா..... இப்பிடி மாட்டிவிட்டுட்டாங்ஞ..."

உடனே பெரிய தல கோவமாயிட்டாப்டி, நம்ம கைப்புள்ளய பார்த்து, ' ங்கொய்யால...வாடா இங்க.... பெரிய இவனா நீ.... ஒனக்கு யார்ரா தெரியும், சொல்ரா..., சாருக்கான் தெரியுமாடா?

நம்ம கைப்புள்ளக்கி தேட்டர்ல விக்ற 'பாப்கான' விட்டா வேற எந்த கானயும் தெரியாது.

கைப்புள்ள பதில் சொல்றதுக்கு முன்னாடி வாலு உள்ள வந்துட்சு, ' எங்க தலக்கி ச்சார்கான்லருந்து பாப்கான் வரக்கும் எல்லா கானையு தெரியும்' அந்த கான்ட போய் தல பேர சொல்லிபாருண்ணே, பயந்து நடுங்குவாப்டி'

'சர்ரா... கெளம்புடா எ கூட... இப்பவே சாருக்கான போய் பாப்போம்.'

'அண்ணே... வேணாணே...அண்ணே... அண்ணே... ஓடியடையாதுண்ணே... அண்ணே...

எனக்கு யாரையு தெரியாதுண்ணே...'

அப்பறம் என்னாச்சுனு.. கைபுள்ளய ஃபாலோ நாளைக்கு சொல்றேங்க...

இரண்டாம் பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும்